திங்கள், 8 டிசம்பர், 2014

ஒவ்வொரு இரவும் இருகரம் நீட்டி அழைக்கிறது..


ஒவ்வொரு இரவும் இருகரம் நீட்டி அழைக்கிறது
வாருங்கள் இளைப்பாறிச் செல்லுங்கள் என்று
நம்பிக்கையோடு விழி மூடுகிறோம்
நாளைய விடியலில் விழித்தவன் எழுகிறான்
விழி மூடியவன் விதி முடிந்ததென்று போகிறான்
உயிரோவியம் மறைக்கப்படுகிறது..
 
Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்