வெள்ளி, 19 டிசம்பர், 2014

வாழப் பிறந்தேன் வாய் மொழி இல்லை...


வாழப் பிறந்தேன் வாய் மொழி இல்லை...
 
வாழப் பிறந்தேன் வாய் மொழி இல்லை
என் மொழி என்னிடம் கோபமோ என
சாமியிடம் கேட்டேன்
என்னைப் போலவே அந்தச் சாமியும்
பேசவில்லை!
நல்லதும் கெட்டதும் நாலும் நடக்கிறது
என் முன்னே
எடுத்துரைக்க முடியவில்லை
பேசா மடந்தை என்றே பேதலிக்கிறார்  என்னை
யார்மீது குற்றம் சொல்வேன்
நா இருந்தும் மொழி பேசா ஊமை நான்
என் துயர் என் நிந்தனை என் கனவுகள்
சிறகிளந்து சிதைகின்றன
என் மொழியை உலக மொழி என்கிறார்
என் இதயம் ஆயுள் கைதியாய் கூட்டுக்குள்ளே
எப்போது நான் பேசுவேன்
இறைவனிடமும் பதில் இல்லை ..!
 
Kavignar Valvai Suyen

முடியாத இரவுகள் !!!

  இனியவளே கோவை இதழ் கொடியே   முன்னே என்னை காட்டும் கண்ணாடி நீ உனக்குள் இருந்தேன் நான் இடம் தேடி முடியாத இரவுகள் முன் கோப ஜென்...