மாயை சூடி நிற்கும் வர்ண வாழ்வே
அன்பு நிலையும் அறுவடை சாவாக
எழுகின்றோம் வீழ்கின்றோம்
எண்ணில்லை
கற்களை மிதித்து முகம் அறியா
முற்களில் காயமுற்றும்
ஆசை தூறல் அன்பை கொன்று
அழிந்தே வீழுது கூடிங்கே
கட்டை எரிந்திட கல்லறைகளும் சிரிக்க
மரண உடல் மரமாகுமா மண்ணில்
புழுவாகி பூடாகி புழுத்தலில் ஊன் உருக
இனிப்பா கசப்பா இகபர வாழ்வு
எழுதிய புத்தகம் எங்கே
தேடுகிறேன் எட்டவில்லை !
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...