mardi 28 avril 2015

ஊருக்குள் ஓடிவந்தாள் கங்கை ...


நீரற்ற நிலத்தில் நட்டுவைத்தான் இறைவன் எங்களை
கல்லணைக்குள் கட்டுண்டாலும்
கருணை விழியுடையாள் ஊருக்குள் ஓடிவந்தாள்!
வந்தவள் கங்கையெனக்கண்டு சிந்தை குளிர்ந்தோம்
நிமிடத் துளிகளுக்குள் ஏமாற்றிவிட்டாள் அவளும்
தேரடித் திருவிழாவின் சிதறு தேங்காய் இளநீராய்
கூட்டத்தில் தெளிக்கப்பட்டது தண்ணீர்
அன்பு நிறைந்தோரும் வம்புச் சண்டையில்
குடங்கள் உறுண்டு குழிவிழுந்து
குந்தவைத்த பெண்ணாய் ஓரத்தில் கிடக்க
தெரு முனையில் ஓடிமறைந்தது தண்ணீர் லாறி...
Kavignar Valvai Suyen

samedi 25 avril 2015

பசும் புல்லின் பனித்துளிகள்...


கால நியதியில் மறைந்துவிட்டான் இறைவன்
ஆயுள் குறில் இல்லாதவன் அவன்!
அஞ்ஞாத வாசத்தின் ஆளுமை அற்றவன் மனிதன்
ஆயுளே அழிந்துவிடும் நீ திரும்பும் முன்னே
ஊர் உன்னை ஏய்க்கும் உலைக்களம் போகாதே
ஒரு துளி கண்ணீரில் ஓராயிரம் வலிகள்
வைராக்கியம் கொள் மறுமலர்ச்சி மிகை தரும்
மழைத்துளியின் பெருமைதனை
விழிகள் அறியாமல் விரதம் கொண்டதில்லை
பகலவன் எரித்தாலும் பசும் புல்லின் பனித்துளிகள்
உன்னை அழைக்கிறது...
Kavignar Valvai Suyen

vendredi 24 avril 2015

எய்ட்ச்...


எட்டுக்கால் பூச்சி என்றோ வட்டம் இடும் கழுகென்றோ
சுட்டிலக்கம் இல்லாதது, எய்ட்ச்!         
இச்சைக் குளத்தில் அச்சம் கொள்ளேல்
காப்புறுதி இல்லா கலவிச் சங்கமத்தில்
உள்ளிருந்தே உயிர் கொல்லும்
உலகின் பயங்கரவாதி எய்ட்ச்!
 
உலகயுத்தம் உயிர்களைத் தின்பதுபோல்
ஆறு வினாடிக்கொரு ஜீவனை
உலகில் எய்ட்ச் சாகடிக்கிறது!
உலகப் போர் என்றால் ஐநா நிறுத்தும்
அந்தரங்கக் கலவியில்
அறியாமலே கொல்லும் எய்ட்ச்சை
எந்தச் சபை நிறுத்தும்
 
டிசம்பர் ஒன்றில் உலகே விழித்து உள்ளம் நொந்தாலும்
காப்புறுதி இல்லா கலவியில் கரைந்தே போகுது உசிரு
யாரை யார் நோவதென்று யாருக்கும் தெரியவில்லை
சிற்றின்ப வேளையில் சிரு உறை இல்லையேல்
கோட்டைக் கவசம் இருந்தும் உசிருக்குச் சேதமே
விஞ்ஞானக் கூடம் தேடல் விரித்து எய்தும்
எய்ட்ச் எனும் இயமன் இறக்கவில்லை
அவன் மரணிக்கும் வரைதனும் அணியுங்கள்
அவசியம் காப்பக உறையை..
Kavignar Valvai Suyen

mercredi 22 avril 2015

சுயசரிதை....


நான்  நான் என மார் தட்டும் மானிடா
எதை அறிந்து தட்டுகிறாய் நீ
எரிந்து நீறாகும் போதும்
தன் சுயசரிதை எழுதிச் செல்கிறது விறகு...
Kavignar Valvai Suyen

mardi 21 avril 2015

பக்த்தன் நானே உன்மேல் பித்தனடி...


