mercredi 31 mai 2017

பொன் வான ஓடம் நீ ....

ஏஞ்சலே வந்து போகிறாய்
ஏதேதோ சொல்லத் துடிக்கிறாய்
பிஞ் செனவே எண்ணாதே
அஞ்சுகமே அஞ்சாதே
எந் நாளும் பஞ்சணையில்
என்னை நீ கொல்லாதே...

கொல்லாமல் கொல்லும் கண்ணே
பொன் வான ஓடம் நீ
தூரக் கண்ணாடியில்
ஏதே தோ எழுதுகிறாய்
நம்பிக்கையே நல் வேதம்
நான் அறிவேன் உன் தாகம்
நான்கு சுவர் வேலிக்குள்
நற் தவம் கொள்வோம் வா.. வா..

பாவலர் வல்வை சுயேன்

lundi 29 mai 2017

மௌனமே காதலாள் ....

அகழ் வாராச்சியும் அறிவேன் உயிரே
ஏன் இந்த மௌனம் உனக்குள்ளே
அறியேன் அறிந்திட
எதைத்தான் கற்றறிவேன்
மடல் நீக்கி ஓர விழி காட்டு
என் தேடலுக்கான விடை
கிடைக்கிறதா என காண்கிறேன்


பாவலர் வல்வை சுயேன்

jeudi 25 mai 2017

எல்லோர்க்கும் பெய்யும் மழை!!!

நிழல் தரு உயர்வில் நீள நினைந்தேன்
ஏந்திழை என் செய்வேன் ஏதறிவேன்
உதிர்வெனும் இறப்பில்
இமைகளும் இளந்தேன் ...
தனிமை கொடிதாய் கொன்றிட        
இதய நரம்புகளையே (சு)வாசித்தேன்
துளிர்கள் பற்றின துணைக் கரம் பெற்றேன்
பூக்களின் வாசம் பூமிக்கும் தெளித்தேன்
கால மாற்றம் கண்ணீரை துடைத்தது
பூபாளம் பாடும் குயில்களே
கூடி வாருங்கள் குடியிருக்க   
இலையுதிர் காலம் திரும்பும் முன்னே
வசந்த காலம் வாழ வா எங்கிறது
நல்லார் இங்குளார் எனில்
எல்லோர்க்கும்,
பெய்யென பெய்யும் மழையே

பாவலர் வல்வை சுயேன்

mercredi 24 mai 2017

நைகராவும் உறங்கி விழிக்கட்டும்!!!


கொள்ளும் இடமும் கொள்ளா ஆசை
உயிர் உள்ளவரை சங்கமிக்கும் சாரல்
என் இதயம் நீயாக
உன் இதயம் நான் ஆக
முத்த மழை பொழிகிறது
சத்தம் இன்றி
நைகராவும் உறங்கி விழிக்கட்டும்
ஈடில்லா காதலை காணும் விழிகளே
கனிவோடு செய்வீர் தூய காதலே

பாவலர் வல்வை சுயேன்

மடல் திறந்த இதழ்கள்!!

அன்றலர்ந்த தாமரையின்
ஆருயிர் தோழனே
தினம் நீராடும் உன் தோழியின்
கொடி இடை நீ வருடுவதால்
இதழ் மலர்ந்து தருகிறாள்
பரிச முத்தம் உன் தோழி!

கொண்டவனின் துணை இன்றி
விழி நீர் வறண்டோடி
நின்று லர்ந்து வீழ்ந்துவிட்டேன்
மணல் காட்டில்!
தண்ணீர் இல்லையேல் தாமரை உதிர்கிறாள்
கண்ணீர் வெள்ளத்திலே நானும் காய்கிறேன்
மடல் திறந்த இதழ்களை,
விளுமியங்களே காயம் செய்கின்றன!

பாவலர் வல்வை சுயேன்

lundi 22 mai 2017

பாஸ்ற் பூட் பரிணாமம் !!!

மண் சட்டி சோற்றுக்கும்
மீன் கறிக் குளம்புக்கும்
அன்றொரு வாசம்
என் மன்னவன் மகிழ்ந்து
புன்னகை பூத்திட
நடு நிசி தோர்க்கும்

இன்றைய வாழ்வுக்கும்
இல்லற ஜோதிக்கும்
இரும்பறைக் காலம்
இதில் பந்தமும் பாசமும்
பாஸ்ற் பூட்டை பரி மாறி
பறக்கின்ற பரிணாமம்

நடு நிசி ஏதென்றும்
நண் பகல் எதென்றும்
யாருக்கும் தெரியவில்லை
ஞாயிறின் வருகைக்கும்
வானுயர் உயர் வுக்கும்
தேய் பிறைக் காலம்
வளர் பிறையாய் வருவார் கோடி
முழுமதியாய் ஆவார் சிலரே...

பாவலர் வல்வை சுயேன்

mardi 16 mai 2017

எதுவரை என்பது தெரியாது !!!

பொய்யின்றி பொய் சொல்லும் உன் கண்கள் அழகு
உயிருக்கு உயிரான சினேகம் அதன் அழகு
திகில் நிறைந்தே இருந்தது கடந்த இரவும்
நான்கு சுவர்களுக்குள் பக்கம் பக்கமாய்
புரட்டி நாம் படித்துக் கொண்டிருந்தோம்
இருட் டறையும் கண்டு விரண்டது
பூத்திரியும் ஒரு கணம் மௌனித்து
சுடர் ஒளி வீசி வெக்கித்து குனிந்தது

எதுவரை என்பது இருவக்கும் தெரியவில்லை
அதுவரை என்றால் ஆனந்தமே ஆருயிரே
அன்று நாம் போடும் முற்றுப் புள்ளியில்
ஆயுளும் முடிந்துவிடும்
முற்றுப் புள்ளியை முதலில் இடுவது யார்
அதுதான் புரியவில்லை இருவருக்கும்.....  

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...