ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தினம் தினம் புலரட்டும் மே தினம் உனக்காக !!!!


உழைக்கும் வர்க்கமே நீயே உன்னத ஏணி

தன் நிலை உயர்விலே நீதான் தளரா ஞானி

எந் நிலை வரினும் வளைந்திடாதே கூனி

நீ இல்லை என்றால் விண்ணோடு உறவாடும்

மாளிகை மன்னர்க்கு வாழ்வில்லை உலகில்

கூலி என்றே வேலி போட்டு கூவும் மாந்தரை

கூடி எழுந்தே வென்றே மாய்த்திடு    

தினம் தினம் புலருமே மே தினம் உனக்காகபாவலர் வல்வை சுயேன்

சனி, 29 ஏப்ரல், 2017

பக்த்தன் நானே உன்மேல் பித்தனடி !!!


காற்றோடு கரம் கோத்து கைவீசிப் போகும் அழகே

கல்த்தறையில் உன் பாதம் துயருறக்கூடாதென்றே

பஞ்சணை விரித்த பசும் புற்கள்

உன் பாதம் கொஞ்சக் கொஞ்ச

சலங்கை நாதம் கேக்கிதடி....

வண்ணம் கொண்ட வளர் நிலாவே  

உன் வதனம் வாடாதிருக்க

நிழல் தூவிய முகில் களையும்

உன்னோடு உலா கூட்டிப் போகிறாய்உன்னோடு வாழவே ஊதாப் பூவாய்

உன் காலடியில் கிடக்கிறேன்

என்னை மிதித்து நீ எங்கே போகிறாய்  

பக்த்தன் நானே உன்மேல் பித்தனடி...பவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தங்கம் வாங்கும் என் செல்லம்மா !!!


ஓடி ஓடி ஓடாய் தேய்ந்து சேர்த்த பணம் என் செல்லம்மா

நீ சேமித்துச் செழிப்புற வாங்கி வையேன் தங்கம் தப்பில்லே

சேதாரம் இல்லையடி ஆதாரம்தான் அது அழிவே இல்லே  

வறுமை வந்துன் திண்ணையில் தூங்கினால்

கலங்காதே கண்ணே விற்றேனும் வாங்கிடுவாய்

வாழ்வும் வளமும்அட்சய திதியன்று தங்கம் வாங்கி சேர்த்து வைச்சா

ஊருக்குள்ளே உயர்வாயென ஊரே சொன்னாலும்

உன் புத்தி எங்கே போச்சு

வட்டிக்கு பணம் எடுத்து வாங்கி வந்த தங்கம் தானே

பெட்டியிலே செல்லரித்து உறங்கிதடி

பெட்டியிலே உள்ள தங்கம் குட்டி ஒண்ணும் போடலையே

வறுமை வந்து வாசலிலே வைராக்கியம் கொள்ளுதேடி

குசேலன் வீட்டுக் கூரை காண வாறாங்க ஊரவங்க

வாங்கி வைச்ச நகையாலே வாழ்க்கை இப்போ நாசமாச்சு

நிமிர்ந்து பாரேன் மேலே கொஞ்சம்

குசேலன் வீட்டுக் கூரை இப்போ நம்ம தலைமேலேபாவலர் வல்வை சுயேன்

வியாழன், 27 ஏப்ரல், 2017

சக்களத்திச் சண்டை !!!


மலரும் மங்கையும் மனசால் வேறல்ல – பட்

டாம் பூச்சியும் பக்கம் சென்று முத்தம் தரும் 

சுயம்பரத்திலும் சுய நலமே கொள்வார்  

எங்கே பூத்தாலென்ன

ஏழ் நிறம் கொண்டாலென்ன 

ஒருத்தருக்கே மாலையாக

வரம் வாங்கி வந்தாரோ

அறியேன் நான் !

சக்களத்திச் சண்டை உருவெடுத்தால்

சரிதான் போ செத்தான் ஆடவன் !!


பாவலர் வல்வை சுயேன்

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

ஒற்றை ஆணியில் வண்ணப் படங்கள் !!!

