வியாழன், 31 மார்ச், 2016

கொள்ளி காட்டுலே மூங்கில் பல்லக்கு!!!!!நிழலோடு நான் இருந்தேன் வெயிலோடு ஏன் அழைத்தாய்
விதியோடும் மதியோடும் தேய்ந்தே உடைகிறேன் !
விதி போடும் கூண்டுலே மதியே நீ மரணம் என்றால்
மயில் தோகை எதற்கு மலர் மஞ்சம் எதற்கு
புதிரான வாழ்விலே புரிந்தே நான் வீழ்ந்துவிட்டேன்
கொள்ளி காட்டுலே மூங்கில் பல்லக்கு
நாற் புறமும் தீயே தன் பசி போக்க தின்கிறது !!!!!                               

Kavignar Valvai Suyen

வெள்ளி, 25 மார்ச், 2016

ஓடுது இங்கே கூட்ச் வண்டி !!!!!நான்கு கண்கள் இரு முனை இன்றநெற் நோக்க
சொந்த பந்தம் இல்லா சொந்த நினைப்போடு
முத்தம் கொடுக்கும் முதல் வகுப்பு பெட்டிகளில்
விழி வளி மொழி எழுதி வாசிக்கப்படுகிறது
முகவுரை இல்லா முகநூல் பக்கங்கள் !

அக்கரை பார்வையில் இக்கரை பச்சை
இக்கரை நோக்கின் எக்கரை பச்சை
லைக்கொடு லைக்காய் சற்றோடு லிப்ற் ஏறி
இன்றர் வலையில் நான்மறை வேதம் ஓதி
நற்துணை அறுந்து நலம் கெட வீழ்ந்தும்
முலாம் பூசிய இணைப்புக் கட்டைகளின் மேல்
ஓடுதிங்கே கூட்ச் வண்டி !!

தாவணிப் பெண்களின் தரம் தங்க முலாம் கொலுசு
அழகன் என முருகன் என பொய்யுரைத்த பித்தரும்
நேருக்கு நேர் நோக்கிய நோக்கலில்
அசலும் நகலும் தோற்றுப் போயின !!!
பிளாட்போம் அறிவிப்பு பயணிகளுக்கான கவனத்திற்கு
சிட்டுக்கள் தண்டவாளத்தில் தற்கொலை செய்திருப்பதால்
எநதத் தெடரூந்தும் இன்று ஓடாதெனச் செல்லி
காற்றோடு கலந்தது அந்த ஒலி !!!!
Kavignar Valvai Suyen

அக்கினிக்குண்டத்தில் அகம்பாவம் அழியட்டும் !!!
மூல நாயகனே முக்கண் இறையே சிவ சிவா
மதங்களின் வடிவில் உன்னை காண்கிறேன்
வேருக்கும் நீர் இன்றி நிழல் தரு மரமும்
போருக்குள் வீழ்ந்து மாள
உரிமை மீரலுக்குள் உன் அடியார்கள்
மானுட பிண மலைகளாய் குவிந்தும்
நீ வாராதிருப்பதேனோ ?

மதங்கள் எனக்கும் பிடிக்கும்
மதம் என்னை பீடித்திடாதிருக்க
நின் தாழ் பணிகிறேன்
பூயைகளில் பூரித்தது போதும்
எமக்கான யாக வேள்விக்கு நீயே நெய் ஊத்து
அக்கினிக்குண்டத்தில் அகம்பாவம் அழியட்டும் !

Kavignar Valvai Suyen

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...