புதன், 30 ஜூலை, 2014

புன்னகை இதழ்கள் பாசமலராகி பூத்திருக்க ..


புன்னகை இதழ்கள் பாசமலராகி பூத்திருக்க
இதயத்தை இதயம் சுமந்து இன்புற்றது ..                   
இருந்தும் இரும்புப் பெட்டிகள்
பணத்தைச் சுமப்பதினால்
பணமா பாசமா பெரிதெனும் தேடலில்
தொக்கிச் சாகிறது வாழ்க்கை .. ..

கட்சி உண்டு கொள்கை உண்டு ..


கட்சி உண்டு கொள்கை உண்டு
உத்தமரும் நினைவில் உண்டு
தாய்க்குலத்தின் தணையனுங்க நானு
உயிர் உள்ளவரை போர் இடுவேன்..
உரிமைதனை வென்றுடுவேன்..
பெண் குலத்தின் சுதந்திரத்தை
கூண்டில் இட்டு பூட்டி வைக்கும்
தீயவரை வேர் அறுப்பேன்..
நாளைத் தேர்தல்ச் சாவடியில்
கள்ள வோட்டு போடாதீங்க
தலைவன் என்னை ஆதரீங்க
என் கட்சி ஜே கே கட்சி..

செவ்வாய், 29 ஜூலை, 2014

உன் பெயர் தனை இனி ஒரு முறை நான் சொல்ல மாட்டேன் ..


உன் பெயர் தனை இனி ஒரு முறை
நான் சொல்ல மாட்டேன் ..
காதல் என்பது காமம் அல்ல
கழட்டிப் போடும் சட்டை அல்ல
மறந்துவிடு என்கிறாய் ..
எடுத்துப்போ இதை ..
உயிர் இல்லாக் கூட்டுக்குள் இருந்தால்
இறந்துவிடும் இதயம் ...

யாதி வெறியில் வீதி வளி செல்லும் பாதி மனிதா ..


யாதி வெறியில் வீதி வளி செல்லும் பாதி மனிதா - உன்
கூட்டுக்குள்ளே வாழும் மனசில் மிருகம் ஏனடா ?
கூடு விட்டு கூடு மாறி உறுப்பும் வாழுது
குப்பன் தந்த உதிரம்தானே உனக்குள் ஓடுது
மாற்றுத் திறன் தந்து மரணம் தவிர்த்து விட்டு
மனிதன் வாழ்கிறான் ..
மரணக் குழி வெட்டி உன்னை புதைத்து விட்டு
நீ எங்கே போகிறாய் ?

திங்கள், 28 ஜூலை, 2014

உன்னிடத்தில் நானும் என்னிடத்தில் நீயும் ...


உன்னிடத்தில் நானும்  என்னிடத்தில் நீயும்
இலக்கணப் பிளைகளை
இழை நேர் செய்து கொண்டிருந்தோம்
தடா என்றுது, தமிழரசு .!         
இமைப் பொழுதில் ஊரெங்கும்
ஒரே மின் வெட்டு.!
இருட்டிலும் இலக்கியம் வரைந்தோம்
எழுத்துப் பிளைகள் இல்லை
பத்தாம் மாதத்தில் பிள்ளை மலருடன்
ஆடியது தொட்டில் ... ..

ஞாயிறு, 27 ஜூலை, 2014

முற்றத்து மூன்றாம் பிறை என்கிறார் என்னை ..


முற்றத்து மூன்றாம் பிறை என்கிறார் என்னை
அச்சத்தில் இன்னும் நான் அகதி முகாமில் .!
மாற்றான் இட்ட அனல் காலம்
மாசொடு திங்களெல்லாம்
என்னைச் சுத்தி எரிக்கிறது ..
மூத்தகுடியின் முன் பிறந்த என் தாய்த் தமிழே
நீ செம் மொழியான பின்னும்
செங்குருதிச் சிறைக் காட்டில்
இன்னும் நானும் நீயும் .!
என்று தணியும் தமிழீழத் தாகம் .?
தளிருக்கும் இல்லை இங்கு வசந்த காலம் ..

சின்னப் பூவே அபர்ணா..


