திங்கள், 29 செப்டம்பர், 2014

விழி இன்றி நான் வந்தால்..


விழி இன்றி நான் வந்தால் - அது
விடியல் அல்லவே உனக்கு
இரவின் பனித்  துளிகளை
பகலவன் பார்க்க மறுக்கின்றான்..
தன் வருகையினால்
அழகிய பனித் துளியும்
உரு மாறுகிறதே என்று..
 
Kavignar Valvai Suyen

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

விலாசம் அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்..

விலாசம் அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்
அச்சடித்த வாக்குச் சீட்டில் அழ கழகாய்
அவனின் பெயர்..
வறுமைக் கோட்டின் வரிகளை
படம் பிடித்து காட்டிக் கொண்டிருக்கிறது
கடந்த தேர்தலில் கிடைத்த புத்தாடை
அவன் மேனியை கந்தல் கந்தலாய்..
 
அரசுடமை களவாணிகள் கட்சிக் கொடியுடன்
ஐந்தாண்டுக் கொருமுறை வேட்டித்  துண்டுடன்
குசேலரின் வாக்குச் சீட்டில்
கறுப்புப் பண குபேரர்கள் நாற்காலியில்..
அங்கம் எங்கும் தங்க நகை
அது உறங்க பணக்கத்தை மெத்தை
வீதி வாசி ஓலைப் பாயும் இன்றி இருட்டில் .. ..
 
Kavignar Valvai Suyen
 

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

இதயம் உன் தாய் வீடு ..


இதயம் உன் தாய் வீடு
இறை இருக்கும் இடம்
உன் கூடு.. ..
அடைக்கும் தாழ் இல்லை
இதயத்திற்கு.. ..
அது அடைத்து விட்டால்
உன்னுடல் மயானக் கேடு
மன்னுயிரும் நின்னுயிரென
நினைந்திடு.. ..
நீயும் தெய்வம் ஆகலாம்...
 
Kavignar Valvai Suyen

மணித் துளிகள் எண்ணப்படுகின்றன ...


மணித் துளிகள் எண்ணப்படுகின்றன
தினம், பிறந்து இறக்கும் நாட்களுக்காக
தன் ஊனினை உருக்கி
உயிரினை நெய்யாக்கி
அகிம்சைப் போரில்  நீராகாரமும் இன்றி
எண்ணிக் கொண்டான் மணித் துளிகளை
பன்னிரு நாட்கள் தியாக தீபம் திலீபன்..
 
அகிம்சையின் தந்தை காந்தி என்றால்
அவனின் தந்தை இவனாவான் 
அகிம்சைப் பிளம்பின்
அடியும் முடியும் இவனே..
சுய உரிமை தன்னாட்சி சுதந்திரம் தரவல்ல
தமிழீழமே தமிழரின் தாயகம் என்றான்
அமைதிப் படையென வந்த இந்திய அரசின்
வல்லாதிக்க முக மூடி கிழித்து சிதைத்தான்
 
இன்றுள்ளேன் நாளையும் இருப்பேன் என  
நல்லூரான் வீதியிலே நல்லுரை தந்தவன்
அறவளி நின்று அனலையும் தின்றவன்
என் தாய் எனக்கீர்ந்த
இன்னுயிரை தந்துவிட்டேன்
வெடிக்கும் மக்கள் புரட்சியில்
நாளை பிறக்கும் தமிழீழம் என்றே
இறவா வரத்தில் நீக்கமற நிறைந்து
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என்றான்....
 
Kavignar Valvai Suyen

வியாழன், 25 செப்டம்பர், 2014

இருப்பது சில நாள்!!