காத்தோடு கரம் கோத்து கைவீசிப் போகும் அழகே
கல்த்தறையில் உன் பாதம் துயருறக்கூடாதென்றே
பஞ்சணை மெத்தை தந்த பசும்புற்கள்
சலங்கை நாதம் கேக்கிதடி
வளர் நிலாவே வாடும் உன் வதனம் வாடாதிருக்க
தரை நிழல் தூவிய முகில் கூட்டங்களையும்
உன்னோடு உலா கூட்டிப் போகிறாய்
உனக்காக நான் ஏதும் செய்ததில்லை இதுவரை
ஊதாப் பூவாய் உன் காலடியில் கிடக்கிறேன்
எங்கே போகிறாய் நீ
பக்த்தன் நானே உன்மேல் பித்தனடி...
Kavignar Valvai Suyen

lundi 20 avril 2015

எக்கரை இனி நான் ஏறுவேன் ...


இன்ப இழை படகு வீட்டில்
அந்த நிலா வராத போதும்
ஒளிமயம் கண்டேனடி
வல்லினம் மெல்லினமாய்
உற்ற இடையினம் எனும்
மூன்றுடன்  நீ வந்தவேளை!
 
சொல்லாட்சி தந்து நல்லாட்சி கொண்டவளே
வலம் சுற்றும் விழியிரண்டும்
மெல்லாசை கொண்டதென்ன
அன்புள்ள ஆணையில் அணை உடைத்து
துடுப்பில்லா ஓடம் ஆனேன்
எக்கரை இனி நான் ஏறுவேன் என்னவளே
எங்கே அழைத்துப் போகிறாய் என்னை நீ
கரை ஏறவேண்டும் கண்களை மூடிவிடாதே
உன் விழியே நான் காணும் கலங்கரை விளக்கு.....
Kavignar Valvai Suyen

mardi 14 avril 2015

புதிதாய் ஒரு பொங்கல் செய்வோம்...


இன்பங்கள் தொலைத்து துன்பநிலை வீற்றுருக்க
மன்மத ஆண்டென வந்த ஆண்டே
மனத் திருப்பதிக்கும் சொல்ல
நா, கூசுகிறது நீ இன்பம்தர வந்தாய் என்று....
பளம் பஞ்சாங்கத்தின் பரிந்துரையே
நீ புதிதாய் ஏதாச்சும் சொல்லாயோ
இல்லார்க்கு இல்லை என்றில்லா
வளம் கொழிக்கும் நாள் என் நாளோ
வாரித்தருவாயோ அந்நாளை அழைத்துவா
புதிய பொங்கல் செய்து வரவேற்கிறோம் உன்னை...
Kavignar Valvai Suyen

lundi 13 avril 2015

எச்சி இலை...


அன்னை யாரோ ? ஆண்டவன் யாரோ ?
அனாதை என்கிறார் என்னை !
ஆற்றுவார் யாரும் இல்லை
அன்றாடம் உணவுக்கே அலைகிறேன்!
மன்மதனை மார்பில் சுமந்தவள்
கருவில் சுமந்த பிள்ளையை
குப்பையில் வீசிவிட்டாள்
உத்தமியா இல்லை அவள் பத்தினியா
ஊர் நாய்கள் தின்னும் சதைப் பிண்டமா 
எச்சி இலையாய் எதற்காக என்னை எறிந்தாள்
ஏன் உணரவில்லை அவள்தானே எச்சி இலை...
Kavignar Valvai Suyen

dimanche 12 avril 2015

விழிச் சிறையில் சிரித்து வாழ்கிறேன்...


அழகே உன் விழிகளுக்குள் என்னை கண்டேன்
சின்ன விழிகளிடம் ஏனோ கோபம் வரவில்லை
விடை தரவேண்டாம் என,
விட்டு வந்துவிட்டேன் என்னை அங்கே!
சிறையில் இருந்தாலும் சிதைவின்றி வாழ்கிறேன்
அழகிய மௌன விழிகளுக்குள்...
Kavignar Valvai Suyen

samedi 11 avril 2015

பெயர் சொல்லும் பிள்ளை....


