உலைக் களம் ஆற்ற கிளைக் கரம் நீட்டும்
நிழலடி தரு முற்றத்து வேம்பே...இலையோ தழிரோ
இன்றுனக்குச் சொந்தம் இல்லை
உதிர் காலத் துயர்க் கோலத்தில்
உன் ஊடல் தீயுதடி
ஊர் கோலம் போகும் கார் மேகக் காதலன்
அதோ கண் யாடை செய்கின்றான் கலங்காதே
தொட்டணைத்த காதலன் தொட்டணைத்திட
வருகிறான் மழையாய்
உன் சடைக் கூந்தலை சீவி முடித்து
சந்தோசச் சதங்கை இடு
இருள் சூழ்ந்தாலும்
விழிகள் வேலை நிறுத்தம் செய்வதில்லை..
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...