அஞ்சல் பெட்டி..
என்னவனுக்கு நான் எழுதிய அன்பு மடலை
முதலில் படித்தது நீதானே
என் சுவாசத் துடிப்பை ஸ்கான் செய்து
அவனது முகவரி சேர்த்ததும் நீதானே
ஊரில் எத்தனை பொய்யும் பிரட்டும்
உன்னை அல்லால் அது யாருக்குத் தெரியும்
இருந்தும் நீ சொல்வதில்லை எதையும்
சொப்பன மாயைகள்
உன்னை தொட்டதில்லை
சொந்தம் உள்ளோரிடமே
அஞ்சலை சேர்க்கின்றாய்
நின்ற இடத்தில் நீ நின்றாலும்
அன்றும் இன்றும் நீ சிகப்பு...
Kavignar Valvai Suyen
''...சொந்தம் உள்ளோரிடமே
RépondreSupprimerஅஞ்சலை சேர்க்கின்றாய்
நின்ற இடத்தில் நீ நின்றாலும்
அன்றும் இன்றும் நீ சிகப்பு...'' mmmm
உண்மைச் சேவகன்..
நன்று..நன்று..
வேதா. இலங்காதிலகம்.
நன்றி சகோதரி வேதா - சிகப்பு சேவகன் என்றாலும் சொந்தங்களிடம் பந்தம் காட்டும் நல்லவன் நீ.. என அஞ்சல் பெட்டிக்கு அழகிய விளக்கம் தந்தீர்கள் நன்றி..
Supprimer