செவ்வாய், 16 டிசம்பர், 2014

வினையென நினைந்து விரிசல் வீழாதீர்..


வினையென நினைந்து விரிசல் வீழாதீர்..
 
உறவெனும் சங்கிலி
உள்ளம் செதுக்கிய
பொன் என்பார்
விரிசல் கோட்டில்
அன்பிழை அறுத்து
தொங்கு நிலை பட்டமாய்
தொலைகின்றன முகங்கள்
அன்பெனும் சங்கிலியும் அணையா ஒளியுமே
பொன் விளையும் உறவின் விதை நிலமாகும்
வினையென நினைந்து விரிசல் வீழ்ந்திட
பகையெனும் வாளை உருவாதீர்கள்
உறையில் இருக்கும்வரைதான்
அன்பும் அறநெறியும் இன்னுயிர் தோழனாகும்.
 
Kavignar Valvai Suyen

முடியாத இரவுகள் !!!

  இனியவளே கோவை இதழ் கொடியே   முன்னே என்னை காட்டும் கண்ணாடி நீ உனக்குள் இருந்தேன் நான் இடம் தேடி முடியாத இரவுகள் முன் கோப ஜென்...