வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ஆதி உமையானவளே விடிவதற்குள் வந்துவிடு..


திருமறை பாடவில்லை.. 

திரு வரம் கேக்கவில்லை.. 

தரிசனம் தந்தாய் தேவி..!

மீண்டும் பிரிவினை வேண்டி

மானுட ஜென்மம் எடுத்தாயோ..?

உன்  அருள் முகம் காண

ஆலய வாசல் எங்கும்

அலைகிறேன் தேவி

எங்கும் காணவில்லை

உன்னை..!

ஆதி உமையானவளே

விடிவதற்குள் வந்துவிடு

என்னில் பாதி தந்தவன் நான்

என்றும் பிரியாத வரம்

தந்திடுவேன்..

வியாழன், 27 பிப்ரவரி, 2014

காதலாகி கசிந்துருகி...


காதலாகி கசிந்துருகி

வாழ்க்கை நாணலில்

மெல்ல நடந்தேன்..!

முள்ளும் மலரும்

முத்தம் இட்டன

என் பாதடிகளை..!

தொட் டெடுத்து

துவட்டி விட்டு

இன் முகத்தோடு

வந்து விட்டேன்..!

உயிராடும் ஊஞ்சலை

நிறுத்துவதாக

அழைப்பாணை தரப்பட்டுள்ளது

பொய் மேனி விட்டு மெய் உயிர்

போவதெங்கே நான் அறியேன்

இதுதான் வாழ்க்கை..!

இதுதான் பயணம்..! இதவே நியதி..!

மீண்டும் கூண்டுக்குள் நான்..


மாதரசி என்கிறாய் தேன் மொழி என்கிறாய்

ஆதார வாழ்வுக்கு அவதாரம் தந்த

அன்னை என்கிறாய்..!

கவியாலே பூச்சூடி முப்பாலும்

அருந்தும் வரைதானே அனைத்தும்..!

உன் போல் மனச் சிறகு

எனக்கும் இருப்பதை

ஏன் நினைப்பதில்லை, நீ..?

மீண்டும் கூண்டுக்குள் நான்..!

பெண்ணடிமை விலங்குடைப்பது

நீ அல்லால் வேறு யாரடா சொல்...

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

இரவின் மடியில்...


எதுவரை என்பது ஆதங்கமே..!

 
முகிலாக நானும் - மூடும்
பனித்திரையாய் நீயும்
எதுவரை என்பது
ஆதங்கமே..!
காண்போம் வா
 கரை தொடும் அலையாய்
 என்றும்...!

 

 

 
 
 

நன்றி மறந்தவன் மனிதன்..


ஆதவன் வருகிறான் என அறை கூவி...

அதிகாலையில் அலாரம் செய்தேன்...

நன்றி மறந்தவன் மனிதன்..,

என் கழுத்துக்கே கத்தி வைக்கிறான்

இறைச்சிக் கடையில் சேவல்..!

திங்கள், 24 பிப்ரவரி, 2014

அரிவாள் எடுத்து அறுக்கிறானே என்னை...


பருவ மழை இன்றி நான் வாடி நின்றேன் - என்னை

வளர்த்தவன் விழியிலே உதிரம் கண்டேன்...!

பாச மழைத் துளியில் பருவ மகளானேன்

அரிவாள் எடுத்து அறுக்கிறானே என்னை

இவன் என் தந்தையே அல்ல..!

சுயநலவாதி என்றது, நெல்....

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

தீர்ப்புகள் திருத்தப் படல்லாம்..


கன்னத்தில் முத்தம் இட்டேன் - இதயச்

சிறையில் அடைத்துவிட்டாய் என்னை..!

தீர்ப்புகள் திருத்தப் படல்லாம்..!

மரண தண்டணை வேண்டாம் எனக்கு..

உன்னிடம்,

ஆயுள் கைதியாக்கி விடு...

ஏய் எங்கே போகிறாய் நீ..


ஏய் எங்கே போகிறாய் நீ

உனக்காகப் பிறந்தவள் நான்

சிலை வடிக்க சிற்ப்பி அழைக்கிறான்

வண்ணம் தீட்ட ஓவியன் அழைக்கிறான்

இருந்தும்.., உன்னை நான் அழைக்கிறேன்

என் உள்ளம் கவர் கள்வனே..