இருப்பது சில நாள் !!
உயிரே உயிரே நீ எங்கே எங்கே - உன்
தரிசனம் இன்றித் தினம் நான் இங்கே
நனைந்து காய்கிறேன் இறந்து சாய்கிறேன்
நதியின் நீரை விழியும் பெருக்கி
சிவந்து ஏங்கிதே ..
இருப்பது சில நாள் இடைவெளி பல நாள்
ஊடல், உனக்கும் எனக்கும் பாலமோ
காலம் கரைந்து உலரும் கனாவில்
இலவம் கிளியென இறக்கை விரிக்குமோ ..
தோழனே வா .. வா .. வா ..
உன் தோளினைத் தா .. தா .. தா ..
தேரினை ஈர்ந்த பாரியின் உறவே
ஊடல் போதும் உயிரே வா .. வா .. வா ..
பாவலர் வல்வை சுயேன்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

என்னடா உலகம் இது இதில் இனிமை எங்கே இருக்கிறது ..


என்னடா உலகம் இது – இதில்
இனிமை எங்கே இருக்கிறது
இன்பம் இரு நாள் துன்பம் பல நாள்
இரு விழி நீரில் நனைகிறதே.. ..

அன்பெனும் உறவில் ஆயிரம் தொல்லைகள்
அனு தினம் நானும் பார்த்துவிட்டேன்..
எனக் கொரு பிள்ளை பிறந்துவிட்டால்
என் நிலை எப்படி எடுத்துரைப்பேன்..
பெற்றவர் இல்லை தோள் தாங்க
நால்வர் வரலாம் என் பிணம் தாங்க
இதில் காதல் கொள்வதும் கண்மணி என்பதும்
காலம் விதைத்த பயிரடா
கண்ணீர் சிந்தும் மனிதராலே
கடலே உப்பாய் ஆச்சுதடா
கால தேவனே கருணை இருக்கா
விழி நீர் வற்றிப் போச்சுதடா
என்னடா உலகம் இது – இதில்
இனிமை எங்கே இருக்கிறது.. ..
 
Kavignar Valvai Suyen

இருண்டதினால் பகல் இறந்து விட்டதென்று ..


இருண்டதினால் பகல் இறந்து விட்டதென்று
பகலை மயாணத்தில் எரித்துவிடாதீர்கள்.!
என்னும் எட்டே மணித் துளிகளில்
அது ஒளி ஏற்றும் எழுந்து வரவேருங்கள்...
 
Kavignar Valvai Suyen

திங்கள், 22 செப்டம்பர், 2014

உயிர் மூச்சு எனக்குள் ஒளிந்திருக்கிறது ..


உயிர் மூச்சு எனக்குள் ஒளிந்திருக்கிறது - என்
பேச்சில் ஒளிவும் நியமும் கலந்திருக்கிறது    
இல்லை என்றால்  நிலை கண்ணாடி என் மேல்
கணை, தொடுப்பேன் என்கிறது...      
வாழ்ந்தவரை போதும் என்கிறேன்    
போதாது என்கிறான்
என்னொருவன் எனக்குள்ளே...    
அடிமைத் தழை இன்றி அங்கீகாரத்துடன்  
தாய் மண்ணை தழுவும்
தமிழீழ ஆலமரத்தின் விழுதுகளை
பார்த்துவிட்டுப் போ என்று...
     
விடிந்த விடியலை அறுத்த வல்லரசுகளால்  
தணியாமல் கிடக்கிறது தமிழீழத் தாகம்      
விடியுமா விடியாதா என்ற கேழ்வி மட்டும்
மிஞ்சி விட்டது...
மனசில் தெம்பில்லை மார்க்கம் ஏதும் இல்லை  
நாளைய மரணத்தை இன்றே வா என தூதனுப்பி   
கை,கோர்த்துச் செல்லக் காத்திருக்கிறேன்....
 
Kavignar Valvai Suyen

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

தென்றலுக்கும் திங்களுக்கும் எங்களுக்கும் தூரம் இல்லைத் தூரம் இல்லை ..


தென்றலுக்கும் திங்களுக்கும் எங்களுக்கும் 
தூரம் இல்லைத் தூரம் இல்லை
அஞ்சோம் அஞ்சோம்
யார் கண்ணுக்கும் தெரியோம்
இருண்ட வாழ்வில் இனியும் சிதையோம்..
 
