உதய வாழ்வென்றே உளமாற நினைந்திருந்தேன்
அந்திமம் என்றே அஸ்தமனத்தில்
தள்ளிவிட்டார்
வானவில் வந்து அழைக்கின்றது
வர்ண ஆடைகள் பறிக்கப் பட்டன
பொட்டோடு குழலாடி பூவோடு வாழ்ந்திருந்தேன்
பொழுதாக வில்லை பொழுதாகி போச்சென்றார்
பதி பிரிந்தால் விதியெனச் சொல்லி
மலர்ந்தும் மலராமல் உலர்ந்தேனா
சுமங்கலியாம் அவள்
அமங்கலி எங்கிறாள் என்னை
தாவாரச் சாரல்கள்
வந்து வந்து நனைக்கின்றன
துளிர்க்கிறேன் துவள்கிறேன் இளமை ஊஞ்சல்
இன்னும் இறக்கவில்லை
யன்னல் ஓர நிலா வந்து
என் முகம் காண்கயில்
ஒரு வாசகம் பேசத் துடிக்கிறேன்
வெள்ளைப் புடவை
தந்து வேர் அறுத்தோர் அருகே
தூறலே நீ ஏன்
இன்னும் மண்ணுக்கு வருகிறாய்
மலர்களுக்
கென்றோர் மனம் மறுக்கப் பட்ட உலகிது
விண்ணுலகம்
அழைத்துப் போ நானும் வாறேன்
பாவலர் வல்வை
சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...