செவ்வாய், 2 டிசம்பர், 2014

வர்ணனும் தரவில்லை தண்ணீர்.. .. ..


வர்ணனும் தரவில்லை தண்ணீர்.. .. ..
 
எலும்பும் தோலுமே எங்கள் அங்கம்
குடலும் ஒட்டிய நிலை அங்கும் பள்ளம்
உணவின்றி சாகிறோம் உறவிளந்து அழுகிறோம்
பிணம் தின்னும் கழுகுகள் வட்டம் இடுகின்றன
பசியால் வீழ்ந்த அன்னை அப்பனை தின்ட கழுகே
என்னையும் தின்னக் காத்திருக்கிறது
வறுமை கொடிதென்பார்
எம் வாழ்வே கொடிதினும் கொடிதாச்சு
வர்ணனும் தரவில்லை தண்ணீர்
பசி போக்க யாரும் இல்லை பாராமலே போகின்றார்
பார்த்தவரேனும் பால் இருந்தால் தாருங்களேன்...
 
Kavignar Valvai Suyen

அன்புத் தெய்வங்கள் !!!!!

முத்து முத்தாய் மழைத் துளி முத்தம் ஏன் வருகிது - நீ கப்பல் கட்டி திரவியம் தேட வாசல் வந்து வாழ்த்துது நித்தம் நித்தம் வரும் சூரியன் நில...