சனி, 31 ஜனவரி, 2015

பல்லக்கின் பவனி செல்லுக்குள்...


பணம் விரித்த பந்தியில் தாவி
மனம் ஆனது குரங்கு
பதவி ஏறி பல்லக்கில் அமர்ந்து
ஊர்கோலம் போனது நேற்று
பட்டுச் சொக்காய் பளபளப்பு
மின்னிக் கருகி கொள்ளியாச்சு 
குறுக்கே நாலு கம்பிகள்
கொழுத்த பூட்டு
இதெல்லாம் எதற்கென
என்னை நான் நோகும் முன்னே
சிரித்துக்கொன்டே சொன்னது சிறைச்சாலை
திருட்டு நாயே கம்பிகளை எண்ணு
கஞ்சி ஊத்துறேன்
கட்டன் போட்ட குட்டை கால்ச்சட்டை
குரங்கை விரட்டப் போதும் என்றது...
Kavignar Valvai Suyen

வெள்ளி, 30 ஜனவரி, 2015

சித்து விளையாட்டு...

ஏய் வண்ணம் மின்னும் வைர மூக்குத்தியே
உன்னை ஒரு முறைதான் பார்த்தேன்
என் இதய நரம்புகளில்
இசை நாதம் மீட்டிவிட்டாய்
கோவைக் கிளியே
உன் குவிந்த இதழ்களால்
என்னை குரு குருவெனவே
கொத்தித் தின்கிறாய்
அதிரசம் அறிவேன்
அதன் சுவை நீயடி
சித்து விளையாட்டில்
முத்த மழை பொழிகிறது
சத்தம் இன்றி எடுத்துக் கொடு
மெத்தை அணையும் தீர்க்கும் பசி
தீராத விளையாட்டுப் பிள்ளைகளை கன்டு..
Kavignar Valvai Suyen

மழைக்காலம் இனி வேன்டேன்...

ஆடவர் மயிலிடம் தோகை கன்டேன்
அழகுத் தேவதையே உன்னிடமே
ஆறடி மேல் கூந்தல் கன்டேன்
மாறாப்புத் தேவை இல்லை மானே
நீ நீராடும் போதில்
உன் மேகக் கூந்தல் போதும் உனக்கு
மலர் காடு மிரள்கிறது ரோஜாவே
உன் கூந்தல் அலை கன்டு
துளிர்க்காலம் வந்த போதும்
தூறவில்லை மழை இங்கே
நீ வயல் காட்டில் கிடந்தாலும் 
வழர் நீழ் கூந்தல் ஆறடி தொட்டு
வேரடி பதிக்கிதடி
விதை நாத்து வைத்துவிட்டு
மழைக்காலம் இனி வேன்டேன்
உன்னிடமே உரம் கேட்பேன்
இல்லை என்று சொல்லிவிடாதே
நீழ் சிகை விரித்து நடமிடும் அழகே
மலர்காடு மகிழட்டும் மனம் இரங்கு.
Kavignar Valvai Suyen
 

செவ்வாய், 27 ஜனவரி, 2015

இடம் மாறும் இதயங்கள்...


விழிகளால் கொய்தாய் என்னை நீ
உன் தோழில் சாய்ந்துவிட்டேன்  
இதழ்களின் ஈரம் இடம் மாறியதால்
குன்றேறி குளிர் மேகம் மூடுதடா
பூவுக்குள் புதுமழை பூமிக்கும் தெரியலையே
பூபாளமோ தேனாமிர்தமோ நீ வாசிக்கின்றாய்
சதிராடுகின்றன நெற் கதிர்கள்
வரப்புயர வாழ்வளித்த கோமகனே
ஹரிகிருஷ்ணனின் புள்ளாங்குழல் நான்
வாசிக்க இது நேரம் அல்ல என்றாலும்
வீசிவிடாதே தரையில் என்னை
சிற்பியே நீ வார்த்தது சிலையல்ல சிசு
கருவறையில் வைத்து உயிர் வளர்க்கிறேன்
புதிய வார்ப்புகள் நாளை தங்கத் தொட்டிலில்...
Kavignar Valvai Suyen

திங்கள், 26 ஜனவரி, 2015

அந்த ஊமை இரவுகளின் துயர்...


