dimanche 8 septembre 2019

நிழல் தரு நியங்கள் !!!


தளர்ந் துளன்று தனிமையில் வீழ்ந் தழுது
துணை என் நிழலையும் துலைத்து விட்டேன் 
தாகம் தானோ நிழலுக்கும் 
தரை மீது வீழ்ந்திங்கு புன்னகை இழந்ததே

தேடலில் சோகம் தாங்கொணா பாரம்  
நிலை இல்லா வாழ் வெனில் 
தெரு வீதி போதும் என 
புறண்டழும் நிழலை
மடி மீது வா என மனம் உகந்தேன்
முடியவில்லை
உச்சி வெய்யிலே உன்னால்
என் நிழலுக்கும் வேர்க்கிறதே

கூட்டுக் கதவை நான் திறக்க 
என் இதயக் கதவை இல்லம் திறக்க 
நாள் காட்டியின் இறுதி நொடிகள் 
நாளைய நிழலாக 
அத்தியாயங்கள் புறட்டி 
தட்டுகின்றன மனக் கதவை

புன்னகை இல்லா வாழ்வில் 
பூப் பெய்தும் பூகம்பமே
பூக்கள் பூமியில் பாரம் என்றால்
வாழ்வ் விருளில் வாழ் நாள் பொய்யில் 
பெண்மை தனை மடந்தை கொள்ளும் 
மானிடரே இன்னும் இவ்வுலகில் 

பொன் பொருள் சதம் இன்றி
இன்னுயி ரெலாம் வாழ 
இறைவா வரம் கொடு

பாவலர் வல்வை சுயேன்

vendredi 19 juillet 2019

நாணல் !!


பொய்யிலே புனைந்த வாழ்வு 
மெய் அன்பிலே நீறாச்சு 
பொய்யும் மெய்யும் புலர்விருக்க
புடம் போட்டே மின்னுகிறது தங்கம்

பாவை என் முகம் பார்த்து
பால் நிலா ஒளிந்திருக்க
பார்த்தவன் மூடன்
பகலில் விளக்கெடுத்து வருகின்றான்

பாலுக்கும் கள்ளுக்கும் பேதம் புரியவில்லை
யாரை நோவேன் யார்க் கெடுத்துரைப்பேன்
நதி வழி சென்றே நாணல் ஆனேன்
பெண்ணுக் கழகு நாணம் என்றே 
பேதமை செய்கின்றார் 
பேதை என் செய்வேன்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 17 juillet 2019

அன்பும் அற நெறியும் !!!


அறிவுக்கு வேலை கொடு - அன்றேல்
அறியாமை உன்னை தின்னும்
அறியாமையின் ஆணிவேர் எங்கே என தேடினேன்
அது நான்தான் என கண்டு வெக்கித்துப் போனேன்

எண்ணக் கருக்கள் என் சிந்தனையில்
எங்கெங்கோ முளைத்திருந்தன
அதை அள்ளிப் பெருக்காது விட்டதினால்
தூர் வாரா நீர் குவளையத்தில் துர் நாற்றம் வீசிட
எத்தனையோ வெடிப்புக்கள் எனக்குள்ளே

மூளைச் சலவை அவசியம் என்கிறார் மருத்துவர்
சொட்டு நீலம் போட்டுத் துவைத்தால்
மின்னல் அடிக்கும் வெண்யாகும் என்கிறார்கள்
அமிலம் நிறைந்த அலம்பலான மூளையை
இனி என்ன போட்டு துவைத் தெடுப்பேன்

ஆயிரம் கோயில் சாமிக்கு இருந்தும்
அவனை நேரில் காணவில்லை
இரங்கல் மனு எழுதிப் போட்டேன், இறைவனுக்கு
இத்தனை காலம் எங்கிருந்தாய் என
எழுதிவிட்டான் என் மனுவுக்கு

மந்திரமான சுந்தரர் நீறெடுத்து
மங்கலக் குங்குமம் சேர்த்து குளைத்து
அமிலம் கொண்ட அங்கம் எல்லாம்
சிந்தை குளிர சிவாய நம என
எழுதினேன்
அபாயம் இனி இல்லை என
ஆட்கொண்டான் இறை என்னை

அறிவும் ஆற்றலும் அரு மருந்தல்ல
அது அள்ளக் குறையா களஞ்சியமே
அற்பணிப்புக்கள் இல்லையேல்
அன்பும் அற நெறியும் உரித்தாவதில்லை

பாவலர் வல்வை சுயேன்

vendredi 12 juillet 2019

கரிக்கின்றது உப்பு !!!