என் எண்ணக் குடியிருப்பின் ஏந்திழை அவள்
அவள் அங்கம் தனில் எங்கும்
முத் தமிழின் வாசனை...
மொழி எனும் பூக்களை பறித்து
பாக்களை சூடிக் கொடுத்தேன்
என்றும் பதினாறே என வரம் தந்துவிட்டாள்!
வாசிகசாலை எங்கும் இறவா வரத்தில் நான்
பெற்றோரின் பெயர் சொல்லும் பிள்ளையாய்...
Kavignar Valvai Suyen

முக்காடு மறைப்பதில்லை எதையும்..


உச்சி மலை குளிர் ஊதாக்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!
வீசப்படுகிறது ஆசை வலைகள் .....
சினிமா மோக விதைகளாய் முக நூலில்!
வெள்ளித் திரையும் காணா அறிமுகம் நீ
அள்ளக் குறையா அழகுவனம் நீ
விரைந்து வா தாரகையே
வெற்றித் திரை காத்திருக்கிறதென!
வெற்று நாக்குகள் பறிக்கும் ஆகாசத் தாமரைகளை 
அள்ளி அள்ளிச் சூட்டுகிறது உங்கள் மேல்
பூத்தவனம் உம்மிடத்தில்
வெளிநாட்டுக் கரஞ்சியும் வெண்பனி மினுப்பும்
பொன்னும் மணியுமாய் மின்னுவதாலே..
 
உறுமீன் நீதான் என தெரிந்த நாரைகளுக்கு
ஒற்றைக் கால் தவம் கடிதல்ல
ஓடும் மீனை ஓட விட்டு
கொத்தக் காத்திருக்கிறது உன்னை!
நட்சத்திரக் கனாவில் மிதந்து நட்டாற்றில் சிதைந்துவிடாதே
எச்சி இலை அம்மணமாய் சாலை ஓரத்தில் நாளை
உன் தேகம் விலையாகும் முன் விழித்துக்கொள் இப்போதே
முழுக்க நனைந்த பின் முக்காடு மறைப்பதில்லை எதையும்..
Kavignar Valvai Suyen

dimanche 5 avril 2015

கிறிஸ்துவின் உயிர்ப்பு நாள்..

யேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா
ஈஸ்ற்றர் திரு,நாள் நல் வாழ்த்துகள்...

samedi 4 avril 2015

இனிய பிறந்தநாள் விஷ்னு ...





எங்களின் ஐந்தாவது பேரன் ஆனந்தராஜா விஷ்னுவின் முதலாவது பிறந்தநாள் ...

jeudi 2 avril 2015

சிக்ச்டீன் லவ்..


இறக்கை இன்றி பறக்கிதிங்கே பந்து  
அங்கும் இங்கும்
இளவட்டப் பதினாறின் பூங்கரங்கள்
அலைபாயும் விந்தை கண்டு
சைடவுட்டால் சாய்க்கிறாள்
வலை தாண்டி ஏவுறாள்
சிக்ச்டீன் லவ்வில்
கேம் வோலை கொய்கிறாள்
கொடுப்பனவு யாருக்கென்ற கேழ்வியில்
கொட்டா விழிகள் கடுப்பேற்றி ஏய்க்கிறது மனசை..
Kavignar Valvai Suyen

mercredi 1 avril 2015

பூங்கொடியே புன்னகை பூச்சரமே...


பூங்கொடியே புன்னகை பூச்சரமே
உன் தோகை வர்ணம் கண்டு
தொட்டிலில் ஆடி மகிழ்ந்தேன்
அன்றாடம் நீ உதிர்ந்த புன்னகையில்
அல்லியிடம் மயங்கும் திங்களும் தோர்த்ததடி
 
உன் சிரிப்புக்குத் தாழிட்டு நீ சினம் கொண்டதால்
இருள் மூழ்கிப் போச்சுதடி நம் வீட்டு நந்தவனம்
கார் இருளில் உன்னைத் துலைத்து
என்னை இழக்க எனக்கேது சம்மதம்
மரணத்தின் மன்றம் என்னை அழைக்கிறது
உன் புன்னகைச் சரம்தனை உதிராயோ
சந்தோசச் சாரல் தொட்டு நன்றி தந்து போகிறேன்..
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...