உயிரும் உடலும்
சேர்ந்த கூடு
உறவோடு வாழத்தானே தேன் கூடானது வீடு...
கல்லும் மண்ணும் சீமெந்தும்
கலந்த கலவை கல் வீட்டில்
மாடி யன்னலும் சொக்கா சோக்கில்
சொக்கிப் போய் நிற்கிறது
சந்தோசம் கொண்டு..
லெட்ச்சியக் கனவென
லெட்சனை பொறித்திருக்கும் வீடு
கட்டி முடிப்பதற்குள்
காடுவரை செல்லும் வயசை
கடனாய் வாங்கிவிட்டது
சீதணச் சீர் வரிசையாம்
கேட்கிறான் சீமைத் துரை !
இது யார் போட்ட கணக்கு ?
வர்ணங்கள் பூசப்பட்ட வீட்டுக்குள்
ஒவ்வொரு கற்களிலும்
குருதியால் எழுதப்பட்டிருக்கிறது
உளைப்பாளியின் வியர்வைத் துளியின்
விலை என்னவென்று..
சேலை நிழல் கட்டி தேய்ந்த வாழ்விருந்தும்
சேரிக் குடிலின் சேதார வாழ்விருந்தும்
செந்தாமரைகள் கை கொட்டிச் சிரிக்கின்றன
வீட்டை கட்டிய தாய் தந்தையரை
முதியோர் மண்டபத்தில் கண்டு.!
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...