vendredi 6 mars 2020

உள்ளத்தில் திருவிழா !!!


ஊரெங்கும் ஒளி விழா உள்ளத்தில் திருவிழா     
பூங்குயிலே பார்த்தாயா பூவரசம் பூ பூத்திடிச்சு
வளைந்தேனே வில்லாய் வரி வளையல் ஒலி கேட்டு
வாலிபம் தோற்றதோ வஞ்சி இவள் கன்னம் கொஞ்சத்தானே

மெட்டி ஒலி யதி போட கொலுசு மணி சுரம் மீட்ட    
புது மனை விழாவோ புரவியின் ஒலியோ
மயிலே என் மாறாப்பில் வீராப்பு இல்லையே
உனைக் காண்டு நாணித்தான் மடிமீது சாயுதே

தொட்டணைத்த தென்றலோ பல்லாங் குழி ஆடுதே    
எட்டி நின்று விழி தாவி என் மேனி மேயுதே
கார் கூந்தல் மேகமோ உனை கண்டு மயில் ஆடுறேன்
மழைச் சாரல் தூவுதே இறகிற்குள் மூட வா

மாயமான் கண்டே மயங்கினாள் சீதா                                     
கணையாழி துலைந்தே மறந்தான் துஷ்யந்தன்
இலக்கியத் தொடர் எழுதி இன்புறும் காதலே
வாசிப்பின் நேசிப்பில் வான் மழை தோற்கிதே

அறுகுக்கும் பொசிந்திங்கு அரியணை காண்போமே      
உருகுது உருகுது உளம் ரெண்டும் ஒன்றாணோம்
அருவியை போல் குதித்தோடி ஆசையும் நீளுதடி
இரவுக்கு விழி இருந்தால் இமை இரண்டும் மூடுமடி

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...