வாழலாம் வா.. வண்ணப் பூங்காவில்

தேனீக்களாய்..

கொடி இடை வளைந்த தாமரையாள்..


ஆசை மழைத் தூரலே சாரலாய் வந்து - என்

னை நீ தொட்டுச் சென்றுவிட்டாய்..!

நீராடை மேல் மின்னும்  வைர

முத்துக்களைக் கண்டு ஆசை தீரவில்லை

அள்ளி அனர்த்தம் கண்டேன்..!

 கொடி இடை வளைந்த தாமரையாள்

வானுயர்ந்த தன் ஆதவனிடத்தில்

யாடை மொழியில் ஏதேதோ சொல்லி

என்னை கேலி செய்கிறாள்..!

அள்ளிய வைரங்களை அப்படியே

போட்டுவிட்டேன்..!

 பூவுலகை காணவந்து

புழுதியிலே வீழ்ந்ததினால்

குடைக்குள் ஒதுங்க எண்ணம் இன்றி

மாசு தனை கழுவிப் போகிறேன்..

தொடாதே என்னை நீ.. தாங்காது என் மனசு...

சனி, 22 பிப்ரவரி, 2014

நாளை எனக்கும் இதுதான் நியதி..


உள்ளம் என்றும் தொடாத ஒன்று..!

உன்னை அழைக்கிது வா என்று..!

பிணம் என்றே..,

சொல்லி விட்டார் உன்னை..!

விருப்போ.. வெறுப்போ...

அழைக்கிறது மயானம்..!

எடுத்துச் செல்கிறேன் உன்னை..!

எரிப்பதற்கு..!

நீர் விழி ஓடி..,

நிலத்தை தொட்டாலும்..!

நாளை எனக்கும் இதுதான் நியதி..,

நான் அறிவேன்..!

மனமே என்னை மன்னித்துவிடு..!

குட்டி போட்ட வட்டிப் பணமே..!


குட்டி போட்ட வட்டிப் பணமே..!

நீ விட்டில் ஆனாய் எப்படி..?

உன்னைத் தொட்டெடுத்துப் போன

அந்தத் தெருக் கம்ப விளக்கால்

என்னை விட்டெரிந்து மாண்டாயோ

சொல்லடி..?

யானை வருகிதே.. சேனை விலகிதே..

இனி கேக்காதே.. வளியில் இப்படி..

சேர்த்தே தாறேன் வட்டியும் முதலும் என

எத்தனை நாள் அவள் சொல்லிவிட்டாள்
அனைத்தும் பொய்யடி.!

அவளோ சொல்லுப் பல்லக்கில் ஏறி

போகிறாள்...

நானோ இன்னும் கால் நடையில்

அலைகிறேன்...

காதறந்து கை விட்டுப் போனதடி என்னை

என் செருப்பும்..!

குட்டி போட்ட வட்டிப் பணமே

மாண்டாயோ நீ சொல்லடி..?

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ஆயிரம் குமிழிகளில் என் ஆவி துடிக்கிதடி..


அதிசயம் தானடி ஆரணங்கே..!

சேலைத் தாவணியில் என்னை நெய்து..!

சோப்புப் போட்டுத் துவைக்கிறாய்...

துவைக்காதே தையலே நீண்ட நேரம்

ஆயிரம் குமிழிகளில்

என் ஆவி துடிக்கிதடி

கலிங்கப் போர்க் களத்தில்

உன் பட்டு விரல்கள் மோதுவதை

சலவைக் கல்லு தாங்குமடி

உன் மெய்ப் பாது காவலன் நான்.,

தாங்குவேனா..?

கவலை விடு..!

முன்னரங்கப் போரிலே...

வெற்றி நிச்சயம் நமக்கே நமக்குத்தான்

பொழுது சாயும் நேரம் ஆச்சு..!

விளக்கை ஏற்றி வென்றுடுவோம் வா...

புதன், 19 பிப்ரவரி, 2014

கரைகிறேனடா நான்..


மலரிலே வாசம் கண்டு..! 

