பூப்
பூவாய் பூப் பூவாய் பூமியிலே பனிப் பூக்கள்
அதை
கண்டு விழி சிலிற்க உவகை கொண்டது
என் மென்
மனசு !
சில்லென்ற
வருடலில் சிரு புருவம் உயர்த்தி
பாதம்
தொட்ட பனிப் பூக்களை
முத்தமிட
குனிந்தேன்
காய்ந்த வடுக்களாய் உதடுகளில் கீறல்கள்
என்ன மாயமோ
அறியேன்
சரசம்
கொள்ளவில்லை
உரசி
வீழ்ந்தன பனித்துகில்கள்
சுவர்க்க
புரியல்ல குளிர் தேசம்
குதறித்
தின்கிறது உயிரை...
பாவலர்
வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...