samedi 31 janvier 2015

பல்லக்கின் பவனி செல்லுக்குள்...


பணம் விரித்த பந்தியில் தாவி
மனம் ஆனது குரங்கு
பதவி ஏறி பல்லக்கில் அமர்ந்து
ஊர்கோலம் போனது நேற்று
பட்டுச் சொக்காய் பளபளப்பு
மின்னிக் கருகி கொள்ளியாச்சு 
குறுக்கே நாலு கம்பிகள்
கொழுத்த பூட்டு
இதெல்லாம் எதற்கென
என்னை நான் நோகும் முன்னே
சிரித்துக்கொன்டே சொன்னது சிறைச்சாலை
திருட்டு நாயே கம்பிகளை எண்ணு
கஞ்சி ஊத்துறேன்
கட்டன் போட்ட குட்டை கால்ச்சட்டை
குரங்கை விரட்டப் போதும் என்றது...
Kavignar Valvai Suyen

vendredi 30 janvier 2015

சித்து விளையாட்டு...

ஏய் வண்ணம் மின்னும் வைர மூக்குத்தியே
உன்னை ஒரு முறைதான் பார்த்தேன்
என் இதய நரம்புகளில்
இசை நாதம் மீட்டிவிட்டாய்
கோவைக் கிளியே
உன் குவிந்த இதழ்களால்
என்னை குரு குருவெனவே
கொத்தித் தின்கிறாய்
அதிரசம் அறிவேன்
அதன் சுவை நீயடி
சித்து விளையாட்டில்
முத்த மழை பொழிகிறது
சத்தம் இன்றி எடுத்துக் கொடு
மெத்தை அணையும் தீர்க்கும் பசி
தீராத விளையாட்டுப் பிள்ளைகளை கன்டு..
Kavignar Valvai Suyen

மழைக்காலம் இனி வேன்டேன்...

ஆடவர் மயிலிடம் தோகை கன்டேன்
அழகுத் தேவதையே உன்னிடமே
ஆறடி மேல் கூந்தல் கன்டேன்
மாறாப்புத் தேவை இல்லை மானே
நீ நீராடும் போதில்
உன் மேகக் கூந்தல் போதும் உனக்கு
மலர் காடு மிரள்கிறது ரோஜாவே
உன் கூந்தல் அலை கன்டு
துளிர்க்காலம் வந்த போதும்
தூறவில்லை மழை இங்கே
நீ வயல் காட்டில் கிடந்தாலும் 
வழர் நீழ் கூந்தல் ஆறடி தொட்டு
வேரடி பதிக்கிதடி
விதை நாத்து வைத்துவிட்டு
மழைக்காலம் இனி வேன்டேன்
உன்னிடமே உரம் கேட்பேன்
இல்லை என்று சொல்லிவிடாதே
நீழ் சிகை விரித்து நடமிடும் அழகே
மலர்காடு மகிழட்டும் மனம் இரங்கு.
Kavignar Valvai Suyen
 

mardi 27 janvier 2015

இடம் மாறும் இதயங்கள்...


விழிகளால் கொய்தாய் என்னை நீ
உன் தோழில் சாய்ந்துவிட்டேன்  
இதழ்களின் ஈரம் இடம் மாறியதால்
குன்றேறி குளிர் மேகம் மூடுதடா
பூவுக்குள் புதுமழை பூமிக்கும் தெரியலையே
பூபாளமோ தேனாமிர்தமோ நீ வாசிக்கின்றாய்
சதிராடுகின்றன நெற் கதிர்கள்
வரப்புயர வாழ்வளித்த கோமகனே
ஹரிகிருஷ்ணனின் புள்ளாங்குழல் நான்
வாசிக்க இது நேரம் அல்ல என்றாலும்
வீசிவிடாதே தரையில் என்னை
சிற்பியே நீ வார்த்தது சிலையல்ல சிசு
கருவறையில் வைத்து உயிர் வளர்க்கிறேன்
புதிய வார்ப்புகள் நாளை தங்கத் தொட்டிலில்...
Kavignar Valvai Suyen

lundi 26 janvier 2015

அந்த ஊமை இரவுகளின் துயர்...