உன் மனசை,

நேசம் கொண்டேனடா..!

மழைக் கொரு குடையாக

ஏன் வரவில்லை நீ..?

கரைகிறேனடா நான் 

உப்பளத்தில் உப்பு...!

இதழ் சிவக்க சுவைக்கும் கொடியே..

இதழ் சிவக்க சுவைக்கும் கொடியே..
நம் வடிவம் மாறலாம்..!
இதயம் மாறுமா..?

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ஆலய தரிசனம் காண வந்தேன்..!


ஆலய தரிசனம் காண வந்தேன்..!

அம்பிகையே..,

நின் அபிநயம் கண்டேன்..!

அர்ச்சனை செய்திட ஐயர் எதற்கு..?

தேங்காய் உடைத்தேன்..

தேவி, உன் தரிசனம் கிடைத்தது..!

நன்றி சொல்வோம் இறைவனுக்கு ..

நீதி காத்து சினம் தணிந்தது...!

அநீதி இழுத்தது இருபத்திநான்கு ஆண்டுகளாய்
உயிர் குடிக்க... நீதி காத்து சினம் தணிந்தது
தூக்குக் கயிறு இன்று...!

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

என் சினேகிதி..

நான் சுவாசிக்கும் என் இதய நூல் நீ....

ஒவ்வொரு நாளும் காதல் கடிதம்..

ஒவ்வொரு நாளும் காதல் கடிதம் எழுதுவதால்
இன் நாளை மறந்து விட்டேன்...!
இன்றுதான் காதலர் தினமாம்...!

நீ எங்கே போகிறாய்..?

ஆடும் அழகே..! என் அழகு மயிலே..!
வர்ணங்கள் ஏழும் உன்னிடத்தே..!
நீ எங்கே போகிறாய்..?
அங்கே வானவில் கோபிக்கும்
வந்துவிடு என்னருகே...

Happy Valentines Day..

உனக்காக நான் ஒவ்வொரு பொழுதும்..
மலர்ந்தும் மலராமல் எனக்காக நீ..
உயிர் உள்ளவரை..!

வியாழன், 13 பிப்ரவரி, 2014

அஸ்த்தமம் என்பது இருவருக்கும் ஒன்றுதான்..!

இதயத்துள் இதயம் வைத்து - உதய
ஒளி கண்டு விட்டோம்..
ஒருவரை ஒருவர் முதலில்
விட்டுச் செல்லும் போதில்
அஸ்த்தமம் என்பது
இருவருக்கும் ஒன்றுதான்..!
அதுவரையில்,
உயிரெனும் மெய் ஒளியின்
நெய் விளக்கணையாமல்
வாழலாம் வா.. என், அன்பே..!

காதலர் தின இனிய நல் வாழ்த்துகள்..


காதல்., காதல்., காதலென்றே காணும் இன்பம் கோடி.! 
இதை வாழ்வில் ஓர் நாள் இணைந்தே.. சுரம் மீட்டி.!
திளைப்போம் கூடி..!
முற்றுப் புள்ளி இல்லாதது.. காதல்!
முடிவுரை தொடாதது.. காதல்!
ஒரு விழி அழும் போதில்
மறு விழி சிரிப்பதல்ல.. காதல்!
உடல் பசி சுவை கொள்ளும்
பஞ்சாமிர்தமும் அல்ல.. காதல்!

நெஞ்சறை தனில்  - வெண்
சாமரைத் தென்றல்
கொள்வதே.. காதல்!

பயணங்கள் முடியும் பாதைகள் தொடரும்
பாரினில் புது பூக்கள் மலரந்து வரும்
நீ இன்றி போனால் என்ன.?
எண்ணற்ற காதலர்கள்
உன் பெயர் சொல்லி மகிழும்
இதுவே.. உன்னதக் காதல்..!

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

விழி ஓரத்தை வருடுகின்றன விரல்கள்...


பெற்ற அன்னை..,

உன்னை, விட்டுப் போயிருக்கலாம்..!

அவளின் மரண அழைப்பிதழுக்கு..! 

 ஆனாலும்..,

அவள் விட்டுப் போயிருக்கிறாள் ..!

