வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஆத்தாடி மனங்களில் காத்தாடி சுத்துது..


ஆத்தாடி மனங்களில் காத்தாடி சுத்துது..
 
பட்டம் பறக்கிது பட்டம் பறக்கிது இது எங்க ஊருங்க
வாடைக் காத்தில் விண்ணில் விதைத்த வண்ணத்
தோட்டமுங்க   நீங்க வந்து பாருங்க
வல்வைச் சந்தியில் கொக்குச் சாடுது
ஆத்தாடி மனங்களில் காத்தாடி சுத்துது
எல்லோர் கரங்களும் நூலே பிடிக்கிது
உதயசூரியன் கடற்கரை மணலில்
கப்பல் பட்டம் ஏறுது ஏறுது
குச்ச ஒழுங்கையில் சாடும் பிராந்துகள்
சண்டையும் போடுது போடுது போடுது
ஊரிக்காட்டு மைதான வெளியில்
நாக பாம்பு படம் எடுத்தாடுது
இது குட்டி மச்சான் ஏத்திய
பாம்புப் பட்டம்  ஊரையே கூட்டுது
நெடியகாட்டு கணபதி லைற்றின்
மின்னொளி பட்டம் வெண்ணிலா கூட்டுது
வல்லவர் செய்யும் சாகச வரிசையில்
விண்ணில் இரு நிலா எங்க ஊரிலுங்க
ஊறணி கடற்கரை தீத்தவெளியில்
கதறுது கதறுது கட்டுக் கொடியுங்க
நான்கு விசைகளில் நாதம் இசைத்து
தலையை ஆட்டுதுங்க
அப்பண்ணா வாட்டிய விண்ணின் சத்தம்
ஊரை அடக்கிதுங்க
பெடியங்கள் எல்லாம்  தடியங்கள்தானுங்க
பட்டம் ஏத்தி பறக்கிறானுங்க பாருங்க
மிதிவண்டி மேலே ஓடலிச் சுப்பு
கோப்பிறேசன் தான்டி வாறேனுங்க
சுதி ஏத்தி பாட எது இல்லை இங்கே
இன்னைக்கு பாட்டு இதுதானுங்க...
 
Kavignar Valvai Suyen

சயன மாளிகை !!!

அழகே உன்னை எழுதும் மனசை விழிகளின் இறகுகள் வென்றதடி அன்பு முத்திரை பதித்திட பதித்திட எழுதும் கோல் உன் அன்பை எழுத வெள்ளை தாளில் ...