அடுப்படி வாழ்வும் அகப்பையின் நேசமும்
பெண்ணுக்கே உரிதென்று உச்சிவரி வகுத்தவரே
நஞ்சு மாலை எங்கள் நகையாகும்
நய வஞ்சக நரிகள் எங்கள் பகையாகும்
கடலடி ஆளத்தை கையளவே கொண்டோம்
கடலைத் தோண்டியே கப்பலையும் புதைப்போம்
இது தமிழீழ வானம் தமிழர் கடல் யாகம்
ஏறி வந்த சாகரவர்த்தனவே
எமை எரித்து நீ நிதம் சிரித்தாயோ
எனதுயிர் ஆயுதமே உனதுயிர் காலனடா
இனி உன் தாழ்வு  எம் கடலடி ஆளமடா
முழக்கமும் மின்னலும் கூட
நாணம் கொண்டது தமிழீழத் தங்கையிடம்
இடியோடு வெடியாகி பிரகாரமானாள்
கடற்கரும்புலி லெப்டினன் கேணல் நளாயினி...
 
Kavignar Valvai Suyen

புதன், 17 செப்டம்பர், 2014

உன்னிரு விழிகளும் சொல்கிறதே நான் மாணவன் தான் ..


உன்னிரு விழிகளும் சொல்கிறதே நான் மாணவன் தான்
கொங்கைகள் எழுந்து சொல்கிறதே நீ எழில் ஓவியம் தான்
மன்மத பானம் அள்ளியே கொடு
இதழ்ச் சரம் எங்கும் சுரங்களை இடு
மதனும் ரதியும் இன்னொரு காலம்
இதுபோல் இதுபோல் காணாது போகணும்
ஆனந்த லோகம் அள்ளியே கொடு..
சோளக் காட்டுப் பொம்மைகள் கூட
சொக்கிப் போச்சுதடா
வில்லாளா உன் அம்பில் வீழ்ந்தே
கிறங்கிக் கிடக்கிதடா
ஒரு முறை என்ன  பலமுறை தொடு தொடு
வீழ்ந்தே வீழ்ந்தே எழுவேனே் நான்
அணையாத் தீ என்னை அடக்கிப் போடா
துரோணர் எதற்கு ஏகலைவன் உனக்கு
வித்தைகள்  சொய்தே அம்பினை விடு
பாஞ்சாலி நான்தான் பாவங்கள் நீக்கு
தீயினில் தீயட்டும் நாம் தீண்டிய இரவு..

Kavignar Valvai Suyen

கோப விழிகள் கொத்திக் கொல்லும் முன்னே ..


கோப விழிகள் கொத்திக் கொல்லும் முன்னே
கொதிக்கும் நெஞ்சோ பத்தி எரியுது இங்கே 
இக்கணமே நீ நேரில் வராவிடில்
இதயக் குடியிருப்பின் கதவுகள் சாத்தப்படும்
தவணை முறையில் காதலை கொல்லாதே
என்னவனே நீ எங்கே கண்ணெதிரே வா...
 
Kavignar Valvai Suyen

திங்கள், 15 செப்டம்பர், 2014

பழுத்த பழங்களை தோப்பிருந்து சூது கௌவி சாய்த்தாலும் ..


பழுத்த பழங்களை தோப்பிருந்து
சூது கௌவி சாய்த்தாலும்
மாறாக் காதலில் மனம் ஒன்றிய
வைரப் பனை மரங்கள் இவர்கள் .. ..
சரம் கொண்ட இதயங்களை
ஒற்றையாய் எரித்துவிடாதே கட்டையே
காலம் கனிந்த தென்று
உடன் கட்டை ஏற வந்தாலும்
உடன் பட்டுவிடாதே நீ..
இன்னும் வாழட்டும் இக் காதலர் நூறாண்டு..
 
Kavignar Valvai Suyen

சனி, 13 செப்டம்பர், 2014

கரை புறண்டு விளையாட ..