எரிச் சுவாலைக்குள் எங்கள் தாயகம்
வர்ணனும் ஒளிந்து கொன்டான்
இன்றும் பேச்சிழந்து துடிக்கின்றன
அந்த ஊமை இரவுகளின் துயர்
விழிகளின் இருப்பில் இல்லை
கண்ணீர் துளிகளும்..
ஊரை விட்டுச் சென்றபோதில்
உசிரைத்தான் கொன்டு சென்றோம்
இயந்திரப் பறவைகள் எம்மை துரத்தியது
அகதிகளாய்.. ..
கொத்தணிக் குன்டுகள் போகும் இடம் எங்கும்
கொத்திக் கொத்தி தின்டது உசிர்களை
பதுங்கு குழியிலும் பிணக்காட்டிலும்
துலைத்துவிட்டேன் உறவுகளை
ஒத்தையிலே என்னை கன்ட
ஒத்தை குயில் ஒன்று
எங்கிருந்தோ கூவியது முகாரி ராகம்
கடந்து செல்லும் காத்திலே
கரைந்திடக்கன்டேன் அந்தக் குயிலின் ஓசை
தோப்பிழந்த கானகமாய் எங்கள் தாயகம்
ஆதவனை காணவில்லை இன்னும்..  
Kavignar Valvai Suyen

samedi 24 janvier 2015

மனிதன்...

கருவில் உருவாகி மடியில் விளையாடி
மழலை மொழி பேசி பகிர்ந்துன்டான் மனிதன்
தடங்கள் இருக்கின்றன, அவனை காணவில்லை!

மனிதன் எங்கே ? தேடுகிறேன் !
எழுத்தில் இருக்கிறது உயர் வழ்வு
உரிமை இல்லை உயிர் இல்லை
இப்போது அதற்கு !
மக்களை பெறுகிறாள் மாதரசி மகராசி

மனிதம் செத்து புனிதம் புறையோடியதேன்
சுடாமல் சுடும் வாழ்வுக்குள்
தொடாமலே தீயுது நெஞ்சு
ஆசை மோகம் குரோதம் இத்தியாதி இத்தியாதி
வைரஸ் என்பார் இதுதானோ 

தீக்குச்சியும் தேவை இல்லை
கண்ணாடியில் முகம் பார்த்தேன்
மனிதனை காணவில்லை
புனிதம் அற்றவர்களில் நானும் ஒருவனே
நிலை நிறுத்தியது கண்ணாடி

பாவலர் வல்வை சுயேன்

mardi 20 janvier 2015

எனக்குள் நீ.. உனக்குள் நான்..


பூப்போலே பூக்கும் ஆசை
எனக்குள் நீ..
பூவுக்குள் புதைந்த மகரந்தம்
உனக்குள் நான்..
இது சரியோ தவறோ என
சாமியிடம் கேட்டேன்
தகவல் பரிமாற்றத்தில்
கவரேச் இல்லை
விரிவுரை எழுதிவிட்டேன்
முகவுரையை யார் எழுதுவது
நீயா.. நானா..
தயக்கம் தீரவில்லை
இன்பமாய் இருவரும்
வளைக் கரங்கள் பற்றி
இன்புற்ற போதில்
சொற் தொடர் சுரங்கத்தில்
இன்று சிதறிய சிந்தனை முத்துக்கள் இவை 
அத்தனையும் கோர்த்துவிட்டோம்
இந்த மாலை நாளை வாசகர் கையில்
பதிப் பேற்றம் செய்தது நீயும் நானும்தான்
விற்பனையாகிறது புத்தகக் கடையில்...
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...