jeudi 16 octobre 2014

காதலை காதலித்தேன் காலம் என்னை காதலித்தது ..


காதலை காதலித்தேன் காலம் என்னை காதலித்தது
எல்லைக் கோடுகள் என் வழி மறித்தன
உறவுக் களம் தனில் வீழ்ந்து ஊடலில் நொந்து
கானகம் கிடந்தேன்..
ஜீவன் உள்ள காதல் எனக்கு ஜீவிதம் தந்தது
கரும்பும் வேம்பும் கலந்து செய்த கலவையே
காதல்...

Kavignar Valvai Suyen

mercredi 15 octobre 2014

கொடி மலர் என்னை கொய்தவனே ..


கொடி மலர் என்னை கொய்தவனே
நல்லறம் கண்டேன் உன்னிடத்தில்
இல்லற வாழ்வில் இனிதெனும் தேனை
அன்பெனும் சாரலாய் தெளிக்கின்றாய்
உன் மனம் அறிந்தே      
உள்ள தெல்லாம் தந்தேன்
இன்னும் உன் கரம் ஓயவில்லை
என்னிடம் ஏதேதோ கேட்கின்றாய்..
 
பாவலர் வல்வை சுயேன்

mardi 14 octobre 2014

ஒத்தை மரமாய் நான் தனித்திருக்க நித்தம் என் நிழல் வந்தவனே ..



ஒத்தை மரமாய் நான் தனித்திருக்க
நித்தம் என் நிழல் வந்தவனே
சாய்ந்தாடத் தோள் தந்தேன்
ஆடும்வரை ஆடி
இளந் தளிர் பூப் பறித்து
பட்டமரம் என விட்டுச் சென்றாய் என்னை     
 
இலையுதிர் காலம் தெரியாதோ நோக்கு
வசந்த காலத் தழைகள் கண்டு மீண்டும்
பூப்பறிக்க வருகிறாய் கரம் கொண்டு
விட்ட குறை மீதம் இருக்க
தொட்ட குறை ஏதடா என்னிடத்தில்
தொடராதே தொலை தூரம் போய்விடு
துவண்ட மனசுக்குள் தூறல் நின்டுபோச்சு..
 
Kavignar Valvai Suyen

ஏதோ ஏதோ ஒரு மின்னல் என் விழியை பறித்ததென்ன ..


ஏதோ ஏதோ ஒரு மின்னல் என் விழியை பறித்ததென்ன
என்னை கட்டிக் கொண்டதோ கனலில் இட்டதோ
பட்டுச் சாய்கிறேன் பூவே....
நீ என்னை விட்டுப் போகிறாய்
இது என்ன மாயமோ.. என் நிழலும் தேயுதே ..
                                                  
மின்சாரக் கொடியே இடை இல்லா நூலே
சிக்காத நெஞ்சு சிக்கித் துடிக்கிதடி
அடிவானம் கறுத்து அருந்ததி ஆச்சு
அம்மி மிதிக்கலாம் அதில் இல்லை மூச்சு
தீண்டாத விளக்கில்லை திரிக்கூட்டில் நெய்யிட்டு
விடி வானம் கையேந்தி மடிப் பூவை தொட்டில் இட
விளையாட வாடி வாடி
மின்னலாய் என்னைத் தொட்டவளே ..
 
Kavignar Valvai Suyen

lundi 13 octobre 2014

அதிகாலைக் குயில் கூவியதடா ..


அதிகாலைக் குயில் கூவியதடா
அன்பே நீ எழுந்துவிட்டாய் என்று
ஆலய மணியும் அழைத்ததடா
அதிகாலை பூசைக்கு நீ
வந்துவிட்டாய் என்று.. ..
இல்லை என்று சொல்லிவிடாதே
இன்றோடு முன்னூறு நாட்கள்
உன் எதிரே நான்,
வாழ்க்கைத் துணை வரம் கேட்டு..
 
Kavignar Valvai Suyen

பயிற்சிகள் பல செய்தேன் வெற்றி ..


பயிற்சிகள் பல செய்தேன் வெற்றி
பதக்கம் தருவதாகச் சொன்னார்
வாங்கவில்லை.. ..
படிக்கும் வயசானதால் பாடசாலை செல்கிறேன்
காலம் வரும் வாங்க, என் தந்தையை போல்
பட்டப் படிப்பின் பதக்கம்..

Kavignar Valvai Suyen

dimanche 12 octobre 2014

மன்னவா என் மன்னவா விழிச் சிறகிற்குள் ...


மன்னவா என் மன்னவா விழிச் சிறகிற்குள்
உன்னை வைத்திருந்தேன் - இமைத்
திரை விலக்கி நீ எங்கே சென்றாய்
போடா..போ..போ..
உன் அழகையா நான் காதலித்தேன்
அந்த இதயத்திடம் தானே
அன்பு செய்தேன்..
 
உன் பிரிவுத் தூரம் அதிகமாய் இருக்கலாம்
பிரித்துப் பார் உன் நெஞ்சை - அங்கே
இருப்பது என் இதயம் இங்கே துடிக்கிறது
உன் இதயம்..
அடையாள உண்ணா விரதம் இருக்கும்
என் இதயத்தை நீ அறிவாய்...
அதனால்த்தான் துடிக்கும் உன் இதயம்
என் காதில் சொல்கிறது ,
நீ வருவாய் என்று...
 
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...