இனியவனே இறந்த காலக் கண்ணாடிச் சுவற்றில்

உடைந்து உருக்கி வார்த்த சிலைகள் நாங்கள்

நீ இருந்தால் என்னோடு

எதிர்காலம் உறவோடு

நிகழ் காலம் எம்மை சிதைத்துச் சிரித்தாலும்

வாழ்ந்தே வான் உயர்வோம் அன்போடு

என்னவனும் உன்னவளும் செந்தூர மேகமாய்

துயர் தூவி தூரம் சென்றாலும்...


ஒற்றை ஆணியில் வண்ணப் படங்களாய்

நம் கூட்டுச் சுவர்களில் வெள்ளை அடித்து

அவர் தம் நினைவாலே வாழ்த் தெழுதி

வாழ்வுயர ஆசி மலர் தூவுகிறார்...

உன் பிள்ளை என் பிள்ளை

இனி என்றும் நம் பிள்ளை

சந்ததி வாழ சந்தோசம் காண்போம் வா

தென்ரல் தீண்டும் இளமை விட்டு

இன்னும் உடல் சாயவில்லை


பாவலர் வல்வை சுயேன்

திங்கள், 24 ஏப்ரல், 2017

உன்னை தொட்டால் விண் மேகம்!!!!


உள்ளம் தொட்டு என் எண்ணம் தொட்டாய்

உன்னை அறிவேன் உன் மொழி அறியேன்

என் மொழி அறிந்தே

என்னை நீ மீட்டுகிறாய்....

உன் கடன் இன்னும் தீரவில்லை

உன் பணி உயர்வுக்கும் ஊதியம் இல்லை

எலியை பிடித்தே உண்ணுகிறாய்    

எங்கள் உணவை காத்தே உறங்குகின்றாய்

என்னை கண்டால் ஏகாந்தம்

என் கால்கள் தானே உன் வீதி வலம்

நாவால் பாதம் துவட்டித் துவட்டி

மியாவ் மியாவ் என மிகை ஒலி செய்கிராய்

புலியின் இனமே பூனைத் தம்பியே

எங்கள் இல்லம் மகிழும் செல்லம் நீயே

உன்னை தொட்டால் விண் மேகம்

உன் மொழியை கேட்டால் சுக ராகம்

சுதியும் லயமும் சுகமும் சேர்ந்து

என் துயரை போக்கிது எந் நாளும்

நன்றி எனும் வாய் மொழிக்கே

வாரித் தருகின்றாய் உன் வாழ்வாதாரம் ....பாவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அவர்ரவர் ரன்றி யார் அறிவார் !!!


புதை பொருளென்றால் தேடிக் காண்பார் உலகில் மறை பொருள் உமிழ் மனம் தனில் ஒளிர்ந்திடும் உணர்வினை அவர்ரவர் ரன்றி யார் அறிவார் ......
பாவலர் வல்வை சுயேன்

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

விற்பனைக்கல்ல நிந்தன் காதல்...


விந்தை அல்லடி நீயே உலகின் ஆதி மொழி     

எழுத்தாணி கொண்டு எழுதினேன் உன்னை

இந்தப் பிரபஞ்சமே என்னை திரும்பிப் பார்க்கிறது

என் தாய்த் தமிழே நீயே என் காதல் மொழி   

எதுகை மோனை தொடும் முன்னே

ஏதோ என்னை செய்கின்றாய்

பரிந் துரைக்கிறேன்

உன் பார்வை ஒன்றே போதும் எனக்கு

பகை நூறு வரினும் பஸ்பம் செய்திடுவேன்செந்நீரும் கண்ணீரும் சேர்ந்து செய்த கலவை நான்

நன்னீரும் உவர் நீரும் பஞ்சாய் பகர்ந்தெடுத்து

மும்மாரி பொழிகிறது என் மேல்

கண்டங்கள் கடந்து வந்தேன்

கானல் நிலம் கண்டு வந்தேன்

கற்பனைக் கெட்டா மொழி அழகே

வென்று வா மகனே என

எழுதிவிட்டாய் என் நாவில் உன்னை

விற்பனைக்கல்ல நிந்தன் மேல் நான் கொண்ட காதல்

அன்பால் அரவணைத்து அகிலத்தையும் அறிவேன் அன்பேபாவலர் வல்வை சுயேன்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

இறுதி எண்ணிக்கை பூச்சியம் !!!


