samedi 18 octobre 2014

காதலித்தேன் காதல் வாழ்வை ..


காதலித்தேன் காதல் வாழ்வை, ஐயம் இல்லை
இனிமை நிறைந்த உலகமே  ...
இனி ஒருமுறை சொல்ல மாட்டேன் இவள் பெயரை
காமமே காதல் என்கிறாள்
களட்டிப் போடும் சட்டை என்கிறாள்
மறந்துவிடு , மண வாழ்வுக்கு வேறொருவன் என்கிறாள்
எடுத்துக் கொடுத்துவிட்டேன் என் இதயத்தை
உயிர் இல்லாக் கூட்டுக்குள் இதயம் இருந்தால்
இறந்து விடும் என்பதற்காக.. ..
காதலித்தேன் இவளை ,
இவள் என்னை காதலித்து பார்த்திருக்கிறாள்....

Kavignar Valvai Suyen

vendredi 17 octobre 2014

காதலித்தேன் காதல் வாழ்வை ..


காதலித்தேன் காதல் வாழ்வை, ஐயம் இல்லை
இனிமை நிறைந்த உலகமே  ...
இனி ஒருமுறை சொல்ல மாட்டேன் இவள் பெயரை
காமமே காதல் என்கிறாள்
களட்டிப் போடும் சட்டை என்கிறாள்
மறந்துவிடு , மண வாழ்வுக்கு வேறொருவன் என்கிறாள்
எடுத்துக் கொடுத்துவிட்டேன் என் இதயத்தை
உயிர் இல்லாக் கூட்டுக்குள் இதயம் இருந்தால்
இறந்து விடும் என்பதற்காக.. ..
காதலித்தேன் இவளை ,
இவள் என்னை காதலித்து பார்த்திருக்கிறாள்....
 
Kavignar Valvai Suyen

jeudi 16 octobre 2014

காதலை காதலித்தேன் காலம் என்னை காதலித்தது ..


காதலை காதலித்தேன் காலம் என்னை காதலித்தது
எல்லைக் கோடுகள் என் வழி மறித்தன
உறவுக் களம் தனில் வீழ்ந்து ஊடலில் நொந்து
கானகம் கிடந்தேன்..
ஜீவன் உள்ள காதல் எனக்கு ஜீவிதம் தந்தது
கரும்பும் வேம்பும் கலந்து செய்த கலவையே
காதல்...

Kavignar Valvai Suyen

mercredi 15 octobre 2014

கொடி மலர் என்னை கொய்தவனே ..


கொடி மலர் என்னை கொய்தவனே
நல்லறம் கண்டேன் உன்னிடத்தில்
இல்லற வாழ்வில் இனிதெனும் தேனை
அன்பெனும் சாரலாய் தெளிக்கின்றாய்
உன் மனம் அறிந்தே      
உள்ள தெல்லாம் தந்தேன்
இன்னும் உன் கரம் ஓயவில்லை
என்னிடம் ஏதேதோ கேட்கின்றாய்..
 
பாவலர் வல்வை சுயேன்

mardi 14 octobre 2014

ஒத்தை மரமாய் நான் தனித்திருக்க நித்தம் என் நிழல் வந்தவனே ..



ஒத்தை மரமாய் நான் தனித்திருக்க
நித்தம் என் நிழல் வந்தவனே
சாய்ந்தாடத் தோள் தந்தேன்
ஆடும்வரை ஆடி
இளந் தளிர் பூப் பறித்து
பட்டமரம் என விட்டுச் சென்றாய் என்னை     
 
இலையுதிர் காலம் தெரியாதோ நோக்கு
வசந்த காலத் தழைகள் கண்டு மீண்டும்
பூப்பறிக்க வருகிறாய் கரம் கொண்டு
விட்ட குறை மீதம் இருக்க
தொட்ட குறை ஏதடா என்னிடத்தில்
தொடராதே தொலை தூரம் போய்விடு
துவண்ட மனசுக்குள் தூறல் நின்டுபோச்சு..
 
Kavignar Valvai Suyen

ஏதோ ஏதோ ஒரு மின்னல் என் விழியை பறித்ததென்ன ..


ஏதோ ஏதோ ஒரு மின்னல் என் விழியை பறித்ததென்ன
என்னை கட்டிக் கொண்டதோ கனலில் இட்டதோ
பட்டுச் சாய்கிறேன் பூவே....
நீ என்னை விட்டுப் போகிறாய்
இது என்ன மாயமோ.. என் நிழலும் தேயுதே ..
                                                  
மின்சாரக் கொடியே இடை இல்லா நூலே
சிக்காத நெஞ்சு சிக்கித் துடிக்கிதடி
அடிவானம் கறுத்து அருந்ததி ஆச்சு
அம்மி மிதிக்கலாம் அதில் இல்லை மூச்சு
தீண்டாத விளக்கில்லை திரிக்கூட்டில் நெய்யிட்டு
விடி வானம் கையேந்தி மடிப் பூவை தொட்டில் இட
விளையாட வாடி வாடி
மின்னலாய் என்னைத் தொட்டவளே ..
 
Kavignar Valvai Suyen

lundi 13 octobre 2014

அதிகாலைக் குயில் கூவியதடா ..


அதிகாலைக் குயில் கூவியதடா
அன்பே நீ எழுந்துவிட்டாய் என்று
ஆலய மணியும் அழைத்ததடா
அதிகாலை பூசைக்கு நீ
வந்துவிட்டாய் என்று.. ..
இல்லை என்று சொல்லிவிடாதே
இன்றோடு முன்னூறு நாட்கள்
உன் எதிரே நான்,
வாழ்க்கைத் துணை வரம் கேட்டு..
 
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...