சனி, 13 டிசம்பர், 2014

திறக்காத கதவிதனை திறந்தது ஒரு ஜீவன்...


திறக்காத கதவிதனை திறந்தது ஒரு ஜீவன் - இராச்
சோலையில் பிறை நிலவாய் கண்டேன்
ஆயிரம் நட்சத்திரங்கள் அவளருகே
அழைப்புகள் விடுத்தும்
சுற்றும் விழிச் சுடராள் சுட்டெரித்தாள் என்னை
இராச்சோலை ஆடைகள் ஒவ்வொன்றாய் தொலைந்திட
முழு நிலவாய் நின்று பாடங்கள் சொல்லித் தந்தாள்
படித்த பாடங்கள்தான் ஒவ்வொன்றாய் படித்தேன்
படிக்காத பாடத்தையும் எழுதித் தந்தாள்
கற்கால மனிதனாய் நானும்
எழுதிய பக்கங்களை எண்ணிப் பார்க்கவில்லை
கண்ணாடி விம்பம்தனில் அவள் அங்கங்கள்
ஒவ்வொன்றும்
மின்னொளி காட்டி வினோதங்கள் செய்தன
என்னை தனக்குள் ஆட்சி வைத்து
பிள்ளைக் கனியமுதையும் தந்துவிட்டாள்
நிலா வெளி எங்கும் உலா போகின்றோம்
நான் இல்லை என்றால் தான் இல்லை என்கிறாள்
அமாவாசை இருளை கண்டால்
நினைந்திடுங்கள்...
நாம் இருவரும் இவ்வுலகில் இல்லை என்று...
 
Kavignar Valvai Suyen

முடியாத இரவுகள் !!!

  இனியவளே கோவை இதழ் கொடியே   முன்னே என்னை காட்டும் கண்ணாடி நீ உனக்குள் இருந்தேன் நான் இடம் தேடி முடியாத இரவுகள் முன் கோப ஜென்...