dimanche 17 juin 2018

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!


கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய்
புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ

இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய
அமிலம் வீசுகின்றீர் அன்றலர்ந்த தாமரையில்
மலர் கொய்யும் கொடியோரே மனம் ஏது கல்லோ
இதழ்கள் உதிர்ந்திங்கு உலர்கின்றதே அல்லிகள்

கற்றிட மிளிரும் கல்வி நிற்க கற்பம் உறுதல் மேலோ
புனைதல் ஓர் பாடமோ பூவிடத்தில் மோகமோ
மானமே பெரிதென முகம் காட்ட மறுக்கும் மலர்களும் 
மனம் உதிர்ந்து மரணத்தை ஆள்கின்ற மொட்டுக்களும்
விதியென வீழ்தல் முறையோ இது தகுமோ

உம் தாயிடத்தில் பாரென்றால் தவறென்பீர்
வேறென் சொல்வேன் வேகும் மனசுக்கு
வேறு சொல் தொரியவில்லை
நீதி சினம் காக்க பாதி அறுத்திடுங்கள் போதும்
அச்சமொடு எஞ்சி வாழ்வார் குருகுலத்தில் ஆசான்கள்
மேன்மையுறு மேதினியில் மெய் ஒளிரும் கல்விச்சாலை

பாவலர் வல்வை சுயேன்

mercredi 13 juin 2018

சரணம் ஆனேன் பல்லவி நீயே...


என்னன்பே என்னுயிரே என் செய்தேன் உன்னை
என்னை வென்றாய் எழிற் தமிழாலே
சரணம் ஆனேன் பல்லவி நீயே

வண்ணம் தூவிய வான வில்லைத்தொலைத்தேன்
வைர நட்சத்திரங்களின் உறவைத்தொலைத்தேன்
என்னை உலுக்கிப்போகும் அழகே
எத்தனை நட்சத்திரம் எண்ணில் இல்லை
ஒன்றாய் சேர்த்து சிரு கல்லாக்கி
உன் ஒற்றை கல் மூக்குத்தியில்
ஒளித்தாய் எப்படி

தங்கம் தானே உன் அங்கம்
அள்ளி பருகிதே ஆனந்தக் குளம்
ஆனந்த உலகென நீ இருக்க
ஏழுலகும் தேடி போவேனோ எழிலே 
அன்பே அன்பே கருக்கல் கரையுதடி

செம்மாங்கனியும் செம்பரித்தி இலையும்
எழுதும் ஏடக ஆலிங்க படையலும்
மாயம் அறியேன் காயம் ஆனேன்
அள்ளிப் பருகினேன் அதிரசம் ஆருயிரே

பாவலர் வல்வை சுயேன்

lundi 11 juin 2018

கட்டில்கள் அழுகின்றன !!!


மின்னும் சிற்றாடையில் வண்ணம் தூவும் வரிவளையே
உத்தமரும் உன்னருகே  ராத்திரி வித்தகரே ஊருக்குள்ளே 
வளர் நிலா விளக்கேற்றி 
வஞ்சி நீ வண்ணம் மின்னி
நாணத் திரை நகல் அகற்றி
கூந்தல் திரை போர்த்துகிறாய்
செம் பவள பெட்டி தனில் தேடும் சுகம் காண்கயிலே
கௌரவம் பொய்த்ததடி கரு வண்டுகள் உன் காலடியில்
சீர் கொண்டு வருகிறார் சீதணம் கேட்கும் கோமான்களும்
செம்மஞ்சள் மின் மினியே விட்டில்கள் வீழ்ந்திட
கட்டில்கள் அழுகின்றன...

பாவலர் வல்வை சுயேன்

mardi 29 mai 2018

எழுதாத எஸ் எம் எஸ் !!!


மலர் தூவி சாய்கிறேன் மலரே நீ என்னில் சாய்கிறாய்
இலக்கை தொடுவது இதயம் என அறிந்தும்
இதுவரை தொடாமல் விட்டுருந்தேன்
ஏஞ்சல் நீயடி என்னுயிர் நீ என்பேனா

எழுதாத எஸ் எம் எஸ்சில்
என்னை நீ கிள்ளுகிறாய்
உன்னை நான் தொடுவதற்கும்
மயிலிடம்தான் இறகெடுத்தேன்
சரீரமோ சாகித்தியமோ
ஒன்றே ஒன்றானது இருவருக்கும் 

தரையில் நெருப்பின்றி தண்ணீரில் எழுத்தின்றி
லேஸ்சர்ரினால் என்னை செதுக்கிவிட்டாய்
உன் ஈர்ப்பு விழிகளுக்குள் ஈர் துளியாய் வீழ்ந்துவிட்டேன்
இமைகளால் தாழ் பூட்டி சிறையிட்டு சென்றுவிடு

பாவலர் வல்வை சுயேன்

lundi 28 mai 2018

நிறங்கள் இன்னும் தீரவில்லை !!!


 என்னை மீட்டும் கலை வாணியே
உன்னை தீட்டும் ஓவியன் நானே
எந்தன் நெஞ்சில் நீ ஏழு ராகம்

உலகச் சிற்பம் வெல்ல வல்ல
சித்திரம் கண்டு
கொஞ்சும் தென்றல் அஞ்சுதடி
தொட்டணைத்து தீட்டுகிறேன்
நிறங்கள் இன்னும் தீரவில்லை

ராஜ ராஜ சோழனின் வம்சம் நாமே
இன்ப வானில் இறகு விரித்து
தஞ்சை கோபுர கலசம் செய்வோம்
உலக அதிசயம் உரு மாறும் போதில்
உன்னையும் என்னையும் எழுதும் காவியம்

பாவலர் வல்வை சுயேன்

dimanche 27 mai 2018

முடியாத இரவுகள் !!!


 இனியவளே கோவை இதழ் கொடியே  
முன்னே என்னை காட்டும் கண்ணாடி நீ

உனக்குள் இருந்தேன் நான் இடம் தேடி
முடியாத இரவுகள் முன் கோப ஜென்மமடி
தொடாத பாகங்கள் விழி உண்ணும் நேரமடி
கை வளை ஓசை குலுங்கிட வா வா வா
மன்மதன் மார்பின் ரதியே

தேன் மலரே மலரிதழ் கனியே
மலரிதழ் எங்கும் பனித்துளி முத்தம்
இதழ்களாலே இதழ் துளி எடுத்து
தூரிகை செய்வோம் வா வா வா..
பொதிகை மலரே பூந் தென்றல் கொடியே
தின்றாலும் தீராதடி இந்த இனிய சுகம்

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...