வெள்ளி, 31 ஜனவரி, 2014

இரவு மகள் அழைக்கிறாள்..

இரவு மகள் அழைக்கிறாள்
என் இரு விழிகளை..

என் ஒளியே ஓடிவா...


உலகம், இடம் மாறிச் சுழன்றுவிட்டால்
மேற்கே மறைந்தவன் வருவானா..
கிழக்கும் சிவந்து வெளிக்கிறதே
இன்னும் அவனை காணவில்லை
பிரிந்தவர் மீண்டும் சேரும்வரை
இந்த உலகே கண்ணுக்கு கருமை
பிரியா வரம் நாம் பெறுவோம்
என் ஒளியே ஓடிவா...

சுனாமியாய் எழுந்து என்னை நீ..


சுனாமியாய் எழுந்து - என்
னை நீ அள்ளித் தின்டாலும்
உன்னை நான் பிரியேன்..
அரிய செல்வங்களை
அள்ளித் தருபவளே
உப்பென்று உன்னை உதறுவேனா
உனக்காக நானும் எனக்காக நீயும்
என்றும் வாழ்வோம் என் அழகே வா..

வியாழன், 30 ஜனவரி, 2014

அன்பே உனக்காக..


ஆடாமல் ஆடுகிறேன்
அன்பே உனக்காக
ஒளி தந்து விழி சிந்தி
ஊருக்காக உருகும் நாம்
எமக்காக ஒரு வினாடி
ஆடி அணைவோம் போதும்
இந்த ஒரு நொடிக் காதல்
ஈரேழு ஜென்மமும் உயிர் வாழும்..
 

புதன், 29 ஜனவரி, 2014

கோபம் உன்னை சிநேகம் கொள்ளும்..


கோபம் உன்னை சிநேகம் கொள்ளும்
தோழமை கொள்ளாதே
வேண்டியா செய்தாய்
வேண்டாத் தீவினை
அடித்தது நீதான்
மாண்டது இன்னுயிர்
மீண்டும் திரும்பாதே..

குற்றுணர்வாலே முற்றம் துறந்து
நீ முகவரி துலைத்தாலும்
அஞ்சலில் ஒட்டிய கோப முத்திரை
உன் சந்ததிக்கும் இழி நிலை சேர்க்கும்..

செவ்வாய், 28 ஜனவரி, 2014

உலகை படைத்து உன்னிடமே தந்துவிட்டேன்..


உலகை படைத்து உன்னிடமே
தந்துவிட்டேன் மனிதா..
பெண்ணென்றும்
மண்ணென்றும்
பொன் பொறுள் சதம் என்றும்
கள்ளுண்டு கரைகிறாய் நீ
அனாதைகள் ,
என் பிள்ளைகள் என
நான் சொன்னேனா..
மண்ணில் வாழும் ஜீவனெல்லாம்
மானிடா.., உன் பிள்ளைகள் என்பதை
ஏன் மறந்தாய் நீ..

திங்கள், 27 ஜனவரி, 2014

எண்ணச் சிறகை விரித்திருந்தேன்..

காதல் வாழ்வே கடைசிவரை என்று
எண்ணச் சிறகை விரித்திருந்தேன்
ரெட்டை கிளியாய் பறக்கும் போதில்
ஒற்றைச் சிறகை இளந்துவிட்டேன்
பறக்கிறேன் வீழ்கிறேன்
அழுகிறேன் சிரிக்கிறேன்
இதுதான் வாழ்வென
உணர்ந்த பின்னே
இறக்கை இருப்பதை
மறந்துவிட்டேன்..
 

உன் விழி ஓரம் நான் இல்லையோ..

உருக்கினாய் உருகிதே இரும்பு
கருக்கினால் கருகுமோ சங்கு
என் கண்ணுக்கு புலரலையே
உன் காந்த விழி கூற்று
எப்போது நீ எய்தாய் என்மீது
அந்த அம்பு..
இரும்பாய் உருகி சங்காய் மிளிர்கிறேன்
உன் விழி ஓரம் நான் இல்லையோ
சொல்லடி என் செல்லமே..
 

