செவ்வாய், 2 டிசம்பர், 2014

காவல்த்துறை ...


காவல்த்துறை ...
 
மேனியில் காக்கிச்சட்டை மட மடப்பாய்
காவல்த்துறை வருகிறது
கறுப்புக் கண்ணாடிக்குள் கலப்படங்களை
கதவடைத்து கட்டுப்பாடென்கிறது
கள்வர்க்கும் காமுகர்க்கும் விபச்சாரிக்கும்
பினாமிகளாய் விழி அசைத்து
கண்ணியம் என்கிறது
லஞ்ச முதலைகள் இவர்கள் கொஞ்சுது கரஞ்சி
அஞ்சுவதில்லை அள்ளிச் சேர்ப்பதே
தம் கடமை என்கிறார் 
காக்கிச்சட்டையின் கர்ஜனை சினிமாவில்
இரசிகர்களின் கைதட்டல் அரங்கிற்குள்
ஐநூறு ரூபாய் பார்வை சீட்டோடு பறக்கிறது
ச்சீ... அனைத்தும் அசிங்கங்களாய் அபத்தத்துடன்
காவல் நிலையத்திற்கே காவல் இல்லை
கடமையை யார் உணர்வார்....
கடமை உயிரற்று கட்டையில் எரிகிறது.....
 
Kavignar Valvai Suyen

முடியாத இரவுகள் !!!

  இனியவளே கோவை இதழ் கொடியே   முன்னே என்னை காட்டும் கண்ணாடி நீ உனக்குள் இருந்தேன் நான் இடம் தேடி முடியாத இரவுகள் முன் கோப ஜென்...