mardi 23 avril 2019

ஏன் இந்த வன்மம் நரனே!!!


உயிர்த்த ஞாயிறு மரித்ததே இறைவா 
மரண ஓலம் தேவன் கோவிலிலே 
மிதவாத வன்ம மதவாதம் ஏனடா 
இனிய வாழ்விற்கு மறை நூல் பொய்யோடா 
ஆழ்ந்த இரங்கலும் அனுதாப அலையும் 
மீழ் தருமா மாண்டோர் உயிர்தனை 
அரிதென பெற்ற மானிட வாழ்வினை 
முள் முடி ஏற்றி சிலுவையில் அறைந்தீரே 
உம் மதம் எம் மதம் என 
ஏதாச்சும் சொன்னாரா பூவும் பிஞ்சும் 
எம்மதமும் சம்மதமே ஆன்றோர் அனைவர்க்கும் 
அறியாயோ நரனே ஆணவம் அநீதி காடே

பாவலர் வல்வை சுயேன்
21.04.2019

vendredi 19 avril 2019

தாழம்பூ நாகம் !!!


கொல்லாமல் கொல்லும் கண்ணே
நீ., தாழம் பூ நாகமடி (டா
மெய்யான அன்பை பொய்யாக்கி
விலைக்கு விற்றுவிட்டாய்...!
மணல் வீடு கட்டவில்லை நான்
மழை கண்டு துடிப்பதற்கு
மாளிகை கட்டவில்லை
யுத்தம் கண்டு அஞ்சுதற்கு
ஆராதனைக்குரியவளே 
நீயும் நானும் இணைந்து கட்டியது 
காதல் கோட்டையல்லவா

ஏன் தகர்த்தாய்..?
கோடு போட்டு வாழ கூசுதடி டா நெஞ்சம்
கூடுவிட்டு ஆவி போனால்
கூடும் இடத்தில் காண்போம் சமரசம்

பாவலர் வல்வை சுயேன்

samedi 13 avril 2019

நந்தவனப் பந்தலிலே மாறாப்பு !!!


பூ மேனி பூத்திருக்க பூ கொய்து போனவனே
செம் பவளம் சிரிக்குதடா செங்கோல் மன்னா
எத்தனை முறை நீ கொய்தாலும்
நந்தவனப்  பந்தலிலே மாறாப்பு சிக்குதடா
நூலாடை விடை கேட்டு வீழும் முன்னே
நீரோடை நதி ஆனது உன்னால்
போராடும் மனசு போர்க் களத்தின் புரவியிலே
வீழ்ந்தாலும் நான் விழுப்புற்றே வீழ்வேன்
கள முனையில் காத்திருக்கேன்
எனை வெல்ல என்று நீ வருவாய்
எத்தனை முறை நீ பூக்களை கொய்தாலும்
வெற்றி நிச்சயம் எனக்கே எனக்குத் தான்....

பாவலர் வல்வை சுயேன்

mercredi 10 avril 2019

ஏதறிவாய் ஜீவனே !!!


மாயை சூடும் வர்ண வாழ்வே
அறிவேன் உன்னை அஞ்சேன்
அன்பு நிலையும் அறுவடை சாவும்
கண்கள் கனன்று சொரிய
எழுகின்றோம் வீழ்கின்றோம்
எண்ணில்லை என் செய்வோம்

ஆசைத் தூறலில் அழிந்தே வீழும் கூடுது
கட்டை எரிந்திட கல்லறை சிரித்திட
புழுவாகி பூடாகி புழுத்தலில் 
உருகும் ஜீவனுக்கு
இகபர வாழ்வு இனிப்பா கசப்பா
தேடுகிறேன், எழுதிய புத்தகம் எங்கே
எட்டவில்லை!
தத்துவ ஞானம் தாளா நின்று
மீளா பொய்கை விட்டகல்வேன்
விடை கொடு விரும்புகிறேன்

பாவலர் வல்வை சுயேன்

dimanche 7 avril 2019

கூடலும் ஊடலும் நாடகமே !!!

மார்கழி துகிலே உன்னை
விரகம் கொள்ளா விழி பருகி
வியப்புற்றேன்

துகிலாடை அவிழ்க்கும்
துச்சாதணன் அல்லேன்
பனி தூங்கும் பசும் புல்லில்
திறக்காத கதவில்லை
கறுப்பு வெள்ளை ஓவியமே
விருப்போ வெறுப்போ
உன் நெருப்பு முகம் அறியேன்
இரும்பறை இதயத்துள் பூந்துகிலும் தடையோ
துருப்பிடித்த பூட்டென தொடு நிலை அற்றதேன்
திறவுகோல் எங்கே வைத்தாய் சொல் கிளியே

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...