அதி காலை துயில் எழுப்பி அன்பு பரிசு அள்ளி இட்டாய்
ஈரம் இன்னும் காயவில்லை தித்திப்பு தீரவில்லை
மாலை மஞ்சள் குளிக்கவைத்து
மன்மத பாணம் எய்கின்றாய்
தொட்ட குறை விட்ட குறை என
ஏதாச்சும் விடலையே நீ
ஏதாச்சும் விடலையே நீ
இன்னும் என்ன தேடுகிறாய் என்னிடத்தில்
அந்தி வந்த அருந்ததியும்
நாணுகிறாள்
ஆறாம் மீன் கார்த்திகை
மாதரும்
காந்தர்வம்
கொள்கின்றார்
வெண்
சாமரை வீசி வீசி
வேடம் தாங்கல் ஆளும் வேந்தே
வேடம் தாங்கல் ஆளும் வேந்தே
தோகைக் குழல் நீரலையில்
தெப்பக் குளம் ஆச்சேடா
தெப்பக் குளம் ஆச்சேடா
மஞ்சம் கொண்ட பள்ளி அறை
ஆறு கால பூசை ஆச்சு
அர்த்த இராத்திரி நேரம் இப்போ
அர்த்த இராத்திரி நேரம் இப்போ
பூத் திரியும் வேர்த்திடுச்சு
எனை ஆளும் மன்மதா
மகராசன் நீதான்டா
பாவலர் வல்வை சுயேன்
மகராசன் நீதான்டா
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...