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

அன்று அழுதான் ஒரு சம்பந்தன்..


அன்று அழுதான் ஒரு சம்பந்தன்
இன்று உலகில் பல கோடி சம்பந்தன்
பாலுக்கு அழுகின்றார்
இரக்கம் கொள் ஈசனே
உமையோடு வந்துவிடு
மழலைகள்,
மரணப்படுக்கை செல்லும் முன்.

 

ஆயிரம் தடவைகள் சிறகு விரித்துவிட்டேன்...

ஆயிரம் தடவைகள் சிறகு விரித்துவிட்டேன்

என் எண்ணம் எல்லாம் வீணே

ஆகாசம் எங்கே போகிறது

அதன் எல்லை இன்னும் தெரியவில்லை

பெண்ணே உன் மனசும் அது போலவே

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

ஆணால் இன்னும் அளந்திட முடியவில்லை..


 

சனி, 25 ஜனவரி, 2014

காலம் வெல்லும் கவிதை நாயகனே..


காலம் வெல்லும் கவிதை நாயகனே
நான், உன் கனவுத் தோழியடா
சாமிக்குச் சொல்லி
புதிய உலகம் வாங்கிவிட்டேன்
பூமிக்கு வெளியே வா...
உன்னோடு வாழ காத்திருக்கிறேன்...

கர்வத் தேர் ஏறிச் சென்றவன் நான்..


ஆண் ஆண் எனும் வீறாப்பில்
அகங்கார மமதை உடன்
கர்வத் தேர் ஏறிச் சென்றவன் நான்
எத்தனையோ முறை உன்னிடம்
தோர்த்த பின்புதான் உணர்ந்தேன்
என் எண்ணம் தவறென்பதை

பலத்தால் என்னிடும் நீ தோற்றுருக்கலாம்
உடலால் உள்ளத்தால் உணர்வால்
அன்பால் அரவணைப்பால் அழகால்
ஆத்ம ரீதியாக பலமுறை தோற்றுவிட்டேன்
உன்னிடம் நான்
நீ போகும் தேரில் என்னையும் ஏற்றிச் செல்
உன் தேரோட்டியாக நான் வாறேன்...

வெள்ளி, 24 ஜனவரி, 2014

என் வாழ்வே நீதானே..


தேய்ந்தது நிலா என்று - விழி
தேடாமல் விட்டதில்லை
உலா வரும் நிலாவும்
உறங்கிப் போனதில்லை
பார்க்கும் இடம் எங்கும்
பருவ எழில் ,
பூத்துக் குலுங்குதடி
பருவம் பார்த்து புருவ வில்லால்
அணைத்தேன் என் கவிக் குயிலே
என் வாழ்வே நீதானே..

வியாழன், 23 ஜனவரி, 2014

உலா வந்து உன்னைத் தேடினேன்..


உலா வந்து உன்னைத் தேடினேன்
நீ அங்கில்லை
உன்னை கனா காணவே கண் மூடினேன்
நீ வரவில்லை
எங்கிருந்தோ நீ என்னை அழைக்கும்
உன் குரல் கேட்டு மீண்டும் தேடினேன்
என் இதயக் கதவை தட்டிக் கொண்டிருந்தாய்
எப்போது உன்னை ,
என் இதயத்திற்குள் வைத்து பூட்டினேன்
எனக்கே தெரியவில்லை !
உன்னை எங்கெல்லாமோ தேடிவிட்டேன்..

புதன், 22 ஜனவரி, 2014

பசி வந்த போது பாலுக்கழுதேன்..


