சனி, 28 ஜனவரி, 2017

குளிர்த் தேசம்!!


பூப் பூவாய் பூப் பூவாய் பூமியிலே பனிப் பூக்கள்
அதை கண்டு விழி சிலிற்க உவகை கொண்டது
என் மென் மனசு !
சில்லென்ற வருடலில் சிரு புருவம் உயர்த்தி
பாதம் தொட்ட பனிப் பூக்களை
முத்தமிட குனிந்தேன்
காய்ந்த வடுக்களாய் உதடுகளில் கீறல்கள்
என்ன மாயமோ அறியேன்
சரசம் கொள்ளவில்லை
உரசி வீழ்ந்தன பனித்துகில்கள்
சுவர்க்க புரியல்ல குளிர் தேசம்
குதறித் தின்கிறது உயிரை...

பாவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஏன் மறந்தாய் நீ ...

எத்தனை முறை பூத்திருப்பேன் - உன்
சாமிக்கே எடுத்துச் சென்றாய் என்னை
எனக்குள்ளும் ஓர் ஜீவன் இருப்பதை
ஏன் மறந்தாய் நீ..

பாவலர் வல்வை சுயேன்

வியாழன், 26 ஜனவரி, 2017

சுவாசம் தந்த பேரின்பம் !!!


என் சுவாசமதை காற்றில் துதனுப்பிக் கொண்டிருக்கிறேன்
என்றென்றும் உனக்காகவே
ஏழு கடல் தாண்டி வரும் என் சுவாசத்தை
(சு) வாசித்துத் தா மீண்டும் நான் சுவாசிக்கின்றேன்

பாவலர் வல்வை சுயேன்