வெள்ளி, 23 டிசம்பர், 2016

வானமே எல்லை !!!!பெண்,ணென்பார் மண்,ணென்பார் நிலா என்பார் - நிழல்
அற்ற நீரோட்டக் கூற்று போகட்டும் விட்டு விடு  
கருவறை இன்றி நின் கள முனை அன்றி
ஆணும் இங்கேது !    
தாய்ப்பாலுண்ட நிலை மறந்தே மாசுற்றோர்
தாழ்த்தி நிந்தனை தூத்தி துயரச் சிறையிட்டாலும்
போகட்டும் இறைவனுக்கே என
மன்னிக்கும் மகோனதமே
பூவும் பொட்டும் மஞ்சள் தாலியும் உன் கூலியல்ல
வானமே எல்லை வாங்கித்தாறேன் விண் வைரங்களை
தொடு வானம் இன்னும் கொஞ்சத் தூரம்தான் உனக்கும்

பாவலர் வல்வை சுயேன்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

ஓடம் என்று ஏறிவிட்டேன் !!!!காலக் கண்ணோட்டம் கண் மலர்ந்து
வேண்டுமா வேண்டாமா என்றது வாழ்வு
கை நிறைய பணம் இருந்தும்
பை நிறைய வேண்டுமே பந்தத்திற்கு
என் செய்வேன்
பூக்கள் வீழும் முன்னே பூக்களை தாங்கும்
காம்பே வீழ்ந்தது இங்கே

ஒன்றுக் கொன்று முறணான நீரோட்டம்
ஒன்று ருந்தால் மற்றொன்று காணாத்தூரம்
வாழ்வெனும் நதியில் மிதக்கின்றேன்
காலக்கரை ஏறுவேனா
காணவில்லை கரையை
ஓடம் என்று ஏறிவிட்டேன்
காகித ஓடத்தில் நிலை இல்லாப் பயணம்
நீரடியில் மௌனம் யாரும் அற்ற சலனம்

மூழ்கும் போதில் நிலாவின் முகம் பார்த்தேன்
என் ஆத்மாவின் துடிப்பை
நிலைக் கண்ணாடியாய்
அது காட்டிக்கொண்டிருந்தது
அன்பொன்றே அள்ளக்குறையாத ஒன்று
இனி என்ன அள்ளிக்கொள் என
ஆத்ம ஜீவனையும்
சமர்ப்பணம் தந்துவிட்டேன்
அன்பிருந்தால் அதை நீயும் கொடுத்துச் செல்
ஆத்ம பலன் கைகூடும்
ஆயிரம் வாசல் கொண்டது இதயம்
ஓட்டை வீட்டில் முள்ளும் மலரும்
பாத காணிக்கை கேக்கிறது
இதயம் பாவம் என்ன செய்யும்

பாவலர் வல்வை சுயேன்

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...