சின்னப் பூவே அபர்ணா.. 
பத்தாண்டை எட்டித் தொட்ட
பட்டாம் பூச்சி நீ ..
வண்ணச்  சிறகு விரித்து
சிட்டாகப் பறக்கும் உன்னை
தொட்டணைத்து
இனிதே வாழவைக்க
இன்னும் நூறாண்டு காலங்கள்
உனக்காக காத்திருக்கின்றன ..  
என்றென்றும் நலமோடு
வாழ்க வளமுடன் நீ  ..

அதி காலை தந்த ஆதவன் ..


அதி காலை தந்த ஆதவன்
விழியோடு பேச வந்தான்
இமைகள் இரண்டும்
முத்தம் இட மறுத்துவிட்டன.!
அங்கும் இங்குமாய்     
புறண்ட என்னை
அன்னை அழைத்தாள்
அமுதப் பால் அருந்த
எழுந்தேன் , என் பாதங்களை
அன்னை மண்ணும் முத்தம் இட்டு
நெஞ்சாற வாழ்த்தி நிழல்  தந்தது
அன்னையின் பிள்ளைகள் நாங்கள் ...

சனி, 26 ஜூலை, 2014

என்னை, தனியேவிட்டு நீ, எங்கே சென்றாய் அம்மா ..


என்னை, தனியேவிட்டு - நீ
எங்கே சென்றாய் அம்மா ..
இன்று ஆடி அமாவாசையாம்.!
அன்னை தந்தையர்க்கு ,
அமுது வைக்கிறார் ..
எனக்கு என் நாளோ ..?
அன்னம் இட யாரும் இல்லையே ..

அழகை மிஞ்சிய அழகை தேடுகிறாய் ..


அழகை மிஞ்சிய அழகை தேடுகிறாய்
குழந்தை என்னை முத்தம் இட்டே
குமரியாக்கிவிட்டாய் .!
இதயம் பஞ்சாகி பற்றுகிறது உன்னை
இருந்தாலும் அஞ்சுகிறேன் .!
என் எதிர்காலம் என்னாகும் என்று ...

மருத்துவமான பூண்டை உணவில் ..


மருத்துவமான பூண்டை உணவில்
மகத்துவம் கொண்டால் ..
நலம் வாழ வாழ்த்துகள் வேண்டியதில்லை
வாழ்வெலாம் நலமே பூண்டுனால் ....

வெள்ளி, 25 ஜூலை, 2014

எனக்குள்ளே எனக்குள்ளே என்னாச்சு ..


எனக்குள்ளே எனக்குள்ளே என்னாச்சு
ஆசை மழை கண்ட தூறல்
தன்னை கொஞ்சம் நிறுத்திவிட்டு
என்னை ஏதேதோ ஏதேதோ செய்யுதடா .. ..    
என் உஷ்ணக் காய்ச்சலில் காய்ந்த ஜன்னலோ 
சாரல் நனைந்த குளிர் விட்டு
முத்தச் சத்தம் கொடுத்து விரகம் மூட்டுதடா .. ..
மாதென் செய்வேன் .. ..?
இதழ் ரசம்தானே இரவுக்கு ஆகாரம்
என்னைத் தொடுவது நீயாகட்டும்
நான்கு இதழ்களும் நான்மறை எழுதட்டும்
விடியலும் உட் புகாமல்  ஜன்னலைச் சாத்திவிட்டு
குதூகலித்து காத்திருக்கிறது மனசு ...

வியாழன், 24 ஜூலை, 2014

பகலை தருகிறான் சூரியன் ..


பகலை தருகிறான் சூரியன் ..
இரவில் ,
ஒளியை தருகிறான் சந்திரன்
ஆடவர்தானே ஏற்றுகிறார்
ஒளி விளக்கு ...
தோழனே விளக்கேற்ற
ஒரு பெண் வேண்டுமா .?
 
நான் தட்டும் தீப்பெட்டியை
நீயே தட்டி ஏத்திக் கொள்
பத்திக் கொள்ளும்
குத்து விளக்கு .!

ஞாயிறு, 20 ஜூலை, 2014

அழகா அழகா என் ஆருயிர்த் தோழா ..


