திங்கள், 1 டிசம்பர், 2014

மாடத்து மகுடமே ஓரத்து குடில் நான்...


மாடத்து மகுடமே ஓரத்து குடில் நான்...
 
பஞ்சணையில் என்னை எழுப்பும் வெண்தாமரையே
அஞ்சுகிறேன் உன் அஞ்சுவிரல் அபிநயம் கண்டு
மாடத்து மகுடமே ஓரத்து குடில் நான்...
எல்லை மீறியே என்னை நீ எழுப்புகிறாய்
விழியால் நீ வரைந்த கடிதம்
என் விழியில் வந்து சேர்ந்ததடி
பருவத்தால் பட படக்கும் இமைச் சிறகிற்குள்
அதனை பூட்டி விட்டேன் யாரும் அறியார்
போருக்கு போகவில்லை தேகம் எங்கும் ரணங்களடி
உன்னிரு விழிகள் செய்த ஈட்டி முனை காயங்களோடு
விளக்கொளி ஏதும் இன்றி வழிப் பயணம் போகின்றேன்
வஞ்சி நீ அருகில் வராதே மிஞ்சிடுவேன் என அஞ்சுதே மனசு
அச்சத்தை களைந்துவிட்டு போராட எழுந்தேனடி
போனது என் கனவு..
பட்டத்து ராணியே இனி என் பஞ்சணை வராதே
அருகில் என் மனையாள் கை விளக்குமாறுடன்
காளி அவதாரத்தை இன்றுதான் கண்டுகொண்டேன்
கனவே நீ கலைந்துவிடு...
 
Kavignar Valvai Suyen

எண்ணச் சிறகின் வர்ணங்கள்....

வர்ணங்கள் வாழ்வை கையழித்து பரிமாற எண்ணச் சிறகை விரித்து வந்தேன் இறகிகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது மழை ஓய்ந்த பின் மரத்துளிகள் சிந்...