 
கரை புறண்டு விளையாட மழை வரவேண்டும் என்று
காத்திருப்பதில்லை கடல் - இருந்தும்
எதிர் பாராத பரிசம் தந்து                   
தன் உதட்டில் முத்தம் இட்ட  மழையிடம்
நாணம் கொண்டு நன்றி சொல்கிறது கடல்

தரை தட்டிய கட்டுமரம் நான்,
இதுவரை கிடைக்கவில்லை எனக்கு முத்தம்...

Kavignar Valvai Suyen

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

எரிமலை அருகில் இல்லை எரிகிறது மனசு ..


எரிமலை அருகில் இல்லை எரிகிறது மனசு
விதை நிலம் இங்கேயும் உண்டு
மழைக்கும் தெரியவில்லை
மானுட உடலில் எத்தனை எலும்புகள்
எண்ணுங்கள் எமதுடலில்
எக்ச்றே படம் தேவை இல்லை
ஒரு பிடி உணவுக்கு ஏங்கியே
வயிற்றுக்கும் நாவுக்கும் இடையில்
எமது வாழ்வில் நடக்கிறது போராட்டம்
பூலோகம் என்று யார் சொன்னார்
எங்கள் பூமியில்
சாமிகளும் செத்துவிட்டன
உங்களூர் சாமிகளை கண்டால்  
கொடுங்கள் எங்களூர் விலாசத்தை...
 
Kavignar Valvai Suyen

புதன், 10 செப்டம்பர், 2014

உயிர் என்ற மூன்றெழுத்தை கருவுக்குள் வைத்து..


உயிர் என்ற மூன்றெழுத்தை கருவுக்குள் வைத்து
என்னை பிரசவம் தந்த தாய் அம்மா ..
அன்பெனும் உருவே அம்மா
தெய்வத்தின் தெய்வமும் அம்மா
உங்கள் உள்ளத்தை கேழுங்கள்
அங்கே துடிக்கும் ஓசையே அம்மா...
                                                                                                       
Kavignar Valvai Suyen

எட்டாத் துலைவில் இருக்கும் நிலாவை..


எட்டாத் துலைவில் இருக்கும் நிலாவை
எட்டித் தொடுகிறான் கவிஞன்
எட்டும் துலைவில் நான் இருந்தும்
தொடாமல் நிற்கின்றாயே.!
என்னை நானே  கிள்ளிப் பார்த்தேன்
உண்மைதான், என்னை அள்ளி
ஆராதனை செய்து கொண்டிருக்கிறாய்
நீதான்டா.. நீதான்டா..
என்  உள்ளம் கவர் கள்வன்...
 
Kavignar Valvai Suyen

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

கள்வனே காமுகனே உன் மந்திரச் சிரிப்பில்..

 

கள்வனே காமுகனே உன் மந்திரச் சிரிப்பில் – என்
கொலு சொலியை துலைத்துவிட்டேன்..
என் பித்தன் நீ என எண்ணியே
நழுவ விட்டேன் தாவணியை
வலி நிறைந்த வாழ்வுச் சமாதியில்
என் பெயரை எழுதிவிட்டாய்
உன் உயிரணுக்கள் உயிர் கொண்டு
உறுளுதடா என் வயிற்றில்
உன்னை, சிறையிடுவேன் சிதையிடுவேன்
சிரிக்காதே சீண்டாதே நான் கண்ணகி அல்ல...
 
Kavignar Valvai Suyen

திங்கள், 8 செப்டம்பர், 2014

இன்பமும் துன்பமும் மருந்தென உண்டு ... 
 
இன்பமும் துன்பமும் மருந்தென உண்டு - உயிர்
கொண்ட கூட்டிலே உளன்றேன் இறைவா
உடல் விட்டுப் போகும் உயிர்
சுடு காட்டு உதிர் நீறாய்
உதிராதே உதிராதே
உன் முகம் கண்டேனடா
தேர் ஏறி வரும் திருக்கோல முருகா
தேகம் சிலிர்த்திட தாகம் தணித்து
மானுடம் அறிந்தேனடா
தணிகாசலனே சரணம் சரணம்
நின் திருவடி சரணம் ஐயா...
 
Kavignar Valvai Suyen
 

 

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...