அழகா அழகா  என் ஆருயிர்த் தோழா 
விழிகளில் புகுந்து  ,
என்னில் குறும்புகள் செய்கிறாய்  ..
இதயத்திற்குள்  உன்னை  சிறை வைத்து
சாவியை துலைத்துவிட்டேன்  . ..
இறக்கை இல்லை இருவரிடமும்
இருந்தும் ஆனந்த வாழ்வில்
எங்கோ பறக்கிறோம் ..            
புதிய உலகம் காணும்வரை
உன்னிடம் நானும் என்னிடம் நீயும்
ஆயுள் கைதிகளே .. ..

சனி, 19 ஜூலை, 2014

என்னவளே உன் பார்வையில் கனிந்ததடி ..


என்னவளே உன் பார்வையில் கனிந்ததடி
என் வாழ்வின் வசந்தம் ..
குடும்பம் எனும் ஆலயத்திற்குள்
நீக்கமற நிறைந்திருந்து பன் முகம் காட்டி
பரவசம் தருகிறாய் ..
அன்பெனும் அரவணைப்பை
அன்னையிடம் கண்ட பின்
உன்னிடம் தானே கண்டேன் இதுவரையில் ..
கோபத்தில் நீ கொதிக்கும் சூரியன்
பாசத்தில் நீ பனி மலைச் சாரல்
பெற்றெடுத்த குஞ்சுகள் பிள்ளைகள்தான்
கட்டு மீறலாம் கவலை நீரலைகள்
உச்சி வந்த சூரியன் உள்ளங் கால் சுட்டாலும்
நீ தந்த உச்சக் குளிரின் பாசச் சாரலில்
நின்றே வாழுகிறார் அவர்  என்றும் மறவார்  ..
வென்று விட்டாய் நீ
தொன்று தொட்ட வாழ்வை
நானும் நன்றே நனைகிறேன்
வாழ்க்கைச் சோலையில்
பனித் துளி கொஞ்சும் பசும் புல்லாய் ...

வெள்ளி, 18 ஜூலை, 2014

என் தாய் தந்தையர் எனக்குத் தந்த தங்க வளையலில் ..


என் தாய் தந்தையர் எனக்குத் தந்த
தங்க வளையலில்
அவர்கள் என் மேல் விரித்திருக்கும்
பாசக் குடை கண்டேன் .. ..
அடகுக் கடையில் என் வளையல்
வட்டி போட்ட குட்டிக்காக                                
விலையான போதில்
எங்கள் வீட்டின் ஏழ்மை கண்டேன் .. ..
தங்கம் என்ன வைரம் என்ன
பொன்னும் மணியுமாய் பாச நெற்கள்
விளைந்து கிடக்கும் வயல்தானே
எங்கள் வீடு ..
அன்போடு அறுபடை செய்து
என்றும் இன்பமாய் வாழ்கிறோம் .. ..

பூ , மலர்கள் பூத்துவிட்டால் சாமிக் கென்பார் ..


பூ , மலர்கள் பூத்துவிட்டால் சாமிக் கென்பார்
சாமி கோப விழி திறக்கும் என்றோ
சாமரை வீசுகின்றார் ..
அர்ச்சனை பூக்கள் இல்லையோ
நாங்கள்...
எதுகுமே இல்லை என்றால்
எடுத்துக்கொள்ளுங்கள்
எங்களின் உசிரை .. ..

உயர்ந்த மனிதன் பூமிக்கு வந்தான் ..

உயர்ந்த மனிதன் பூமிக்கு வந்தான் ..
நிறங்கள் வேறானாலும்
மனிதன் வேறல்ல ...

வியாழன், 17 ஜூலை, 2014

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ..


ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே ..
பாட்டில் வடித்து  ஏட்டில் கிடக்கிது
பாழும் கிணற்றில் பாசிச் சுவரொடு
கூண்டில் கிடப்பதேன் தோழர்களே ..
 
ஆடிக் கறக்கணும் ஆவன செய்யணும்
வேடிக்கை மனிதரை வேரோடு
சாய்க்கணும் ..
காலம் எமக்கொரு காலம் பிறக்குது
தீய காவல் அரன்களை
காற்றில் கலைக்கணும் ..
பூத்திரி முகத்தில் பூச்சுடர் ஏற்றி
பாசிப் பயருடன் கூழுங் குடிக்கணும்
ஏற்றம் அழைக்குது ஈழம் தெரியுது
எழுந்து வாருங்கள் எம் தோழர்களே...

