mercredi 25 avril 2018

சிகரம் ஏறும் சித்தெறும்பு நான் !!!


உன் விழிகளிரண்டும் என்னை ஏதேதோ செய்யுதடி - விண்
மீன்களும் உன்னெழில் கண்டே நிலை மாறி உதிருதடி

மூடாதே விழிகளை முகிலுக்கும் ஆணையிட்டேன்
அதற்குள்ளேதான் என்னை துலைத்தேன்
இடம் தந்த காகிதம் 
சுவையுற்று சொன்ன செய்தியில்
தொட்டெழுதிய பேனா தித்திப்புற்றிட
தேனீக்களுக்கும் வேர்த்தது மூக்கில்
எச்சம் ஏதாச்சும் எச்சி முத்தத்தில்
எடுத்துக் கொள்ளவே சண்டை இடுகின்றன    

படைத்தவன் பிரம்மன் அல்ல இங்கே
சுவை அறிந்தவனே பிரம்மனாகிறான்
சிகரம் ஏறும் சித்தெறும்பு நான்
இன்னும் அதன் அடிவாரத்திலேயே நிற்கிறேன்

பாவலர் வல்வை சுயேன்

mardi 17 avril 2018

ஈரடியும் ஓரடியாய்.....


சுட்டெரிக்கும் சூரியனை உற்ற நிலாவே
அவன் சுடரணைத்தே பருவம் பூத்தாய்
வண்ண நிலாவே...

ஓடோடி வந்த அலை உன் கால் நனைக்க
உனை கொஞ்சும் கொலுசுக் கேனடி கோபம்
இதயம் தொட்டு இரு விழி அழைத்து
ஈரடியும் ஓரடியாய் இணை கூட்டி போகிறாய்
ஆசை கொண்ட மணல் நண்டும் அன்பு முத்தம் தந்து
அழகுக் கோலம் போடுதடி ஆங்காங்கே உன் அடிச்சுவட்டில்

மலர் தூவி சாய்கிறேன் மலர் உன்னை சேர்கிறேன்
இலக்கை தொடுவது இதயம் என அறிந்தும்
இதுவரை தொடாமல் விட்டுருந்தேன்
தரையில் நெருப்பின்றி தண்ணீரில் எழுத்தின்றி
லேஸ்சர்ரினால் என்னை செதுக்கிவிட்டாய்
ஏஞ்சல் நீயடி என்னுயிர் நீ என்பேனா
எழுதாத எஸ் எம் எஸ்சில்
என்னை நீ கிள்ளுகிறாய்
உன்னை நான் தொடுவதற்கும்
மயிலிடம்தான் இறகெடுத்தேன்
சரீரமோ சாகித்தியமோ
ஒன்றே ஒன்றானது இருவருக்கும்
உன் ஈர்ப்பு விழிகளுக்குள் ஈர் துளியாய் வீழ்ந்துவிட்டேன்
இமைகளால் தாழ் பூட்டி சிறையிட்டு சென்றுவிடு....
Kavignar Valvai Suyen
செல்பிக்குள்ளே தேட வைத்தாய் தேனே தேனே
நீ இருந்தால் என்னோடு நிலா காலம்தான்
நீ இன்றி போனால் இருள் காலம்தான்
சங்கமம் நின்றாள சதி பதியாவோமே
சந்தோசம் வென்றாள சலனங்கள் கொல்வோமே

பாவலர் வல்வை சுயேன்

lundi 16 avril 2018

ஏதறிவாய் ஜீவனே !!!


மாயை சூடி நிற்கும்  வர்ண வாழ்வே
அன்பு நிலையும் அறுவடை சாவாக
எழுகின்றோம் வீழ்கின்றோம்
எண்ணில்லை

கற்களை மிதித்து முகம் அறியா
முற்களில் காயமுற்றும்
ஆசை தூறல் அன்பை கொன்று
அழிந்தே வீழுது கூடிங்கே

கட்டை எரிந்திட கல்லறைகளும் சிரிக்க
மரண உடல் மரமாகுமா மண்ணில்
புழுவாகி பூடாகி புழுத்தலில் ஊன் உருக
இனிப்பா கசப்பா இகபர வாழ்வு
எழுதிய புத்தகம் எங்கே
தேடுகிறேன் எட்டவில்லை !

பாவலர் வல்வை சுயேன்

vendredi 13 avril 2018

கரிசக் காட்டு குயிலே கூவு !!!


என்னுயிரான வேளாண்மை வயலே
உறவில் அன்பே கொல்லாமை விதைப்பு
அறுவடை காலம் அருகிருக்கு
அதற்கு நீதான் துணை எனக்கு
கரிசக் காட்டு குயிலே கூவு
வாழ்வோம் வா பசுந் தழிரே
பருவ எழிலில் பனித்துளி பொழிகிறது

பாவலர் வல்வை சுயேன்

jeudi 12 avril 2018

குறிஞ்சி மலரே கலங்காதே !!!


கண்ணிலே என்ன ஈரம் கனவெல்லாம் காணாத்தூரம்
நெஞ்சிலே என்ன பாரம் இது வஞ்கர் வாழும் காலம்
எண்ணிலா கொடு நிலை அள்ளியிடும் கொடியவரிங்கே
ஏது செய்வேன் எத்தனை தலையினை கொய்வேன்
இன்பங்கள் இழந்து இதயங்கள் இரும்பாச்சே

உயர் நிலை வித்தகரென உலா இங்கு வருகிறார்
செத்தவர் பிணங்களில் நின்றே உணவுண்கிறார்
உயர் நிலை உண்மையெலாம் ஆழ் குழியில் மூழ்கிதடி
நீலம் பூசிய நரிகளுக்கே தாழம் பூக்களும் சாட்சியடி
நித்திரை இமைப்பொழுதில் நீசர் விழி பறிக்கிறார்
பத்தரை பசும் பொன்னென்றே தமை
நா கூசா பொய் சொல்கிறார்

நெரிஞ்சுக் காடே நெஞ்சமடி அரிவாளே இவர் விழிகளடி
குறிஞ்சி மலரே கலங்காதே அழிவொன்று அருகிருக்கு
ஆழிப்பேரலை எழுந்தேனும் அள்ளி உண்ணும்
இக் கலியுகத்தை

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...