கொல்லாமல் கொல்லுறியே கொரோனா
அகிலம் கூறு போட்டு மூடுதே கொரோனா
வாழப் பிறந்தோ ரெல்லாம் சாகிறார்
வாழ வழி இன்றி முடங்கிறார்
கை கொடுத்தால் கொரோனா
கன்னம் தொட்டால் கொரோனா
மூச்சில் நுளைந்தே பேச்சை நிறுத்தி
முகம் காட்ட மறுக்கிறியே கொரோனா
யாதி சொல்லும் கொரோனா
நீதி கொல்லும் கொரோனா
மதம் ஏறி மன்னுயிர் கொல்லும் கொரோனா
இனச்சுத்திக் கொலையில் இனிதுறும் கொரோனா
உன் முன் பிறந்தே.., எம்மை கொல்லுதே கொல்லுதே
மருந்தில்லை இதற்கு விருந்துண்டு வீணர்க்கு
பாவ புண்ணியம் பாராதே பாரினில் இவர் எதற்கு
அஞ்சுது துஞ்சுது உலகே இப்போ
அஞ்சாதார் இல்லை அவனியில் உனக்கு
மிஞ்சி எஞ்சி அஞ்சுவோரை அஞ்சாது வாழவிடு
மருந்தில்லா உன்னால் மடியாதோ மாதுயர் இங்கு
ஒரே யாதி ஒரே இனம் ஒரே தெய்வம் என
யெகம் யாவும் உனைப் போற்றி அகம் ஏற்றி
அகவை தொழுவோம் கொரோனா
பாவலர் வல்வை சுயேன் – 21.03.2020

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...