உனக்கும் எனக்கும் இடையிலோர் கணக்கு
சேர்ந்தே வாழ்கிறோம் இது கூட்டல்
அமுதூட்டி அன்பு செய்தார் தாய் தந்தை
அவர்களின் மரணத் தூது வந்து சொன்னது-
கழித்தல்
பந்த பாச வடம் இழுத்து சந்ததி தந்தார்-
பெருக்கல்
கூடு விட்டு ஆவி போகும் நேரம்
பிய்த்தெறிந்தது உறவின் நெஞ்சை-
பிரித்தல்
கணக்குப் போட்டு வாழ்ந்தோர்கள்
இணக்கப்பாடு தீரும் முன்னே
இழுத்துச் செல்லும் இறுதிப் புள்ளி-
பூச்சியம்
எத்தனை முகவரி எத்தனை வடிவங்கள்
எங்கே இருந்தாலும்
எல்லோர்க்கும் இறுதி முகவரி ஒன்றே ஒன்றுதான்
அது மயானம்.....

பாவலர் வல்வை சுயேன்

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் உறவே...


சித்திரை பிறந்து தித்திக்கும் திரு நாளில்

மாறா அன்புக் காதலில் மனமுருகி

பொங்கு தமிழ் பா தொடுத்து

இவ் வையகத்து மாந்தரெல்லாம்

வாழ்வோம் வளமோடுதித்திக்கும் பொங்கலே பொங்கு பொங்கு

பூ மழை தூவட்டும் பாரெங்கும் மான்புறவே

வாழிய எங்களின் தமிழ் புத்தாண்டே

வாழ்வோம் நாம் இனிதே

நின் திரு நாமம் நாவெழுதி....பாவலர் வல்வை சுயேன்

வியாழன், 13 ஏப்ரல், 2017

உதிர்வுகள் இறப்பல்ல !!!


இலை உதிர் காலம்தனிலே
உதிர்வுகள் இறப்பல்ல
தலைமுறைத் தமிழர்கள்
தலை வாரி பூச் சூடவே
எமைச் சாய்க்கின்றோம்
இளமையும் முதுமையும்
இரவும் பகலும்தான்
சருகுகள் அல்ல நாங்கள்
சந்ததியின் தலைச்சர்களே

பாவலர் வல்வை சுயேன்

திங்கள், 10 ஏப்ரல், 2017

என்னை மறந்தேன் இனிதே மெல்ல !!

சொர்க்கத்தை வெல்ல வல்ல மௌன மொழியும்
தோற்றது உன்னிடத்தில் எங்கள் செல்லமே
உன் கொஞ்சும் தமிழ் வாய் மொழி கேட்டு
என்னை மறந்தேன் இனிதே மெல்ல
உள்ளக் கதவுக்குள் ஒளிந்துகொண்டு
மூன்று தமிழ் கோர்த்து முகவுரை தருகின்றாய் நீ
போதும் போதும் எங்கள் பூ மலரே
வாழையடி வாழையென வந்த வம்ச விளக்கே
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு வானுயர் செழிப்போடு
நலம் யாவும் உன் கை கோர்த்து நடக்குமே நூறாண்டு       

பாவலர் வல்வை சுயேன்

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

அழகான அந்த ஆலமரம் !!!

மண்பற்று மிகுந்த மனம் - விண்
தொட்டே உயர்ந்த குணம்
ஊர் நடுவே உந்தன் நிழலில்
உறவின் சங்கமம்
உலைக் களமும் கலைக் களமும்
உந்தன் நிழலிலே உரிமைச் சங்கமம்

ஊருக்கு உறு துணையாய் நீ இருக்க
கோடரி வீசி உன்னை அறுத்தும்
வீழாது மாழாது விழுதுகளில் வாழ்கிறாய்
மானக் குடை உனது வீரக் கிளை

குலம் வாழணும் மனை வாழணும்
ஊர்கூடி வாழ்ந்த இனம்
உரிமைக் கோலோச்சி
தாய் மண்ணில் ஏர் உழணும்
உரம் இட்டு ஏற்றம் இறைக்கின்றேன்
வேர் அறுத்தவர் குலம் நீறாகட்டும்
புலர் வேளை புள்ளினங்களோடு
புனர் ஜென்மம் காண்போம் எழு

ஆலும் வேலும் விட்டகலாது
உறவின் சங்கமம்

பாவலர் வல்வை சுயேன்

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...