எரிச் சுவாலைக்குள் எங்கள் தாயகம்
வர்ணனும் ஒளிந்து கொன்டான்
இன்றும் பேச்சிழந்து துடிக்கின்றன
அந்த ஊமை இரவுகளின் துயர்
விழிகளின் இருப்பில் இல்லை
கண்ணீர் துளிகளும்..
ஊரை விட்டுச் சென்றபோதில்
உசிரைத்தான் கொன்டு சென்றோம்
இயந்திரப் பறவைகள் எம்மை துரத்தியது
அகதிகளாய்.. ..
கொத்தணிக் குன்டுகள் போகும் இடம் எங்கும்
கொத்திக் கொத்தி தின்டது உசிர்களை
பதுங்கு குழியிலும் பிணக்காட்டிலும்
துலைத்துவிட்டேன் உறவுகளை
ஒத்தையிலே என்னை கன்ட
ஒத்தை குயில் ஒன்று
எங்கிருந்தோ கூவியது முகாரி ராகம்
கடந்து செல்லும் காத்திலே
கரைந்திடக்கன்டேன் அந்தக் குயிலின் ஓசை
தோப்பிழந்த கானகமாய் எங்கள் தாயகம்
ஆதவனை காணவில்லை இன்னும்..  
Kavignar Valvai Suyen

சனி, 24 ஜனவரி, 2015

மனிதன்...


கருவில் உருவாகி மடியில் விளையாடி
மழலை மொழி பேசி பகிர்ந்துன்டான் மனிதன்
தடங்கள் இருக்கின்றன, அவனை காணவில்லை!
மனிதன் எங்கே ? தேடுகிறேன் !
எழுத்தில் இருக்கிறது உயர் வழ்வு
உரிமை இல்லை உயிர் இல்லை
இப்போது அதற்கு !
மக்களை பெறுகிறாள் மாதரசி மகராசி
மனிதம் செத்த மண்ணில் புனிதம் புறையோடிவிட்டது
சுடாமல் சுடும் வாழ்வுக்குள் தொடாமலே தீயுது நெஞ்சு
ஆசை மோகம் குரோதம் இத்தியாதி இத்தியாதி
வைரஸ் என்பது இதுதான் - தீக்குச்சியும் தேவை இல்லை
கண்ணாடியில் என் முகம் பார்த்தேன் மனிதனை காணவில்லை
புனிதம் அற்றவர்களில் நானும் ஒருவன் என்பதை
நிலை நிறுத்தியது கண்ணாடி...
Kavignar Valvai Suyen

செவ்வாய், 20 ஜனவரி, 2015

எனக்குள் நீ.. உனக்குள் நான்..


பூப்போலே பூக்கும் ஆசை
எனக்குள் நீ..
பூவுக்குள் புதைந்த மகரந்தம்
உனக்குள் நான்..
இது சரியோ தவறோ என
சாமியிடம் கேட்டேன்
தகவல் பரிமாற்றத்தில்
கவரேச் இல்லை
விரிவுரை எழுதிவிட்டேன்
முகவுரையை யார் எழுதுவது
நீயா.. நானா..
தயக்கம் தீரவில்லை
இன்பமாய் இருவரும்
வளைக் கரங்கள் பற்றி
இன்புற்ற போதில்
சொற் தொடர் சுரங்கத்தில்
இன்று சிதறிய சிந்தனை முத்துக்கள் இவை 
அத்தனையும் கோர்த்துவிட்டோம்
இந்த மாலை நாளை வாசகர் கையில்
பதிப் பேற்றம் செய்தது நீயும் நானும்தான்
விற்பனையாகிறது புத்தகக் கடையில்...
Kavignar Valvai Suyen

சனி, 17 ஜனவரி, 2015

ஏஞ்சல் நீயடி ....


ஏஞ்சலே என்ன செய்யப்போகிறாய் என்னை நீ
மொழி அறியேன்  காதல் விழி அறியேன்
உன் விழி வரைந்த மடலில் 
நான் இலக்கியம் ஆனேன்...
இலக்கை தொடுவது இதயம் என அறிந்தும்
இதுவரை தொடாமல் விட்டுருந்தேன்
தரையில் நெருப்பின்றி தண்ணீரில் எழுத்தின்றி
லேஸ்சர்ரினால் என்னை செதுக்கிவிட்டாய்
ஏஞ்சல் நீயடி என்னுயிர் நீ என்பேனா
எழுதாத எஸ் எம் எஸ்சில்
என்னை நீ கிள்ளுகிறாய்
உன்னை நான் தொடுவதற்கும்
மயிலிடம்தான் இறகெடுத்தேன்
சரீரமோ சாகித்தியமோ
ஒன்றே ஒன்றானது இருவருக்கும்
உன் ஈர்ப்பு விழிகளுக்குள் ஈர் துளியாய் வீழ்ந்துவிட்டேன்
இமைகளால் தாழ் பூட்டி சிறையிட்டு சென்றுவிடு....
Kavignar Valvai Suyen

வெள்ளி, 16 ஜனவரி, 2015

நக வளைவுகளில் நாலுபக்கம் சுவரு....


