dimanche 17 juin 2018

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!


கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய்
புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ

இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய
அமிலம் வீசுகின்றீர் அன்றலர்ந்த தாமரையில்
மலர் கொய்யும் கொடியோரே மனம் ஏது கல்லோ
இதழ்கள் உதிர்ந்திங்கு உலர்கின்றதே அல்லிகள்

கற்றிட மிளிரும் கல்வி நிற்க கற்பம் உறுதல் மேலோ
புனைதல் ஓர் பாடமோ பூவிடத்தில் மோகமோ
மானமே பெரிதென முகம் காட்ட மறுக்கும் மலர்களும் 
மனம் உதிர்ந்து மரணத்தை ஆள்கின்ற மொட்டுக்களும்
விதியென வீழ்தல் முறையோ இது தகுமோ

உம் தாயிடத்தில் பாரென்றால் தவறென்பீர்
வேறென் சொல்வேன் வேகும் மனசுக்கு
வேறு சொல் தொரியவில்லை
நீதி சினம் காக்க பாதி அறுத்திடுங்கள் போதும்
அச்சமொடு எஞ்சி வாழ்வார் குருகுலத்தில் ஆசான்கள்
மேன்மையுறு மேதினியில் மெய் ஒளிரும் கல்விச்சாலை

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...