mardi 7 octobre 2014

என், இதய வீட்டில் வாடகை இன்றி வந்தவளே ..


என், இதய வீட்டில் வாடகை இன்றி வந்தவளே
வாசல் திறப்பை எங்கே ஒளித்துவிட்டாய்
உன் இளமைப் பெட்டகத்தில் திருடியதை
என் இரு விழிக் கூட்டில் வைத்திருக்கிறேன்
வருமான வரிப் பரிசோதகியாய்
கனவிலும் என்னை எழுப்புகிறாய்
எடுக்கவோ கொடுக்கவோ
நான்கு விழிகளின் சங்கமம் தேவையடி
ஆதாரம் இன்றி என்னை அரஸ்ற் செய்ய
இயலுமா உன்னால் ?
சேதாரம் உண்டு, என்னை சிறை வைத்துவிடு
ஜாமீன் வேண்டாம் பத்தே மாதங்களில்
என் பெயர் சொல்லும் நம் பிள்ளை
உன்னை அம்மா என்றழைப்பதைக் கண்டே
குற்றம் அற்றவன் நான் என்று
என்னை விடுதலை செய்வாய் நீ..
 
Kavignar Valvai Suyen

lundi 6 octobre 2014

பாசக் குயிலே வாச மலரே ..


பாசக் குயிலே வாச மலரே
வாசலில் கோலங்களை
அழ கழகாய் தீட்டும் நீ
உன் வாழ்க்கை கோலத்தில் ஏன்
புகை மூட்டம் மூட்டுகிறாய்
நாளை வாடும் மலரா நீ
 
வாசல் கோலம் கலைந்து விட்டால்
புதிய கோலங்கள் போடலாம்
உன் வாழ்க்கைக் கோலம்
கலைந்துவிட்டால்.!
அழுதாலும் அது திரும்புவதில்லை ..
 
Kavignar Valvai Suyen

சாந்துப் பொட்டழகே மின்சார விழி அழகே ..


சாந்துப் பொட்டழகே மின்சார விழி அழகே
வளர் நிலா கேசங்களால் என்னை
வா வா என்றே அழைக்கிறாய் .. ..
தொலை தூர நிலாவே
உன்னால்
நலிகிறேன் மெலிகிறேன்
நீதான் யாருக்குச் சொந்தமடி .. ..
 
Kavignar Valvai Suyen

உலக ஆசிரியர் தின நல் வாழ்த்து ....


அறிவெனும் சுடர் எமக்குள் மிளிர்ந்திட
அகரம் முதல் ஆயகலைகள் அனைத்தும்
அள்ளித் தந்த ஆசிரியர்களே..
ஒரு நாள் ஏனும் உமை நினைந்து வணங்கிட
கிடைத்தற்கரிய திருநாளாம் இன் நாளில்
பணிவுடன் உமை நினைந்து தொழுது
நன்றி எனும் மலர்களை
தங்களின் திருப் பாதம்களில் தந்து
வணங்குகிறோம், நன்றி நன்றி நன்றி....
 
Kavignar Valvai Suyen

samedi 4 octobre 2014

அப்பன் ஆத்தா ஆரும் இன்றி குப்பையிலே நீ என் செல்லமே..


அப்பன் ஆத்தா ஆரும் இன்றி குப்பையிலே  நீ
என் செல்லமே..
நீ குற்றம் ஏதும் செய்யவில்லை 
கையேந்தி அலைகிறாய் வாழ்விலே..
 
எச்சில் இலை நீ அல்ல எச்சிக்களை காட்டேரிகள்
இச்சையிலே காமுற கருவாகி வந்தவளே
கலங்காதே என்பேனா..           
 
அற்றவராய் அனாதையாய் நீ பூப்பெய்து பூத்திருக்க
உத்தமராம் ஊர் நரிகள் எவர் எவரோ நடு நிசியில்
இச்சையொடு தின்கிறார் உன் சிற்றுடலை 
உன் வெற்றுடம்பில் வேதனைகள்
வெட்ட வெளிச் சோதனைகள்
கண்ணீரே வாழ்வாச்சு சென்னீரே சோறாச்சு
என் செய்வாய் நீ என் செல்லமே..
 
கள்ள நகை கயமை செய்து மன்னவராய் உலாவும்
சின்னவரே கேளீர், நீர் போடும் சட்டையிலே
எங்காச்சும் ஒளிந்திருக்கா
யாதி மத பேதம் எடுத்துரைப்பீர்
ஆயிரம் கிழிசல்கள் உனக்குள்ளே
அஞ்சாதே அடைத்துவிடு
நீயும் புனிதன் ஆகலாம்
சிந்தனையில் நல் நாத்து வைத்து
அன்பெனும் ஊற் றுறைத்து
பிஞ்சுகளை நெஞ்சிரித்தி நேசக் கரம் நீட்டு
பாசக் கிளை ஊஞ்சலிலே நேசக் குழந்தைகளின்
அன்னை தந்தையாகலாம் அன்பு செய்வீர்... 
 
Kavignar Valvai Suyen

jeudi 2 octobre 2014

என் விழி வளி தேடும் என்னுயிர்த் தோழா ..


என் விழி வளி தேடும் என்னுயிர்த் தோழா
இன்னுயிர் விண்ணுயர் காணும் முன்னே
விரைவில் நீ வந்துவிடு..
இடர் காட்டில் நான் இங்கே
வெளி நாட்டில் நீ அங்கே
முடியாத கவிதைக்கு
முற்றுப் புள்ளி ஏதடா
தெரு நாய்கள் கூட
விழி யாடை செய்கிறது என்னிடம்
துடப்பங் கட்டை கண்டதும்
தூரமாய் குலைக்கிறது
போதும் போதும் என்னவனே இடைவேளை
இளமைக் காலம் இது இனிமை காய்கிறது
பணம் தேடப் போனவனே
என் பிணம் வீழும் முன்னே
விரைவில் நீ வந்துவிடு...
 
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...