vendredi 27 juillet 2018

புலன்களை விரட்டுகிறாய் !!!


பொன் நகை வாங்கி பொன் மணி உனக்கு
பரிசம் போட்டேன் பவளம் ஆனதடி
முத்துகள் கோர்த்து புன்னகை செய்து
உதட்டை நனைக்கின்றாய்

நெற்றியில் சந்திரன் குங்கும அழகில்
உன்னை வருடுகிறான்
இந்திரன் என்னை விழிகளில் பூட்டி
விடியல் தருகின்றாய்
அச்சாரம் தந்து முத்தாரம் பெற்றேன்
கோவை கிளிக்கேன் கோபமடி
உன்னிதழ் இரண்டும் கொத்தி சிவந்திட
என் மனம் ஊமத்தம் ஆனதடி
குலுங்கும் செம் பொன் தழுவிதடி

விண் மீன்கள் பறித்து மின்சாரம் செய்வோம்
அனல் விளக்கணைத்து சுடர் ஒளி கொள்வோம்
துயிலறைத் தாழை இடுவோமா
பசித்திடும் மழலை மடி மீதமர்ந்து
அதிரசம் பருகி இருள் மறை உறங்க
விண் மீன்களை அனுப்பி
விடியலை வரவு வைப்போம்
சொல்லடி சக்தி சிவனாகின்றேன்

பாவலர் வல்வை சுயேன்

mardi 24 juillet 2018

சீரியலா கணவனா !!!


ஒன்றுக் கொன்று முறன்பாடு
வென்று வாழ்வதில் விடை ஏது
சீரியலா கணவனா
சீர் தூக்கியவள்
சிரித்துச் சொன்னாள்
மன்னிக்கணும் மணவாளா
நீ தகர டப்பா சீரியல் டிகிரிக்கப்பா

சீரியல் குடும்பத்தில் தீராத சிக்கல்
கீறு வீழ்ந்த குறந்தட்டு
மீண்டும் மீண்டும்
சொன்னதைத்தான் சொல்கிறது
அளுகிறாள் நாயகி பாவம்
அவள் சிரித்த காட்சிகள்
சென்சாரிடம்
ஆனாலும் அழகழகாய் உடுத்து வருகிறாள்
மடிப்புக் குலையாத புத்தாடைகள் அடுப்படியிலும்
தேனீர் போட்டால் கொடு தலைவா
தானும் அழுது களைத்துவிட்டேன் எங்கிறாள்
ஒவ்வொருவர் குடும்பத்திலும்
சீரியல் பார்க்கும் தலைவி

பாவலர் வல்வை சுயேன்

mardi 17 juillet 2018

செல்லரித்த வாழ்வு !!

 

மன்றேறி ஜீவனாம்சம் கொடுத்தாலும்
கரம் விட்டகலா காதலி
செல் போன்
செல்லரித்த வாழ்வெனினும்
உதட்டோடு உதட்டு முத்தம் இல்லையேல்
நித்திரை இல்லை இவளுக்கு  

பாவலர் வல்வை சுயேன்

இரு விழி எழுதும் இலக்கண பிழைகள் !!!


மல்லி மல்லி நீ குண்டு மல்லி நிலவா வெயிலா
மனங்கள் தொடுவதில் உயிர்த்தது தழிரா தமிழா
ஊடலில் நீ வெயிலே வெயிலே
கூடலில் குளிர் நிலவே நிலவே சரிதான் சரிதான்

மின்னல் கொடியே கொடி இடை கனியே
மழையினில் நனைவோம் சுகம்தான் சுகம்தான்
சாத்வீக யுத்தம் சரங்களை தொடுக்கும்
உயிர்தான் உயிர்தான்

சூடிடும் மலரே தேனிசை குயிலே சரியா தவறா
பூத்தது நிலவு பூமிக்கு அழகு
பூவிழி வாசலில் இராத்திரி வரவு
வாழ்வினில் வசந்தம் வருவதும் போவதும்
நியம்தான் நியம்தான்
இரு விழி எழுதும் இலக்கண பிழைகளை
வரைமுறையாலே பிழைகளை திரித்தி
உலகினை காண்போம் உயிரே வா...

பாவலர் வல்வை சுயேன்

கண்ணை பறிக்கும் மின்னல் !!!



தேசம் எங்கள் பாரதம் என்றே
மூவர்ண கொடி பறக்க
விண்ணை தொடுகிறது முழக்கம் 
சுறண்டும் வர்க்கமே நீ சுறண்டிச் செழிக்க    
ஏழை எழியோர் வடிக்கும் கண்ணீரே
பெய்யும் கனதி மழை போலும்

முழக்க மின்னல்கள் தோன்றி ஒளிர
டியிட்டல் இந்தியா வார்ப்புகளில் தெரிகிறது
வீதி ஓர சுரங்கக் குளாய்களில்
இத் தேச சீமான்களின் வாசம்
கோடை அனலுக்கும் மாரி மழைக்கும்
தமக்கென இருக்கும் உறவுகள் இவரென
சந்தோசம்

தேர்தல் காலம் ஒன்றே நினைவு கொள்கிறது
இவர்களை இந்தியக் குடி மக்களென்று
தேடிச் செல்கிறார் அரசியல் தலமைகளும்
வேட்டி சேலைகள் கொண்டு
குடியுரிமை வாக்குண்டு குடியிருக்க குடிலும் இல்லை
கூலிக்கு ஆள் வேண்டுமாம் கூடவே கூவுகிறார் சிலர் இங்கு

பாவலர் வல்வை சுயேன்

dimanche 1 juillet 2018

பீனிக்ஸ் பறவையே உன் பள்ளி வருகிறேன்


மலரென நினைத்தே அணிகலன் செய்தேன்
மனசை கொன்று போனதேன் மணிப் புறா
காலச் சூழல் காற்றின் திசையே
வேடந் தாங்கல் வாழ்வுக்கு நிழலே
கூடும் இல்லை குஞ்சும் இல்லை
கொத்திப் போனதேன் வந்த புறா

பீனிக்ஸ் பறவையே உன் பள்ளி வருகிறேன்
பால் வேறு நீர் வேறு வேறென தெரியலையே
சுட்ட மனம் தோப்பாக பட்ட மனம் நீறாக
போனது போகட்டும் புறம் தள்ளி எழுகிறேன்
நிலாவும் ஓர் நாள் இல்லாது போவதுண்டு
கலங்கும் வானமும்
கண்ணீர் கோலமே
ஆறாக் காயம் எழுதா வடுவில்
பாளும் மனசே தணிந்தெழு
வேடம் தாங்கலும் வேதனை வாழ்வே

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...