புதன், 16 ஜூலை, 2014

வண்டி கட்டி போறீங்கையா வரிசையில் ..


வண்டி கட்டி போறீங்கையா வரிசையில் – வறு
மை இல்லாச் சாலை வீதி உங்களுக்கானது ...
கையளவு கஞ்சியிலும் நனையவில்லை என் வயிறு
ஏழ்மை உற்ற சேரிச் சாலை எங்களுக்கானது ...
உழைப்புக்குரிய ஊதியம் ஒரு நாள்
என்னையும் சேரும்
அன்றே திரிப்பித் தருவேன்
இன்று நீங்கள் தரும்
ஒத்தை ரூபாய் நாணயத்தை
நாணயத்தின் ஒரு முகம் நீங்கள் ..
மறு புறம் நான் ..

பசி வேளை வந்ததடி ..


பசி வேளை வந்ததடி - இன்னும்
பாரா முகம் ஏனோ ..
கட்டு நூல் அவிழ்க்கிறேன்
சுட்டாலும் குடித்திடுவேன்
மணல் ஊதி ..
பசி வந்தால்  பத்தும் மறக்கிதடி
உன் கட்டுமரக் காதலன்
கரையேறும் வரைக்கும்
நான்தானே உன் கா...
நிந்தனை செய்யாதே என்னை ..
நீ எந்தன் செல்லம் நான் உன் செல்லம்..

செவ்வாய், 15 ஜூலை, 2014

நான், முள்ளிருக்கும் மலர் எனத் தெரிந்தும் ..


நான், முள்ளிருக்கும் மலர் எனத் தெரிந்தும்
உன் கூந்தலில் எனக்கொரு வாழ்வளித்தாய்
ஒரு நாளேனும் உனக்காக வாழ்ந்தேன்
என்ற இறுமாப்பில் ..
புன்னகை பூர்த்து என்னிதழ் உதிர்ந்து
போகிறேன் .. ..
என்றும் மறவேன் உன்னை நான் ..

வியாழன், 10 ஜூலை, 2014

எய்யும் அம்புக்கு ஏது எல்லை ...


எய்யும் அம்புக்கு ஏது எல்லை ...

என் உறவே இது உங்கள் தாகம் என் தாகம் தமிழனின்  தமிழீழத் தாகம்...  இது தூர நோக்கின் இலக்கென்பதை யாரும் மறந்துவிடும் நிலையில் இல்லை.  முப்பது ஆண்டுகள் விடாது சமர் புரிந்த இதிகாசமோ புராணமோ வரலாறோ சரித்திரமோ இயல்பு நிலை அரசுரிமை சான்றோ இதுவரையில்  பொறிக்கப்படவில்லை. எங்கள் தேசத்தில் தமிழீழம் என்ற சுய உரிமை போராட்டம் நிகழ்ந்து பொறிக்கப் பட்டு நிந்தனையில் எரிந்து நீறாகிக் கிடக்கிறது.  அதன் இலக்குமட்டும் மையத்தை விட்டு மாறாமல்  உண்மையாய் உடலை விட்டகலாத உயிரோடு அனலிடைப் பயணத்தில் அங்கும் இங்குமாய் சிதறிக்கிடக்கிறது..  பச்சோந்திகளின் நடுவே முளைத்த நம் விசுவாசத் தலைவன் யாருக்கும் அஞ்சாதவன் அன்புக்கு அடியவன். இவன் தந்த யுத்த களங்கள் வீரத்தின் விளை நிலம் என பெயர் எழுதிய பொன் எழுத்துக்களும் பெயர் வாங்கிக் கொண்டதை உலகே அறியும். நித்திய வாழ்வு நிரந்தரம் அல்ல  ஆசை யெனும் பேய் இவனை ஆண்டதில்லை ஒரு நாளும் அடுத்தவன் காலில் மிதிபடும் இழி நிலை இனியும் வேண்டாம் என்று உன்னத வாழ்வின் உரிமை பெற்றே வாழவேண்டும் என்ற வீரம் தந்தவன் எம் தலைவன் .. எம்மினத்தின் விடிவுகால சக்கரமாய் திகழ்ந்தவன். அவன் தந்த தொடர் போராட்டங்கள் இன்று எங்கோ ஒரு மூலையில் பேச்சுக்கு வாதமாய் வலம் வந்தபோதும் நீரூற்றி நிழல் தரு மரங்களாய் வளர்கிறது.  தூற்றுவார் தூற்றுனீர்களே போற்றுவோரும் போற்றி நின்றீரே கொடுத்த விலை கொடுத்த தியாகம் கொடுத்த உயிரின் உன்னதம் அனைத்தும் தமிழீழ விடிவுக் காகத்தானே கொடுக்கப்பட்டது. கடையில் வாங்கும் பொறுள் அல்ல சுதந்திரம்..  உறவுகளே உனக்கொரு பாதி எனக்கொரு பாதியென பாகம் பிரித்தது போதும். உணர்வலை ஊற்றிலே உள்ளொளி பெருக்கி சமுதாய சூழலுக்குகந்த நல் நிலை வகுத்து ஆனந்தம் அள்ளித் தந்தானே ஆதவன் என வந்த பிரபாகரன்.