மலரே உன் இதழ் கொன்ட சிகப்பில்
நக வளைவுகளில் நாலுபக்கம் சுவரு
பூவுக்குள் பூத்தாய் பூவிழியே
உன்னால்.. ...
பூமியில் ஓடுதே பூகம்பக் கொதிப்பு
அழகே உன்னை படைத்தவன்
பிரம்மன் என்றாலும்
முள்ளிலே ஆடும் மூக்குத்தி ரோஜா நீ
மாலைத் தென்றல் உன்னை தாலாட்ட
மனசுக்குள் பூக்கிதடி மத்தாப்பூ
புரம் எரித்த பூவே
என் மனம் என்றும் வெழுப்பு
எரிகின்றேன் உன்னால்
என் எதிர்காலம் என்னாவது....
Kavignar Valvai Suyen

புதன், 14 ஜனவரி, 2015

இனிய தைத்திங்களின் பொங்கல் நல்வாழ்த்துகள்..

தைத்திருநாள் இன்று வந்ததடி பொங்கல் என்று
பாசிப்பயறு வறுத்து சக்கரை அமுது பொங்கி
பண்டிகை கொண்டாடி
பகிர்ந் துண்டு மகிழ்ந்திடவே...
 
தமிழீழ விடியலைத் தேடி போனவர்
வீடு திரும்பவில்லை
போகிப் பொங்கலில் பளையன கழியுதென
போனதை விடல்லாமா...
 
கொற்றவரெனும் கொடியவராலே
முத்தம் எங்கும் இன்னும்
ரெத்தம் காயாவில்லை
தைத் திருநாளின் தார்ப்பரியம் விட்டு
தன்மானம் சாகவில்லை
மங்கு சனியதனை மண்மேடாய் கொழுத்தி
பொங்கடா தமிழா தித்திப்பு பொங்கல்
 
இனச்சுத்தி கொலையில் ஈடான ஈழம்
காகித பூவாய் காய்ந்திடல்லாமா
வான்படை கண்ட வீரத் தமிழன்
சீருடை கொன்ட
வேங்கையின் வீரம் வீழ்ந்திடல்லாமா  
பண்ணுடைந்த யாழிணை
பண்ணிசைத்த பொங்கலே
தமிழர் திருநாளென
பொங்கு பொங்கு பொங்கு தமிழாய்
போர்மறை உயர்த்தி போகி கழித்து
மங்காச் சனியும் மங்கிச் சரியட்டும்
உலகப் பந்திலே தமிழீழம் மலரட்டும்
பண்டிகை கொண்டாடி
பகிர்ந் துண்டு மகிழ்வோம் நாம்
பொங்கடா தமிழா தித்திப்பு பொங்கல்..
Kavignar Valvai Suyen

செவ்வாய், 13 ஜனவரி, 2015

பூவே நீ பூவிழி உறங்கு...


மனசை பறித்தாய் எங்கே வைத்தாய்
மௌனத் தவத்தில் மூழ்கித் திளைக்கிறாய்
என்னைத் தொடாமல் ஏனோ போகிறாய்
ஏன்தான் இந்த மௌனம் சொல்லு சொல்லு
 
உன்னைத் தொடுவது இனியது
தொடுந் தூரம் தொலைவென்பதால்
தொடர் பறுந்த தூரம் இது
மது எது மாதெது மயங்குகிறேன்
மன திழந்து மௌனம் கலைந்தால்
இதயம் உடையும்
இருவிழி நனையும்
உடன் பாடில்லா முறன்பாடு
மௌனக் குளத்தில் வீழ்ந்துவிட்டேன்
மறுமொழி எதுவென தேடுகிறேன்
விடை எதுவென தெரிந்தும்
விழியினில் மூடி வைத்துவிட்டேன்
பூவே நீ பூவிழி உறங்க
கார் இருள் கொள்ளு
கலையா கனவில் வந்து கலவி
மௌனம் கலைத்திடுவேன் ...
Kavignar Valvai Suyen

வெள்ளி, 9 ஜனவரி, 2015

மலரின் மரணம்..


மலரே நீ அழகே அழகு..
மொட்டாக இருக்கயில்
உன் பட்டு இதழ்களை
தொட்டதில்லை சூரியனும்
 
சிட்டுக்களின் மகுடி கேட்டு
மொட்டுதழை ஏன் விரித்தாய்
பட்டுக் குஞ்சம் நடுவே
நீ சொட்டுத் தேன் கொடுத்தாலும்
சிட்டுக்கள் உன் இதழ்களில்
வைத்துப் போவது ரணங்களின் வடுவே
 
அழகெல்லாம் உன்னிடம் கொடுத்தவன்
உன் ஆயுளை ஏன் சுருங்கக் கொடுத்தான்
நீ, துயரக் கடலில் மூழ்குவதை கண்டுதானோ...
Kavignar Valvai Suyen

புதன், 7 ஜனவரி, 2015

வெற்றி தோல்வி....