தன் உசிரை...., உன்னோடு...!

வலிகள் நிறைந்த பாதை..!

உறைந்த உயிரோடு நீ..!

விழி ஓரத்தை வருடுகின்றன விரல்கள்...

மரணித்துக் கொண்டது அந்த நூறு..!


எதிர் பார்க்கவில்லை அவள்..!

தான்., மன்னிப்பு எழுதும்..!

அந்த, நூறு ரூபாய் நோட்டை..!

முகவரி அறியாமலே..,

அந்த சில நிமிடத்திற்காக..!

அவளின் தம்பி

அதை கொண்டுவந்திருந்தான்..!

உடன், மன்னிப்பு கேட்டு..!

மரணித்துக் கொண்டது அந்த நூறு..!

இது விபச்சாரியின் விலாசம்.. ...

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

யாழ்/வல்வெட்டித்துறை..

யாழ்/வல்வெட்டித்துறை
இந்திராணி வைத்தியசாலையின் புதிய அவசர சிகிச்சை பிரிவு இது.

மதிப்பிற்குரிய முதல்மை டாக்டர் திரு,மயிலேறும் பெருமாள் அவர்களின் அயரா முயற்ச்சியில் வளர்ந்து தன் பணி செய்திட காத்துக் கிடக்கிறது.........
டாக்டர்களின் பற்றாக்குறையினால் இன்னும் நடைமுறை படுத்தப்படவில்லை..

விடியலை தொடவேண்டும் விழியே...


கைவளையும் காகிதப் பூவும் தானே
எம் சிறை இருப்புக்கான சீர்கள் ..!
கனாக் காண்பதற்காகவா..?
இருளோடு உறவாடும் உன்னை
சினேகம் கொண்டேன்..!
மஞ்சள் குளித்து மௌனம் காத்து
மரணித்துக் கிடக்கிறோம் இன்னும்..!

பெத்துப் போட ஒரு இயந்திரம்..
சமைத்துத் தர ஒரு இயந்திரம்..
மண் குடிலின்  கிழிந்த பாய்களாய்
இன்னும் பெண்கள்..!
விடியலை தொடவேண்டும் விழியே
திறந்து கொள்.! உன் சிறைக் கதவை.!
 

தேனிசை, அலை பாயக் கேட்டேன்..!


தேனிசை,  அலை பாயக் கேட்டேன்..! 

அந்த மன்றில்..!

இருந்தும் அங்குள்ளவர் மனசில்

இனம் புரியாத சலனங்கள்..!

சிலர் அழுகிறார்கள், சிலர் சிரிக்கிறார்கள்!

சிலர், துன்பச் சுமை தாங்கி நெஞ்சடைத்து நிற்கிறார்கள்

அன்னைக்கு மறு ஜனனம்.! பிள்ளையின் புது ஜனனம்!

நலம் காத்து தருகிறது மழலைகளின் பிரசவ விடுதி....

சனி, 8 பிப்ரவரி, 2014

என் முன்னே நின்றன மீன்கள்...!


வறண்ட பூமி கண்டு தண்ணீர் வேண்டி

இறைவனிடம் போயிருந்தேன்..

தண்ணீர் இன்றி வாழ.! வரம் கேட்டு.!

என் முன்னே நின்றன மீன்கள்...!

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

எண்ணி வரவில்லை நான்..!


எண்ணி வரவில்லை நான்..!  நீ இப்படிச் செய்வாய் என்று..!

நான் தொடாத பாகங்களை,  ஆசையுடன் தொடு என்கிறாய்..!

தொட்டுத் திளைக்கிறேன் கட்டித் தவிக்கிறேன்

நான் எழுதும் கவிதையே.., என்னை நீ

கொள்ளை கொண்டுவிட்டாய்...    

சந்தைக்கு போன ரோஜாவே..


சந்தைக்கு போன ரோஜாவே பாதியிலே

திரும்பிவிட்டாய் என்னாச்சு ..?

கொள் முதலும் வேண்டாம் என்று

கொண்டவனை அங்கு விட்டு, வந்துவிட்டேன்..... 

சீதணக் கொடுமையில் பெண்கள்...!

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...