பிறந்த போது ஏன் அழுதேன்
எனக்கே தெரியவில்லை
பசி வந்த போது பாலுக்கழுதேன்
அன்னை அரவணைத்தாள்
அன்பெனும் ஆளம் அறிந்தேன்
பள்ளிக் காலத்தில் துள்ளித் திரிந்தேன்
மான் குட்டியாய் கவலை அறியேன்
பருவ கால உச்ச நிலை உஷ்ணத்தில்
ஏன் அமர்ந்தேன் வேடம் தாங்கலில்
இன்று என் கையில் ஓர் குழந்தை
என், தந்தை பெயரை நான் அறிவேன்

என் குழந்தையின் தந்தை யார் ..?
நான் அறியேன் .. !
ச்சீ.. இதுதானா காமத்தின் உச்ச நிலை
கண்ணியம் இழந்துவிட்டேன்
பெண்ணியமே என்னை
கல்லால் அடித்தே கொன்றுவிடுங்கள்..

செவ்வாய், 21 ஜனவரி, 2014

எத்தனை பெரிய மனசுனக்கு..


உன் இதயம் என் ஒருவனுக்கே சொந்தம் என்று
உன்னிடம் பறித்து எனக்குள் வைத்திருந்தேன்
எனக்கே தெரியாமல் எப்படி எடுத்தாய்
உன் பிள்ளைக்கும் கொடுத்து
பிள்ளையின் பிள்ளைக்கும் கொடுத்துவிட்டாய்
எத்தனை பெரிய மனசுனக்கு
தாய்மையின் பொது நலம் அறியா
சுயநலவாதி நான், என்னை மன்னித்துவிடு..

என் ஜீவன் எனக்கெழுதிய முதல் கடிதம் நீ..

என் ஜீவன் எனக்கெழுதிய முதல் கடிதம் நீ
என் மனக்கடலில் நரம்பெனும் நதியாய் வந்து
சங்கமித்த ஜீவ நதியும் நீ
எம்மை வெவ்வேறாய் பிரித்திட
எவராலும் இயலுமோ சொல் என்னுயிரே..

சுடர் தீபங்கள் கலைந்தாடுதே..


சூடான ராத்திரிக்கு பூந்தோகை என்ன  - பூ
மாலை என்ன, திசை எங்கும் ஒரு ராகமே
சுடர் தீபங்கள் கலைந்தாடுதே..

காட்டு மல்லி பூவென்று தென்றல்
விட்டு விட்டு போனதுண்டோ
கூடு விட்டு குயிலும் கூவ காலம்
கை சேர்ந்து கொள்வதெப்போ
சேர்த்தணைத்த துணையும் இல்லை
வேரை வீணறுத்தே போகுது
விதியின் எல்லை
பாசம் மோச வலை வீசிச் சாய்க்கிதே
மேகம் மேலிருந்து கண்ணீர் தூவுதே..

திங்கள், 20 ஜனவரி, 2014

தேன் வண்டாக ஏன் பிறந்தேன் நான்..


தேன் வண்டாக ஏன் பிறந்தேன் நான்  
ஒவ்வொரு இராத்திரியும்
ஒவ்வொரு பூக்கள் என்னுடனே
தேன் எடுத்து நான் சேர்த்த
என் தேடலின் இருப்புகளை
பறித்துப் போகிறான் மனிதன்...

சனி, 18 ஜனவரி, 2014

இலங்கையின் முன்னை நாள் பாராளு மன்றம்..


அன்பெனும் ஒளியே அணையா தீபம்..


கருவில் உருவாகி உருவில் உயிராகி
உணர்வில் உளம் நாடும் மனமே
அழகின் அரியணைகள்
விழியில் வீழ்ந்தாலும்
உனதல்ல உணர்வாய் நியமே
நோய் வந்து வீழ உதிரிகள் உருமாறும்
அழகும் அன்றே அழிந்தேகி கருகும்
உனை காண உன் கண்ணே
உளம் நொந்து கூசும்
அன்பெனும் ஒளியே அணையா தீபம்
முடம் என்று எவரையும் நீ
முன் மொழிந்து வாழாதே
உதிரிகள் நாளை
உன்னிடமும் குறையலாம்
உணர்வாய் நீ மனமே....