வெற்றியும் தோல்வியும் என் இனிய நண்பன்   
எனக்குள் ஒருவன் நானாக இன்னொருவன்
இருவரில் வெற்றியே
என்றும் ஜெயித்துக்கொன்டிருக்கிறான்
தொடர்ந்தும் தோல்விக்கே தோல்வி
எப்போதும் நீயே முதலிடம்
ஏன் எனக் கேட்டேன் வெற்றியிடம்
வெற்றி சொன்னான்
நண்பா உற்ற தோழனாய்
நீ என்னில் இன்னும்
நம்பிக்கை வைக்கவில்லை!
வைத்துப் பார் நீயே முதலிடம் என்று..
வெக்கம் எனக்குள் ரேகை ஓடியது
என் நம்பிக்கை ஈனம் கன்டு!
Kavignar Valvai Suyen

எல்லாமே நீதான் எனக்கு...


என்னுயிரே உன் ஈர்ப்பு விழிகளை அறிவேன் நான்
ஈர் இஞ்சித் திரைக்குள் உலகை காட்டுனாய்
பருவ காலத்தில் தழிர்த்து
உரிய காலத்தின் முன் உதிர்ந்தாய் ஏன்  
பாலைவனத்தில் என் பாதங்கள்
இதயம் கேக்கிறது
இதுதானா வசந்தம் என்று...
Kavignar Valvai Suyen

திங்கள், 5 ஜனவரி, 2015

5ம், ஆன்டு ஒளிமுக நாள்..


எல்லாள ராசாவின் நினைவாலயம்தனில்
தின விளக்கேற்றி நினைந்துருகி தொழுத மகான்
திருவேங்கடம் வேலுப்பிள்ளை
சேரன் செங்குட்டுவன்போல் சிறையிருந்து
உயிர் நீத்து மரபு காத்த மாமனிதன்
தேசியத் தலைவன் பிரபாகரனின் தந்தை
நினைந்துருகி நிதம் தொழுவோம் நாம்..

கருப்பங்காட்டில் கட்டெறும்புகள் ..


 காதல் கரும்பா வேம்பா
கருப்பங்காட்டில்
கட்டெறும்புகள்
வேப்பங் காட்டில் சுட்ட பழங்கள்
சாதலே அழைத்தாலும் காதலே இனிக்கிறது
சுகர் கம்பிளைன்டில் உயிரே பிரிந்தாலும்
கருப்பங் காட்டைவிட்டு இளசும் பளசும்
இடப் பெயர்வு செய்வதில்லை ...
உயிர்த் தேன் எடுத்தேன்
அன்பு மலர்த்தேன் கலந்தேன்
அமுதத்தேன் அருந்தி இனித்தேன்
நற்தேன் நட்புக்கும் தந்து உளம் மகிழ்ந்தேன்...
Kavignar Valvai Suyen

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

இவளின் அடிமை நான்..


தொட்டால் சினுங்குகிறாள்
தொல்லை என விட்டுவந்தேன் 
விவாகரத்து வேண்டாம் என்கிறாள்
நான் துறவி என்றேன்
ஜீவனாம்சம் தரவேன்டாம்
இதயத்தை தா என்கிறாள்
விவகாரமானவள்தான் இயற்கையாள்
இதயத்துக்குள் எப்படி குடி வந்தாள்
இனி என் செய்வேன் இவளின் அடிமை நான்..
Kavignar Valvai Suyen

விவாகரத்து...


உனக்கும் எனக்கும் விவாகரத்து
இரு மனத்தின் திருமணப்பதிவில்
இணைக்கப் பட்டது ஒருமைப்பாடு
சந்தோச வாழ்வில்
சரிவேதும் கண்டதில்லை இருவரும்
சாட்சிக்கு இரு குழந்தைகள்
சந்தேகம் எனும் சாக்கடையில்
சாதுமிரண்டாய்
சன்னியாசமானது வாழ்க்கை
ஒட்டிய இதயங்களில் பிளவுகள்
குருதி நாளத்திற்குள்
உரிமை போராட்டங்கள்
ஊன் இல்லை உறக்கம் இல்லை
உள்ளம் செய்த பாவம் என்ன
ஒட்டி உறவாடிய எம்மை
வெட்டிப் போட்டது யச்சுமன்ட்டு
சம்சாரக் கனவில் மின்சாரம் பாய்ந்ததடி
எரிந்துவிட்டேன் உன் பிரிவு கன்டு
என் நிழல் என்றும் உனக்காக
என் நேரமும் நீ வரல்லாம்
உனக்கு நீயே நீதிபதி..
Kavignar Valvai Suyen

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...