கரைகளை தொட்டுச் செல்லும் அலையே
நீ கடலிடம் சொல்லும் சேதி என்ன
என் மொழி நீ அறிவாய் 
உன் எண்ணம் நான் அறியேன்
வான்மழை தரும் நன்னீர் மேன்மை உற்றும்
மானுடன் சிந்தும் கண்ணீர் கரையை
தொட்டுச் செல்லும் உன்னால் 
உப்புக் கரிக்கிறது கடல்

நேற்றைய காற்றில் வீசப்பட்ட புழுதி நான்
கால சமுத்திரத்தை கடந்திட நீந்துகிறேன்
முடியவில்லை என்னால்
கன்னத்தில் வழியும் சங்கமத் துளியில்
பாவலர் வல்வை சுயேன்

mardi 2 juillet 2019

சயன மாளிகை !!!


 அழகே உன்னை எழுதும் மனசை 
இமைகளின் இறகுகள் வென்றதடி
அன்பு முத்திரை பதித்து பகிர்ந்திட
எழுதும் கோல் எழுதிய தென்ன 

சந்தங்கள் எழுந்தன சங்கீதம் கேட்கவில்லை 
சுரங்கள் பிறந்தன புல்லாங்குழல் ஓயவில்லை 
சயன அறை சங்கீதத்தில் 
சாரீர ஊஞ்சலில்
நடு ராத்திரி நகலாச்சு 
புலர்வின் ஒலியில் கதிரவன் எழுந்தாச்சு

முடிந்தது சிவராத்திரி ஒன்றுதானே
நவராத்திரி ஒன்பது இரவுகள்
ஒன்றின் பின் ஒன்றாய் 
கண் சிமிட்டி அழைக்கும் போதில்
இமைகளின் இறகால் மை எடுத்து வா
அழகுச் செல்வம் வரைவோம் அப்போ 
சயன மாளிகை திறக்கும் கதவு

பாவலர் வல்வை சுயேன்

jeudi 30 mai 2019

மாணவன் நீ !!!


மகரந்தக் கூடல் நடுவே வண்டுகளின் நடனம்
பூக்களுக்கு பிடித்த முத்தம்

கலைக் கூடத்தில் சிற்றுளியின் நடனம்
சிற்பிக்கு பிடித்த முத்தம்

பரீட்சை எழுதும் மாணவனே
நீ படிக்காத பக்கங்களில்
எஞ்சிக் கிடக்கின்றன முத்தங்கள்

படித்துக் கொடு நானும் படிக்கிறேன்
பக்கங்கள் எத்தனை படித்திடல்லாம்
ஆனாலும் மாணவன் நீ
என் அனுமதி இன்றி
புதிய பக்கங்களை புரட்டிவிடாதே

எழுத்தாளன் கொடுத்த பேனா முத்தங்களால்
முழுமை பெற்று ஆடை அணிந்திருக்கிறேன்
கற்பு என் காப்பகம் பொது உடமை அல்ல

பாவலர் வல்வை சுயேன்

mardi 28 mai 2019

நாண மகள் !!!


கங்கை நீ கண்ணாடி விம்பமடி
நாணல் எனும் நடை பயின்று
நல் வீணை மீட்டுகிறாய்
விரல் கோதும் மலை வீழ்ந்து
சுரம் ஏழும் எழுதுகிறாய்
மாதெனும் பூமி நாணம் உற்று
ஆடை கட்டுகிறாள் உன்னால் 

கோல விழி வாளினை - விஷ
விழிகள் வீழ்த்தும் என்றால்,
எடு நீயே உனக்கும் ஓர் ஆரத்தி
அது சுடு தீபம் அல்லாமல்
சுடு குழலாய் இருக்கட்டும்
உன் இன்பக் கனவுகளை தனதாக்கி
மலரும் நாளை பெண்ணின விடிவு 

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...