samedi 8 février 2020

மின்னல் கொடி !!!


ஏதோ ஒரு மின்னல் - என்
விழியை பறித்த தென்ன
கட்டிக் கொண்டதோ
என்னை கனலில் இட்டதோ

பட்டுச் சாய்கிறேன் பூவே
விட்டுப் போகிறாய் என்னை
என்ன மாயமோ
என் நிழலும் தேயுதே

மின்சாரக் கொடியே இடை இல்லா நூலே
சிக்காத நெஞ்சு சிக்கித் துடிக்கிதடி
அடிவானம் கறுத்து அருந்ததி ஆச்சு
அம்மி மிதிக்கலாம் அதில் இல்லை மூச்சு

தீண்டாத விளக்கில்லை
திரிக்கூட்டில் நெய்யிட்டு
விடி வானை கை ஏந்தி
மடிப் பூவை தொட்டில் இட
விளையாட வாடி வாடி
மின்னலாய் என்னை தொட்டவளே

பாவலர் வல்வை சுயேன்

vendredi 7 février 2020

அனல் திரை !!!

கனா காண்டேன் காலங்கள் பதினாறு 
பனித் திரை விலக்கி – அனல்
திரை சாய்த்ததே பதினெட்டு

உன்னைத் தொட்ட காற்று
என்னைத் தொட்டுப் போக
நதியான உள்ளம்
சங்கமம் தேடுதே

உருக்கினாய் உருகிதே இரும்பு
சுட்டாலும் வெண்மையே சங்கு
விழியும் மொழியும் சந்தித்தவேளை
சிந்திக்கவே இல்லை
புலர்ந்தன காந்தக் கூற்று

இரும்பும் உருகி சங்காய் மிளிர்கிறேன்
விழி அம்பெய்து கொய்தாய் நீயே
உடற் பசி இலாதார் எவரில்லை
இதை இல்லை என்பார் சிலருண்டு
அவர் ஜீவன் இல்லை
வாழும் காலம் யாவும் சேருமே
வா வா அன்பே மீன்டும் பதினாறு

பாவலர் வல்வை சுயேன்

mardi 4 février 2020

தேசிய கீதம் !!!


தமிழுக்கும் தமிழக்கும் சுதந்திரம் இல்லாத் தேசம் 
தமிழா தமிழால் தேசிய கீதம் பாடித்தான் பயனுண்டோ
பாடாது போனாலும் வாராது வருமோ சுதந்திரம்
ஆன்றோர் என்போரும் மாண்டோரே ஈனர் காலில்

தாயகம் தனில் தலைநிமிர்ந்தே தலைமுறை வாழணும்
சுய உரிமை சுரந்தோடி சூழ் பகை நீங்கணும்
இன்பத் தமிழ் நாட்டிலே இனிதோங்கி வாழ்ந்து
சங்கத் தமிழால் பாடுவோம் தேசிய கீதம் 

நீதி நிலைத்து நிலையுறு வாழ்வு நிலைத்திட்டால்
பாடு தமிழா பாடு பண்ணொடு தமிழில்
பரவசம் பொங்கி பாடும் குயிலும் உன்னோடு
சுதந்திர வாழுவின், தேசிய கீதம்!

பாவலர் வல்வை சுயேன்

samedi 1 février 2020

ஊடலில் ஏனோ விழிகள் !!!!!

 அழகே அழகே அழகியல் தமிழே
இயற்கை எழிலே இனிமை நீயே
பிரம்மன் எதற்கு உன் படைப்பு
பசுமை புரட்சி
உன் கொடி இடை அதற்கு
உதிர் காலம் ஏனோ
உன்னருகே துச்சாதணனோ

விழியால் என்னை கொய்கின்றாய்
விரகத் தீ மூட்டுகிறாய்
காணும் விழிகளில்
கண்ணனின் லீலையே
கருணை பொழியுது கார்மேகம்
ஊடல் தணித்து கூடல் காண்போம்
குன்றாதுன் இளமை

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...