செவ்வாய், 30 டிசம்பர், 2014

இது பிரியாவிடை அல்ல..


இது பிரியாவிடை அல்ல.. ..
உன்னை, பிரிவதென்பது என்னாலாகாது
இருந்தும் நீ போகிறாய்
மறுமுறை சந்திப்போம் என்பது
மரணத்திற்கே தெரியும்.
 
Kavignar Valvai Suyen

பனி தூங்கும் இரவில்..


பனி தூங்கும் இரவில் இரன்டு நிமிடம் 29.12.2014

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

வாழ்க்கை புத்தகம் எங்கே....


வாழ்க்கை புத்தகம் எங்கே....
 
வாழ்க்கை ஒரு நிலைக் கண்ணாடி 
வர்ண யாலங்களால்
முலாம் பூசப்பட்டுருக்கிறது
முற்கள் உண்டு
முகம் அறியா கற்கள் உண்டு
மாற்றார் வாழ்வில் மாறுமுகம்
எவர்க்கும் உன்டு
துணையென வந்தோரின்
அன்பும் தூரோகமும்
துளிர்க்கும் மரமே வாழ்க்கை...
அன்பு நிலையிலும் அறுபடைச் சாவிலும்
எழுவதும் வீழ்வதும் எண்ணில் இல்லை
கட்டை எரிகிறது கல்லறைகள் சிரிக்கிறது
மண்ணுக்குள் என்னொரு ஜீவனாய்
புழுக்கள் புறமுதுகிட்டு செல்கிறது
வாழ்க்கை இனிப்பா.. புளிப்பா..
எழுதிய புத்தகம் எங்கே.? தேடுகிறேன்.!
என் கையில் இன்னும் எட்டவில்லை...
 
Kavignar Valvai Suyen

வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஆத்தாடி மனங்களில் காத்தாடி சுத்துது..


ஆத்தாடி மனங்களில் காத்தாடி சுத்துது..
 
பட்டம் பறக்கிது பட்டம் பறக்கிது இது எங்க ஊருங்க
வாடைக் காத்தில் விண்ணில் விதைத்த வண்ணத்
தோட்டமுங்க   நீங்க வந்து பாருங்க
வல்வைச் சந்தியில் கொக்குச் சாடுது
ஆத்தாடி மனங்களில் காத்தாடி சுத்துது
எல்லோர் கரங்களும் நூலே பிடிக்கிது
உதயசூரியன் கடற்கரை மணலில்
கப்பல் பட்டம் ஏறுது ஏறுது
குச்ச ஒழுங்கையில் சாடும் பிராந்துகள்
சண்டையும் போடுது போடுது போடுது
ஊரிக்காட்டு மைதான வெளியில்
நாக பாம்பு படம் எடுத்தாடுது
இது குட்டி மச்சான் ஏத்திய
பாம்புப் பட்டம்  ஊரையே கூட்டுது
நெடியகாட்டு கணபதி லைற்றின்
மின்னொளி பட்டம் வெண்ணிலா கூட்டுது
வல்லவர் செய்யும் சாகச வரிசையில்
விண்ணில் இரு நிலா எங்க ஊரிலுங்க
ஊறணி கடற்கரை தீத்தவெளியில்
கதறுது கதறுது கட்டுக் கொடியுங்க
நான்கு விசைகளில் நாதம் இசைத்து
தலையை ஆட்டுதுங்க
அப்பண்ணா வாட்டிய விண்ணின் சத்தம்
ஊரை அடக்கிதுங்க
பெடியங்கள் எல்லாம்  தடியங்கள்தானுங்க
பட்டம் ஏத்தி பறக்கிறானுங்க பாருங்க
மிதிவண்டி மேலே ஓடலிச் சுப்பு
கோப்பிறேசன் தான்டி வாறேனுங்க
சுதி ஏத்தி பாட எது இல்லை இங்கே
இன்னைக்கு பாட்டு இதுதானுங்க...
 
Kavignar Valvai Suyen

வியாழன், 25 டிசம்பர், 2014

லூர்த் பிரான்ஸ்...
பாவமன்னிப்பின் உற்ற தோழனாய் சிலுவை சுமந்த யீசசின் நத்தார்தின நல் வாழ்த்துகள்......

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்