வெள்ளி, 17 ஜனவரி, 2014

தாரம்தானே நான் உனக்கு..


என் கண்ணா, நீ தந்த முத்தச் சத்தம்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
வீண் கொண்ட கோபம் கூட
விடை இன்றி தவிக்கிறது
தடை ஏது கண்ணா
தாரம்தானே நான் உனக்கு
முத்த ஈரம் காய்வதற்குள்
விடியல் வரும் வந்துவிடு..

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்..


கை , இருப்பில் ஒன்றை வைத்து
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
பொய் உரைக்கவில்லை என் தோழி
போனவள் போனாளடி
மீண்டும் அவள் திரும்பவில்லை
என்னை நீ மன்னிப்பாயா..

என் நெஞ்சக் கூட்டுக்குள்ளும் – எண்
ணில் ஏழு காதலன் என் மன்னவா
உன்னைத் தவிர
முதல் காதலை முகவுரையாகவும்
உன் காதலை முடிவுரையாகவும்
எனக்குள்ளே எழுதிவிட்டேன்
மெய் உரைத்த உன்னிடம்
பொய் உரைப்பேனா நானும்
மறப்போம் மன்னிப்போம் கிளிஞ்சல்களை..

வியாழன், 16 ஜனவரி, 2014

இன்றல்ல நேற்றும் இதுதான் நியதி..


அச்சமும் கேள்வியும் ஆங்காங்கே
பெய்யும் மழை
ஏற்ற தாழ்வு எல்லோர்க்கும்
ஏணிப்படி
புறை ஓடும் நோய்க்கு
திரை போடுவார் யாரோ
இன்றல்ல நேற்றும்
இதுதான் நியதி
மரணம் வரும்வரை
மனம் போல் வாழ்வோம் வா..

துலைத்து விடாதே என்னை.. !


என் உள்ளத்தில் உன் உயிர் வைத்து
உன் உள்ளத்தில் என்னை குடி இருத்தி
எங்கே சென்றாய்.. ?
துலைத்து விடாதே என்னை.. !
ஈருடல் ஆனாலும் உயிர் ஒன்றுதான்
விரைவில் வந்துவிடு
வாடாமல் வாடுகிறேன் நான்..

புதன், 15 ஜனவரி, 2014

கேணல் கிட்டு,வின் 21,வது ஆண்டு நினைவெழுச்சி நாள்...

16.01.1993,அன்று வங்கக் கடலில் வீரகாவியம் எழுதிய கேணல் கிட்டு உட்பட 10, மாவீரர்களின் ஞாபகார்த்த 21,வது ஆண்டு நினைவெழுச்சி நாள்...
கனா கண்ட காலங்கள் கரைந்தோடிச் செல்வதோ
கண்ணீரில் தமிழினம் காலத்தால் அழிவதோ
போராடி பெற்ற நிலம் பொல்லாங்கில் கிடப்பதோ
ஞானப் பழம் அல்ல நெல்லிக் கனியல்ல
இன்னொருவருக்கு தாரை வார்ப்பதற்கு
சுய,உரிமை வாழ்வின் தமிழீழக் கனி இது
இனச்சுத்தி செய்தோர் காலில் ஈழம்
ஈனம் உற்று அழிவதோ
நிலாச் சோறு உண்ட நிலம்
ஒளி இன்றி மாள்வதோ
உலகத் தமிழா உறங்காதே
உன் கையில் இன்று யுத்தம் நீ விடாதே
இனச் சுத்தி செய்தவன் இடி பாட்டில் அழிகிறான்
காலக் கூண்டில் நீதி தேவன் நெற்றிக் கண் திறக்கிறான்
நிச்சயம் தமிழீழம் நன்றே என்பான்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே...

