வியாழன், 4 டிசம்பர், 2014

சிசுக் குரல் கேக்கலையோ...


சிசுக் குரல் கேக்கலையோ...
 
கருவறையில் தானே இருந்தேன்
நான் கவலை அறியேன்
தன் நலன்களை இழந்தே என்னை
ஜனனித்தாள் அன்னை இன்னும் நான்
குஞ்சாகவில்லை
அன்னை என்னை இறகிற்குள்  தவம் வைத்து
உயிர் தரும் முன்னே
சிசுக் கொலை செய்துவிட்டீர்கள்
பித்துப் பிடித்தவர்களே என்னை
பிய்த்துத் தின்கிறீர்களே
சிசுக் குரல் கேக்கலையோ ஒரு தரம் உங்களின்
குழந்தையின் முகத்தை பாருங்கள்...
 
Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்