ஞாயிறு, 29 மே, 2016

உண்மைதான் நீ அழகியடி!!!உச்சி மலைச் சாரல் வந்து உன் சேதி சொன்னதடி
உண்மைதான் நீ அழகியடி !
உருகாத மனமும் உனைக் கண்டு உருகிட
பனி மலையும் பயம் கொள்ளுதே உன்னிடத்தில்
உண்மைக் காதலின் முன் நீயும் நானும் வேறல்ல
துலைந்துவிட்டேன் உனக்குள் நான்
எங்கே தேடுகிறாய் என்னை நீ
நீ பாடும் பூபாளம் கேட்க ஆதவனும் வரும் முன்னே
என் நாளும் வருகிறேன் உன்னிடத்தில் என் கிராமியக் குயிலே !!!

பாவலர் வல்வை சுயேன்

நீ என்றும் சுமங்கலியே !!!!!சுவாசம் இழந்தபின் வாசம் செய்யுமோ இங்கு என் கூடு
ஒற்றைச் சுவாசம் ஒருபோதும் ரெட்டை கூட்டில் வாழ்வதில்லை
உயர் வாழ்வளித்தேன் உனக்கென நான் நினைந்திருந்தேன்
நினைவலை அறுத்து பந்தம் எரித்து பாதியில் போகுதே உயிரு !
கூடு விட்டுச் செல்லும் என் ஆவி
உன்னை கூட்டிச் சென்று குற்றுயிரில் குறுகிடாது
விதி முடிந்த தென வீழ்ந்துவிடாதே !
நதி எழுதும் சிற்றலை தொடரில் பூக்களை தூதுவிட்டு
பாக்களோடு பல்லவியாகு
சரணம் நிறைவுற்று பிறவிப் பெருங்கடலின்
பெரும் பேற்றுக் கரை ஏறி கனிவுறுவாய் நீ !

பாவலர் வல்வை சுயேன்

திங்கள், 23 மே, 2016

குற்றவாளி யார் !!!!!தூற்றுவார் தூற்றவும் போற்றுவார் போற்றவும்
மண்ணில் வந்து தவழ்கிறது மழைத் துளி !
மனிதா நீ என்ன தவம் செய்தாயோ
ஆழக் கிணறு தோண்டவில்லை
ஆகாசம் ஏறி வாங்கவில்லை
வளங்களெல்லாம் வாரித் தந்து
வடிந்து செல்கிறது மழை நீர் உன் வாழ்வுக்கு !              

வடிகால் மறித்து வரப்புயர்த்தி நிந்தனை செய்தவனே
கொள்ளுமிடம் கொள்ள சமுத்திரம் காத்திருக்க 
மாடி மனை கோடி செல்வம் அழிந்ததென்று
வன் சொல் வீசும் முன் உன் மனசிடம் கேட்டுச் சொல் !
இயற்கை தந்த கொடை பெற்று நீ என்ன செய்தாய் அதற்கு !

பாவலர் வல்வை சுயேன்.

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...