இலக்கங்களை கூட்டிக்
கழித்து எழுதிப் பார்த்தேன் - உன்
இதயத்திற் கென்றொர்
தொலை பேசி எண் இல்லை
வாசலிலே நீ போடும்
வண்ணக் கோலங்களில்
உன் விரல்கள்
எங்கெங்கோ தீன்ட
மறந்தும் அது என்னை
தீன்டாதா என
என் பருவ ஏக்கங்கள்
மனதை கொய்ய
வாடை வந்து வரவேற்றது
என்னையும் உன்
வாசலுக்கு !
மதனாய் நானும்
ரதியாய் நீயும் மணவறையில்
இமைக் கதவின் வழியே
இதய அறைக்கே
அழைத்துச் சென்றாய்
என்னை நீ
கவிப் பாயில் விடியல் பனியிலும்
இலக்கணங்கள் எழுதி எழுதி சித்தி பெற்றோம்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...