வியாழன், 18 டிசம்பர், 2014

அஞ்சல் பெட்டி..


அஞ்சல் பெட்டி..
 
என்னவனுக்கு நான் எழுதிய அன்பு மடலை
முதலில் படித்தது நீதானே
என் சுவாசத் துடிப்பை ஸ்கான் செய்து
அவனது முகவரி சேர்த்ததும் நீதானே
ஊரில் எத்தனை பொய்யும் பிரட்டும்
உன்னை அல்லால் அது யாருக்குத் தெரியும்
இருந்தும் நீ சொல்வதில்லை எதையும்
சொப்பன மாயைகள்
உன்னை தொட்டதில்லை
சொந்தம் உள்ளோரிடமே
அஞ்சலை சேர்க்கின்றாய்
நின்ற இடத்தில் நீ நின்றாலும்
அன்றும் இன்றும் நீ சிகப்பு...

Kavignar Valvai Suyen

எண்ணச் சிறகின் வர்ணங்கள்....

வர்ணங்கள் வாழ்வை கையழித்து பரிமாற எண்ணச் சிறகை விரித்து வந்தேன் இறகிகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது மழை ஓய்ந்த பின் மரத்துளிகள் சிந்...