சனி, 16 ஆகஸ்ட், 2014

கப்டன், அங்கயற்கண்ணி ..


கொடு நிலை உளன்று சிறு நிலை அகற்றி
கடல் கலம் தனை எரித்த கனலே
உன் உயிரே உனக்கு துச்சமடி
தமிழீழ விடுதலை ஒன்றே உனது நேசமடி
தலைவன் பிரபாகரனின் தங்கை நீயல்லவா
வீரப் புலிப் படையணியின் புயலல்வா
நீரடி மூழ்கி பேரிடி முழங்கி கந்தக வெடியில்
கயவரின் போர்க் கப்பலை எரித்தாய் ..
யாரடி உனக்கு நிகர் சொல்
பாரதி இன்றில்லை காண்
நீயே புரட்சி பெண்ணின் முதல் படைப்பு
இனியும் பணியாது பெண்ணினம் மிதி பட்டு
உன் நினைவலை ஏறி நின்னடி தொழுகிறோம்
வீரத் திருமகளே நீ வாழி ....

மனம் கொத்தி பறவை !!!

வண்ண நிலா வந்த திங்கே தென்றலை தூதனுப்பி தென்னங் கீற்றும் தலை ஆட்டுதடி வெண் முகிலே உனை பார்த்து ஈரம் இல்லா முத்தம் எங்கும் ம...