ஆனந்தச் சாரல் தூவுதிங்கே துளிர்
தென்றல்
தென்னங் கீற்றின் நர்த்தன நீராபிசேகம்
ஆறுகால பூசையில் சிவனாகி
ஆடுகிறேன் தீர்த்தம்
நாணம் கொண்ட மௌனத்தில்
ஏகாந்த விழிகள்
என் மேல் நீ கொண்ட காதலை
களவின்றி சொல்லுதடி
குளிர் நிலா என நினைந்திருந்தேன்
நீயும் என்போல் எரி நிலா
என,
உணர்ந்தேன்
கொன்றுவிடு இல்லையேல் வென்றுவிடு
மின்னல் கொடியே யன்னல்
இடையில்
உன்னை காண்கிறேன்
பாவலர் வல்வை சுயேன்