திங்கள், 15 டிசம்பர், 2014

என் சின்ன வீடு...


என் சின்ன வீடு...
 
உறக்கத்தில் கிடந்தேன் – என்னை
எழுப்பினாள் என் சின்ன வீடு
என்னென்று கேட்டேன்
மறுமுனையில் யாரோ பேசவேண்டுமாம்
உத்தரவு தந்துவிட்டு
கன்னங்களை முத்தம் இட்டவண்ணம்
ஒட்டுக் கேட்டாள்.. ..
 
அந்தப்புற அழைப்பில்  என் அந்தரங்க நாயகி
அவள் இனிமை கேட்டு ஸ்பரிசங்கள் சூடாகி
மந்திரத்தில் கட்டுண்டவனாய்
ச்சு, ச்சு,
முத்தங்கள் கொடுத்தேன் அவளுக்கு
ஒலி முத்தம் கேட்டு அவள் சினுங்க
என் உதட்டு முத்த ஈரத்தில் நனைந்த சின்னவீடு
எனக்கொரு யாடை வீசி புன்னகை சிந்திவிட்டு
உறங்கிவிட்டாள்....
அடுத்து வரும் தொலைபேசி அழைப்பில்
என் உதட்டு முத்தத்தில் நீராடும் மகிழ்ச்சியில்..
 
Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்