பூந்தென்றல்..
தென்றலின் சுகத்தைத் தொட்டதில்லை நான்
தென்றல் ஒரு நாள் என்னைத் தொட்டது
உணர்ந்தேன் அதன் அன்புப் பரிசத்தை.. ..
கொடும் சூறாவளியாய் வரும் காற்றா இது
சுடராய் இருந்தது, ஆனால் சுடவில்லை என்னை
அறிவுத் தென்றலே ஆகாசம் முதல் ஆழிவரை
அனர்த்தம் செய்கிறாய் என
பல புகார்கள் உன் பெயரில் இருக்கிறதே
ஏன் எனக் கேட்டேன்... ..
குற்றம் அற்ற காற்றென்று என்னை நான்
நிரூபனம் செய்யமாட்டேன்..
மனிதனே,
என்னை சுவாசமாய் உட்கொள்கின்றான்
உள்ச் சென்று வெளி வருகிறேன்
தாங்க முடியவில்லை மனிதனுக்குள்
அத்தனை அசிங்கம்
அதனால் கொதிப்புருகிறேன் கொந்தளிக்கிறேன்
கோபத்தை கட்டுப்படுத்தி மையத்தில்
பூட்டிவிடுகிறேன்
இருந்தும் என் பொறுமையின் எல்லை
என்றோ ஒர் நாள் என்னை தாண்டிச் செல்கிறது
சாந்தத்தை தொலைக்கும் தான்
சந்தணம் என
எப்படிச் சொல்வேன் என்றது என்னிடம்
கூப்பிட்ட குரலுக்கு கூட்டுறவில் கை கோர்த்த
நட்புடை நற் தென்றலே
கலக்கம் தெளிந்து கண் மலர்ந்தேன்
என்னை மன்னித்துவிடு என்றேன்
புன்னகை உதிர்த்து கண்ணகை செய்து
கடந்து போகின்றது என்னை பூந்தென்றல்..
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...