சாயங்காலச் சந்தையிலே, சாமி வரம் கேட்டேனா..?


சாயங் காலச் சந்தையிலே - சாமி
வரம் கேட்டேனா..?
பூங்காற்றே திரும்பென்று
பூவிழி மெல்ல அழைத்தது
அஞ்சுவேனா..!
அருகே சென்று அன்பே என்றேன்
அண்ணா என்றாள் நெளிவோடு
ஆசை காட்டி மோசம் செய்யும்
நாக கன்னி தீண்டும் முன்னே
இன்பச் சாரல் அறுத்து
இறைவனுக்கு நன்றி சொன்னேன்..

செவ்வாய், 14 ஜனவரி, 2014

தை பிறந்தது, தைத் திரு நாளென்று..

தை பிறந்தது, தைத் திரு நாளென்று
பொங்கலை பார்த்தது கிடையாது
எங்கள் உதய வானில்
திங்களை பார்த்ததும் கிடையாது
வாடகைச் சுவருக்குள்
அடுப்படிக் கல்லில்
ஆத்தா அவித்துக் கொடுத்தாள்
அச்சு வெல்லத்தோடு அரிசி
இதுதான் பொங்கலாம் !
தமிழர் திரு,நாளென தமிழர் கொண்டாடும்
போகிப் பொங்கல் இதுதான் என்றால்
தவறில்லைத்தான்..

இன்னும் என்ன இருக்கடா என் தமிழா
வாழாமல் நொந்து கெட்டும்
வாழ்த்துரைப்பதுதான்
எம் வாழ்வில் மிச்சமா ?
மெழுகி கோலம் இட முத்தமும் இல்லை
தழுவி பாய் விரிக்க தாய்நிலமும் இல்லை
வாகை சூடி வாஞ்சை கொண்ட
அந்தத் தமிழீழம் என்று மலருதோ
அன்றேதான் தமிழர் திருநாள் தமிழா
வாழ்த்துரைத்து பொங்கலாம்
வென்றே நீயும் வாடா..

திங்கள், 13 ஜனவரி, 2014

பொங்கலுக்கு போனவளே போதுமடி உன் கோபம்..


இராத்திரிக்கு ஒரு பாட்டு - என்
ராசாத்தி உன்னை கேட்டு
போட்டாலும் போட்டேன்டி
ஒரு மில்லி ஊர் ஊத்து
ஆடாமல் ஆடிவிட்டேன்
யாரும் இல்லா உலகத்திலே
பூகம்பப் புயலாகி
பொங்கலுக்கு போனவளே
திங்கள் ஏழும் தீர்ந்ததடி
உன் கோபம்  தீரலையோ
அரசாங்க அனுமதியில்
அனு தினமும் விக்கிறாங்க
அந்த நாள் பொங்கலிலே
உன் அப்பனும் இப்டித்தான்
ஆறு வரிச தனி வாழ்வில்
ஆத்தாளும் தள்ளி வைத்தாள்
பொங்கலுக்கு போனவளே
போதுமடி உன் கோபம்
மாதுனை பிரியேன்டி
என் மனையாளே வந்துவிடு
நான், மது விலக்கு செய்துவிட்டேன்...

சிகப்பு விளக்கு இணையச் சிலந்தி..


மெத்தை வலை விரித்து
செவ்வான ஒளி நின்று
விழி மெளசால் அழைக்கிறாள்
சிகப்பு விளக்கு இணையச் சிலந்தி
நாத்து மேட்டு நீர் தெளிப்பில்
உயிரணுக்கள் இவளுக்குள்ளே
உயிர்க்  கொல்லி எய்ட்ச்சை பிரசவித்து
மரண வலை விரித்து
மெளனித்து காத்திருக்கிறது
விட்டில்களே வீழ்ந்து விடாதீர்
மெத்தை வலையில் இணையச் சிலந்தி.

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...