மோன மலரே அன்பை அள்ளி இடும் அச்சயம் நீ
மண்ணில் உன்னை கண்ட விண் தாரகை ஒன்று
விழி அசைவால் ஓரம் கட்டி ஒளிக்கரம் நீட்டுதடி
....
உன் ஆழ்கடல் மோனத்தின் உச்ச நிலை நான் அறிவேன்
மோனத்தின் அமைதி தெளிவு முக்தி நிலை கொண்டவள் நீ
யாலம் செய்யும் வானவில்லும் வந்துன்னை கொஞ்சுதடி
ஏழு நிறங்களில் அது எதைத் தேடுகிறதோ உன்னில்
ஏதென்பேன் நான் .....
செந்தூர மஞ்சள் குழித்த உன் செவ்வான விழி குளிர்ந்திருக்க
ஆத்மீக அறிவொளி உனதன்பை அள்ளி அள்ளி கொட்டுதடி
இகபர சுகத்தின் அச்ச நிலை அகன் றழித்து
கள்ள நகை இன்றி கனிவோடு பகிர்கிறாய்
இறைத் திரு முடிக் கங்கையின் தங்கை நீயடி
அமுத சுரபி இல்லையேல் அன்றாடம் இங்கே
போகும் ஜீவன் யார் அறிவார் ....
இன்முகத் தென்றலே இரும்பறை வாழ்வோர்க்கும்
அருமறை மருந்து நீ
கொள்ளி இட்டோர்க்கும் அள்ளி இடும் அச்சயம் நீ
ஆண்டவன் திருவடி அதோ உனக்காக ....
Kavignar Valvai
Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...