திங்கள், 31 அக்டோபர், 2016

தாமதம் ஏனடி தையலே !!!தோகை மயிலிறகாய் இமை வீசும் சாமரையே - கூர்
அம்போ உன் விழிகள் என் இதயத்தில் ஈட்டி முனை
நேர் இழையால் கட்டி அணைத்து
கன்னம் இட்டு கன்னம் வைத்தாய் !
தொட்ட குறை தீர்க்கவோ தோகை இறகெடுத்து
மை வண்ணம் தீட்டுகிறாய்     
அச்சாரம் நான் தாறேன் முத்தாரம் போதுமடி 
தந்துவிட்டு போ,  பூவிதழ் முத்தம்
நாளைய புலர்வுக்குள் உன்னிடமே தந்திடுவேன்
தாமதம் ஏனடி தையலே, நீ எனக்காக பிறந்தவளே....

பாவலர் வல்வை சுஜேன்

வெள்ளி, 28 அக்டோபர், 2016

நெய்து தாறேன் நூல் சேலை !!!அலங்காரம் தேவை இல்லை – அ
னைத்தும் ஓவியன் தந்துவிட்டான்  
நெய்து தாறேன் நூல் சேலை
உன் முந்தானை முடிச்சில்
எனக்கோர் இடம் தருவாயா கொடியே ...

பாவலர் வல்வை சுயேன்

வியாழன், 27 அக்டோபர், 2016

இதய ஒலி கேட்கிறதா !!!!நேசத் திரை மூடி நேரிழை செய்யும் நிலாவே
கொற்றவனும் அறியானே
உன் காதல் விழியின் கால் கொலுசை !
ஓர விழி பார்வையில் ஓரங்கம் கொள்ளும் அன்பே
நான் அறிவேனே உன் இதய ஒலி ஓசையை     
அதை என்றோ நீ என்னிடம் தந்துவிட்டாய்
என்னிடம் இருப்பது உன் இதயம் என்பது
யாருக்கும் தெரியாதே....

பாவலர் வல்வை சுயேன்

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்