பொறாமை கொண்ட உறவுகள் காட்டிக் கொடுத்தன இன்னும் சற்றே இறங்கி  கூட்டியும் கொடுத்தன. அற்ப்ப ஆசைகள் காம இச்சைகள் யாதி வெறிகள் ஈகோ இழி நிலைகள் இத்தனைக்கும் மொத்த உருவாய் நின்று ஆனந்தம் கொள்கிறார் இன்னும் சிலர் நம்மிடையே காட்டிக் கொடுப்போரே நீரும் அடிமை என்பதை ஏனோ நினைந்தும் மறைக்கிறீர்கள். அடிமையென அதி கீழ் நிலையில் வாழ்வது மேலா ஒருமைப் பாட்டோடு ஒன்றே இனம் என்ற  பெருமித ஆட்சியில் நன்றே வாழ்தல் பெரிதா.... யாருக்கானது ஈழத் தேடல். உனக்கானது உன் எதிர்கால வம்சத்திற்கானது. உன்னைப் போல் தனக்கென்றும் தன் பிள்ளைக்கென்றும் தன் சந்ததிக்காக என்றும் நினைத்தானா தானைத் தலைவன் பிரபாகரன்.  காட்டிக் கொடுத்தாய் கூட்டிக் கொடுத்தாய் கை நிறைந்த காசை எண்ணி  நெஞ்சம் இனித்தாய்  அது உனது சிற்றின்பச் சாரலாய் இருக்கலாம் உன் மனையாளும் உனக்கு சொந்தம் இல்லை உன் பிள்ளையும் இப்போது உனதில்லை மாற்றான் கொடுத்த  அழகி உன் அந்தப் புறத்தில்  ஆனாலும் நாளை உன் களுத்தில் கத்தி வைப்பவள் அவள்தான் என்பதை நினைவிற்கொள். முப்பது ஆண்டுகள் கொண்ட தவக்கோலம் இழப்புகளின் உயிரில் கிடைத்த வெற்றிக் கனியான காலம் கரைந்து விட்டது என மூடி வைக்கும் புத்தகம் அல்ல தமிழீழப் போராட்டம்..  எரிந்த சாம்பல் தூசிகள் எங்கோ பறந்துவிட்டது என கனவு காணாதீர்கள். தமிழ் இனத்தின் விடுதலைச் சுவாலை அணையாது இளந்த உயிர்களில் இருந்து பாலைவனச் சுவாலை மீண்டும் ஒரு நாள் எழும்  நிச்சயம் விடிவினை தொடும் . செம்மொழி என பேர்சூடி  ஊர் கூட்டி உறவுக் கணக்கில் நிலுவை சேர்த்த உத்தமரே இனத்துக்காக மோதும் விடுதலை ஊற்றே உன்னையும் என்னையும் இனிவரும் நம் சந்ததியையும் தன்னாட்சி உரிமையோடு வாழ வைக்கும்..  தாய் நிலத்தின் தடைகள் உடையும்  தூர இலக்கின் கணை தன் நிலை பெறும். எய்யும் அம்புக்கு எல்லை இல்லை ..

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...